எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
துரோணர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
துரோணர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 15 அக்டோபர், 2019

துரோணர் சந்தித்த சோதனைகள். தினமலர் சிறுவர்மலர் - 37.

துரோணர் சந்தித்த சோதனைகள்.
”வில்லுக்கொரு விஜயன்” என்று நாம் அர்ஜுனன் பற்றிப் பெருமையாகக் கூறுகிறோம். இயற்கையாகவே பாண்டவரிலும் கௌரவரிலும் அவன் திறமையானவனாக இருந்தாலும் அவனை இன்னும் ஜொலிக்கச் செய்ய துரோணர் சில சோதனைகளைச் சந்திக்க வேண்டி வந்தது. அதுமட்டுமல்ல. அவர் வாழ்வே சோதனை மயம்தான் அது என்ன என்று பார்போம் குழந்தைகளே.
பரத்துவாஜ முனிவரின் புதல்வர் துரோணர். அவரின் தாய் பெயர் கிருதசி. துரோணருக்கும் கிருபாசாரியாரின் தங்கை கிருபிக்கும் திருமணம் முடிந்து அஸ்வத்தாமன் என்ற அழகான குழந்தை பிறந்தது. அவன் சிரஞ்சீவியாக இருப்பான் என்று ஈசனிடம் வரம் பெற்றுப் பிறந்தவன். துரோணர் பரசுராமரிடம் வில் வித்தை பயின்றவர். என்ன இருந்து என்ன துரோணரை வறுமை வாட்டியது.
சிறு குழந்தையான அஸ்வத்தாமன் பாலுக்கு அழும்போதெல்லாம் சாதக்கஞ்சியைப் பால் என்று புகட்டும் துயரத்துக்கு ஆளானாள் கிருபி. அப்போதுதான் துரோணருக்குத் தன் குருகுல நண்பரான துருபதன் என்ற பாஞ்சால தேச அரசன் தான் பட்டத்துக்கு வந்ததும் தன் நாட்டில் பாதியைத் தருவதாக நட்புமுறையில் சொன்ன வாக்கு நினைவு வந்தது.

திங்கள், 8 ஜூலை, 2019

ஏகலைவன் கொடுத்த குருதட்சணை. தினமலர் சிறுவர்மலர் - 22.

ஏகலைவன் கொடுத்த குருதட்சணை
ஒரு வித்தையைக் கற்றுக் கொண்டால் கற்றுக் கொடுத்த ஆசிரியருக்கு தட்சணை கொடுப்பது அக்காலத்திய வழக்கம். ஆனால் மானசீகமாக ஒருவரை குருவாக வரித்து ஒருவன் ஒரு வித்தையைக் கற்றுக் கொண்டான். அந்த மானசீக குரு கேட்டதற்காக தன் கட்டைவிரலையே கொடுத்தான் அவன். அப்படிப்பட்ட வீரன் யார் என்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
மகதநாட்டைச் சேர்ந்த வேடுவ மன்னன் ஏகலைவன். அவன் தந்தை அடிக்கடி வேட்டைக்குச் செல்வார். ஒருமுறை தானும் வருவதாகக் கூறிச் சென்றான் ஏகலைவன். அடர்ந்த காட்டில் துஷ்ட விலங்குகளின் நடமாட்டமும் அச்சுறுத்தும் ஒலியும் அதிகமாக இருந்தது.
சிறுவனாக இருந்தாலும் பயப்படாமல் தந்தையுடன் சென்றான் ஏகலைவன். அவர் விலங்குகளின் ஒலியை வைத்தே அவை எங்கே, எவ்வளவு தூரத்தில் இருக்கின்றன என்பதைக் கண்டுபிடித்து வில்லில் அம்பு பூட்டி எய்து வேட்டையாடினார். பிரமிப்பின் உச்சத்தில் சென்ற ஏகலைவன் கேட்டான், “ தந்தையே எப்படி நீங்கள் விலங்குகளை நேரடியாகக் காணாமல் ஒலியை வைத்தே வேட்டையாடுகிறீர்கள். எனக்கும் கற்றுத்தாருங்கள். “

வியாழன், 27 ஜூன், 2019

அஸ்வத்தாமன் பெற்ற அஸ்திரங்கள். தினமலர் சிறுவர்மலர் - 20.

அஸ்வத்தாமன் பெற்ற அஸ்திரங்கள்.
ஒருவனுக்கு பிரம்மா விஷ்ணு சிவன் ஆகிய மும்மூர்த்திகள் அஸ்திரம் கொடுத்தும் அதைக் கொண்டு அவன் ஜெயிக்கமுடியவில்லை. ஏனெனில் அவற்றை அவன் நல்லனவற்றுக்குப் பயன்படுத்தவில்லை. தீயோரை ஆதரிக்கப் பயன்படுத்தினான். அதனால் அவை செயலிழந்தன. மும்மூர்த்திகளிடம் அந்த அஸ்திரங்களைப் பெற்ற பெருமைக்குரியவன் அஸ்வத்தாமன். அவனைப் பற்றியும் அந்த அஸ்திரங்கள் பற்றியும் பார்ப்போம் குழந்தைகளே.
துரோணர் கிருபி ஆகியோரின் மைந்தர் அஸ்வத்தாமன்.  இவன் சிறுகுழந்தையாயிருந்தபோது மிகுந்த வறுமையில்தான் வளர்ந்துவந்தான். துரோணர் கௌரவர்கள் பாண்டவர்களின் ஆசியராக ஆனபின்தான் ஓரளவு செல்வச்செழிப்பை எட்ட முடிந்தது. அதிலும் துரோணர் பாண்டவர்களில் அர்ஜுனனுக்கு மட்டுமே கவனம் செலுத்தி எல்லா அஸ்திர சஸ்திரங்களையும் கற்றுக் கொடுத்து வந்தார்.
இருந்தும் தந்தையும் தனயனும் ஒருவர் மேல் ஒருவர் மிக்க பாசத்தோடுதான் வாழ்ந்து வந்தார்கள். ஏனெனில் துரோணர் பல்லாண்டுகள் சிவனை நோக்கித் தவம் செய்தபின் பிறந்த பிள்ளைதான் அஸ்வத்தாமன். எனவே அஸ்வத்தாமனுக்கு சிரஞ்சீவித்தன்மை வழங்கும்படி கேட்டதால் ஈசனும் அஸ்வத்தாமனுக்கு அமரத்தன்மை வழங்கினார். அதனால் அவருக்கு இறப்பு என்பதே கிடையாது.

புதன், 28 செப்டம்பர், 2016

சிறுவர் நூல்கள் – 9. பகுதி – 3. புத்திக் கூர்மைக்கான நூல்கள்.



சிறுவர் நூல்கள் – 9. பகுதி – 3.

சிறுவர் நூல்கள் – 9. பகுதி – 3. புத்திக் கூர்மைக்கான நூல்கள்

இந்தப் பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நூல்கள் சிறார்களுக்குப்புத்திக் கூர்மை கொடுக்கும் நூல்கள். 


பஞ்ச தந்திரக் கதைகள்

 பள்ளி ஆசிரியர்கள் எழுதும் சிறுவர் நூல்கள் சிறப்பானவையாக அமைகின்றன. ருக்மணி சேசஷாயி அம்மா அவர்கள் கூட ஒரு ஆசிரியைதான். அல்லும் பகலும் சிறுவர்களின் இயல்புகளையும் அவர்களின் குடும்ப பொருளாதார கஷ்டங்களையும் பக்கம் இருந்து பார்க்கும் வாய்ப்புப் பெற்றவர் என்பதால் அவர்கள் எழுதும் சிறார் கதைகளும் சிறப்பானவையாகவே இருக்கும்.

Related Posts Plugin for WordPress, Blogger...