எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
காதல் பொதுமறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காதல் பொதுமறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 6 ஜூன், 2019

காதல் பொதுமறை – ஒருபார்வை.


காதல் பொதுமறை – ஒருபார்வை.

அமீரகத்தில் தமிழ்த்தேர் உலாவரக் காரணமானவர் காவிரிமைந்தன். கவியரசு கண்ணதாசன் பற்றி இரு நூல்கள் வெளியிட்டிருக்கிறார். இவரது நூலான காதல் பொதுமறை காதலர் தினத்தன்று எனது காதல் வனம் நூலோடு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புக் பேலஸில் வெளியிடப்பட்டது.

இவர் எழுதிய நெறிபிறழாக் காதல் கடிதங்களின் /கட்டுரைகள் /கவிதைகளின் தொகுப்பு இந்நூல். காதல் வேதம் என்பதால் பொதுமறை எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்நூலில் 143 கடிதங்கள் / கட்டுரைகள் இடம்பெற்றிருக்கின்றன. அதென்ன 143 என்ற கணக்கு .  அது I LOVE YOU வின் கணக்காக இருக்கலாம். எல்லாம் ஒரு யூகம்தான் J