எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 21 ஜூன், 2019

பஸவங்குடி - பார்க்குகளா , ஃபிட்னெஸ் செண்டர்களா..

”குர்பத் குண்டப்பா ஷாமண்ணா” 

இவரது தோற்றம்  ஜூலை 1864. மறைவு 12. 11. 1936. அப்போதிலிருந்தே இந்த இடம் குழந்தைகள் பூங்காவாக இருக்கிறது போலும்.































பஸவங்குடி - பார்க்குகளா , ஃபிட்னெஸ் செண்டர்களா..

 பஸவங்குடியில் எங்கள் வீட்டின் இருபுறமும் நூற்றைம்பது அடி தூரத்தில் ஒன்றும் ஐநூறு அடி தூரத்தில் ஒன்றுமாக இரு பார்க்குகள் உள்ளன. இந்த பார்க்குகளில் ஒரு விசேஷம் என்னவெனில் இரண்டுமே ஜிம் போல் அனைத்து எக்விப்மெண்ட்ஸுடன் இருக்கின்றன.

ஃபிட்னெஸ் செண்டர்களுக்கெல்லாம் மாதாமாதம் ஆயிரக்கணக்கில் செலவழிக்க வேண்டாம். இங்கே உள்ள எக்விப்மெண்ட்ஸில் பயிற்சி செய்தால் போதும்.  பெங்களூரு மாநகராட்சி மக்கள் நலனில் அக்கறை எடுத்து பொதுமக்களுக்கு இம்மாதிரி வசதிகள் செய்து கொடுத்திருப்பதற்கு முதலில் பாராட்டுக்கள்.

தண்ணீர் கூட கேன் வாட்டர் வாங்க வேண்டாம். நேரடியாக வீட்டில் வரும் தண்ணீரே குடிதண்ணீர்தான். இல்லாவிட்டால் இங்கே இருக்கும் இந்த சில்ட்ரன்ஸ் பார்க்கில் 5 ரூபாய் கொடுத்து ஒரு கேன் தண்ணீர் பிடித்துக் கொள்ளலாம். இந்தபார்க்கை குழந்தைகள் பூங்காவுக்காக வழங்கிய பெருமனிதர் ”குர்பத் குண்டப்பா ஷாமண்ணா” அவர்களுக்கு வியப்பு கலந்த நன்றிகள் . !!!

இவரது தோற்றம்  ஜூலை 1864. மறைவு 12. 11. 1936. அப்போதிலிருந்தே இந்த இடம் குழந்தைகள் பூங்காவாக இருக்கிறது போலும்.

இம்மாதிரியான அடுத்தடுத்து அமைந்த ஐந்து நிலை சறுக்கு மரங்களை நான் இங்கேதான் முதன்முதலில் பார்க்கிறேன். !!!  ஆண்களும் கைப்பயிற்சியில். பெண் ஒருவர் கால் பயிற்சிக்காக சைக்கிள் ஓட்டுகிறார்.

ஏறி இறங்கும் பயிற்சிக்கான எக்விப்மெண்ட்ஸ். காலுக்குப் பயிற்சி செய்யும் பெண்கள். ரொட்டேஷனல் டிஸ்க். கைக்குப் பயிற்சி செய்யும் பெண்.

இப்பூங்காக்களில் பாதிக்குப் பாதிப்பேர் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். செல்ஃபோனையே யாரும் தொடுவதில்லை. நிஜமான வாழ்க்கையை ஆரோக்கியம் பேணி வாழ்கிறார்கள்.

இது இன்னொரு பூங்கா. இங்கே இந்த மத்தியில் அமைந்த இந்தக் குடில் வெகு அழகு. இங்கே பார்க் ஒரு சுற்றின் மேற்புறம் இன்னும் சில படிகள் ஏறினால் அங்கே இம்மாதிரி சறுக்கு மரங்களும் சில காதலர்களும் காணப்படுவார்கள். :)

இங்கேயும் ஃபிட்னெஸ் இயந்திரங்கள். கைக்கு, காலுக்கு, தோளுக்கு என பயிற்சிகள். மூச்சு சீராகும். இரத்த ஓட்டம் சுத்தமாகும்.

நிறைய மரங்கள் இருப்பதால் ஆக்ஸிஜனும் அதிகம். இதனால்தான் நான் பெங்களூரை நேசிக்கிறேன்.

 நடக்க நடக்க நீளலாம். :) நல்ல ஓங்குதாங்கான மரங்கள். எங்கும் பசுமை எதிலும் பசுமை. ஆலம் விழுதுகள் போல் ஆரோக்கியம் பேணுகிறார்கள்.

அழகான குடிலைப் பார்க்கின் வெளியிலிருந்து ஒருமுறை க்ளிக்கினேன். சரி வாங்க நடக்கலாம். அப்புறம் ஓடலாம். பின் உக்கார்ந்து கதைக்கலாம். :) 

4 கருத்துகள்:

  1. இது போல KANTERAVA STADIUM மற்றும் koramangala சுற்றி உள்ள அனைத்து பார்க் மற்றும் lake களில் இருக்கும்...

    அழகிய காட்சிகள் ...

    பதிலளிநீக்கு
  2. அழகான பூங்கா.

    தில்லியிலும் பல பூங்காக்களில் இந்த மாதிரி உடற்பயிற்சி சாதனங்களை வைத்திருக்கிறார்கள். பயன்படுத்தும் நபர்கள் நிறையவே உண்டு.

    பதிலளிநீக்கு
  3. இங்கு எங்கள்வீட்டருகிலும் நடைபயிலு பார்க்குகளில் இம்மாதிரி உண்டு ஆனால் அவற்றில் பல சேதமடைந்து விட்டது

    பதிலளிநீக்கு
  4. புது தகவலுக்கு நன்றி அனு

    தகவலுக்கு நன்றி வெங்கட் சகோ

    நன்றி பாலா சார்

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...