இப்படியும் சாதிக்கலாம் என்ற என்னுடைய 26 ஆவது நூல் சென்னையில் அம்பத்தூரில் ஜூன் 29 அன்று வெளியிடப்பட்டது.
எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
புதன், 30 அக்டோபர், 2024
திங்கள், 19 ஆகஸ்ட், 2024
இப்படியும் சாதிக்கலாம் - முன்னுரை
இப்படியும் சாதிக்கலாம் என்ற என்னுடைய 26 வது நூலின் முன்னுரை.
முன்னுரை
சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே வலசைக்குக் கொண்டுவிக்கச் சென்றவர்கள் நம் மக்கள். முன்னர் செழித்து வந்த தனவணிகம் 1977 க்குப் பின்னர் பேப்பர், எலக்ட்ரிக், மருந்துக் கடைகள் என மாறியது. 1980 களில் இருந்து வங்கிப் பணிக்கும், 2000 ஆண்டுகளில் இருந்து மென்பொறியாளர் பணிக்கும் செல்ல ஆரம்பித்தனர் நம் இளையர்கள். இன்றும் வணிகம்தான் நம் தொழில் என்று விடாமுயற்சியோடும் தொடர் அர்ப்பணிப்போடும் ஈடுபட்டு வருபவர்கள் பலரும் உண்டு. அவர்களில் தொழில் முனைவோராக, வணிகத்தில் வெற்றிக்கொடி நாட்டும் வனிதையராக, கல்வி நிலைய நிறுவனர்களாக, பேருந்து உரிமையாளர்களாக, கட்டுமானத் தொழில் வல்லுநர்களாக நம் ஆச்சிகளும் அடக்கம். எந்த இடையூறிலும் இன்னல்களிலும் தங்கள் பணியைத் தொடரும் அவர்களின் தன்னம்பிக்கை என்னைப் பிரமிக்க வைக்கின்றது. அவர்கள் அனைவரின் உழைப்பையும் விதந்தோதும் விதத்தில் நான் எடுத்த பேட்டியும் நேர்காணல்களுமாகப் ”பெண்மையைப் போற்றுவோம்” என்கின்ற இத்தொகுப்பு வெளியாகின்றது.
செவ்வாய், 26 டிசம்பர், 2017
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நூல் வெளியீட்டு காணொளி.
காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில் எங்கள் நூல் வெளியீடு.
திங்கள், 27 நவம்பர், 2017
திங்கள், 13 ஜூன், 2016
சிவப்புப் பட்டுக் கயிறு -நூல் வெளியிடு புகைப்படங்கள்.
தென்னக ரயில்வேயில் உயர் பொறுப்பில் இருக்கும் திரு . இளங்கோவன் ஐஆர் எஸ் அவர்களும், சாஸ்த்ரி பவனில் உயர் பொறுப்பில் இருக்கும் திருமதி கீதா இளங்கோவன் அவர்களும் வெளியிட, இயக்குநர் திரு. ஐ எஸ் ஆர் செல்வகுமார் அவர்களும், என் அன்புத் தங்கை புவனேஸ்வரி மணிகண்டன் அவர்களும் பெற்றுக்கொண்டார்கள்.
எனது தம்பி அருணாசலம் ,அவரின் துணைவியார் இந்து, எனது கணவர் , டிஸ்கவரி புத்தக நிலைய வேடியப்பன் சகோ , சஞ்சய் சகோ ஆகியோர் உடனிருக்க, நான் மிகவும் மதிக்கும் வலைப்பதிவர்கள் சுப்பு தாத்தா என்ற சூர்யா சார், கணேஷ் பாலா சகோ, கார்த்திக் சகோ ( ஸ்கூல் பையன் ), பத்ரிக்கையாளர் கவிமணி, இளமதி பத்மா, பாரு குமார், அனிதா ராஜ், கவிதா ரவீந்திரன், மணிவண்ணன் பார்த்தசாரதி, விஜய் மகேந்திரன், கமலி பன்னீர் செல்வம், நாச்சியாள் சுகந்தி, உமா மோகன், லதா அருணாசலம், வெங்கட் சகோ, காஞ்சிபுரம் தியாகராஜன், கோபி கண்ணதாசன், கவிஞர் தஞ்சை எழிலன், மதுமிதா ராஜா, ஆகியோர் கலந்து கொண்டும் என் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டும் சிறப்பித்தார்கள்.
முக்கியமான தருணத்தில் என் காமிராவும் செல்ஃபோனும் காலை வாரி விட தோழி லதா அருணாசலமும், மணிவண்ணன் பார்த்தசாரதி சாரும், வெங்கட் சகோவும் புத்தக வெளியீட்டைப் படம் எடுத்து அனுப்பி உதவினார்கள். நன்றியும் அன்பும் வாழ்த்துகளும் அனைவருக்கும். என் மதிப்பிற்குரிய இளங்கோ சாரும், தோழி பத்மா இளங்கோ அவர்களும் கலந்து கொள்ளவில்லை என்ற குறையைத் தவிர வேறொன்றும் இல்லை. இரு நாட்களாக உடல் நலக் குறைவினால் நிகழ்வைப் பதிவேற்ற இயலவில்லை. இப்போதுதான் நேரம் கிடைத்தது.நன்றி மக்காஸ்.
புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளேன்.
வெள்ளி, 10 ஜூன், 2016
செவ்வாய், 28 ஜனவரி, 2014
புத்தகத் திருவிழாவில் அன்ன பட்சி வெளியீடு
சனி, 18 ஜனவரி, 2014
அன்ன பட்சி வெளியீடு ( அழைப்பிதழ் )
இந்த ஈவண்டில் போட்டபடி நாளை நாஞ்சில் நாடன் அவர்கள் கலந்து கொள்ள இயலாத காரணத்தால் இன்றே வெளியிடும்படிக் கேட்டுக் கொண்டேன். எனவே நாஞ்சில் நாடன் அவர்கள், மோகனரங்கன் அவர்கள், வாசுதேவன் அவர்கள், பரமேசுவரி அவர்கள், சுபாஷிணி அவர்கள் வெளியிட்டு நெகிழ வைத்து விட்டார்கள். நன்றியும் அன்பும் இவர்களுக்கு.
செவ்வாய், 12 பிப்ரவரி, 2013
சாதனை அரசிகள் புத்தக வெளியீட்டில் திரு பாரதி மணி அவர்களின் உரை..
சாதனை அரசிகள் புத்தகம் ஜனவரி 8 அன்று ( பபாசியில் ) டிஸ்கவரி புத்தக நிலைய ஸ்டாலில் வெளியிடப்பட்டது. என் கணவர் வெளியிட முதல் காப்பியை நடிகர் மற்றும் பெருமதிப்பிற்குரிய நண்பர் திரு . பாரதி மணி அவர்களும் , இரண்டாம் காப்பியை கிரிக்கெட்டர் திருஷ்காமினியும் பெற்றுக் கொண்டார்கள்.






