எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
26 வது நூல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
26 வது நூல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 30 அக்டோபர், 2024

சனி, 5 அக்டோபர், 2024

இப்படியும் சாதிக்கலாம் நூலுக்கு வாழ்த்துக்கள்.

எனது 26 ஆவது நூலான இப்படியும் சாதிக்கலாம் என்ற நூல் அம்பத்தூர் மகளிர் சங்கமும், நகரத்தார் எழுத்தாளர் சங்கமும் இணைந்து 29.6.2024 அன்று நடத்திய விழாவில் வெளியிடப்பட்டது. அந்நூலுக்கு வாட்ஸப்பில் அனைவரும் வழங்கிய வாழ்த்துரையை இங்கே பகிர்வதில் மகிழ்கிறேன். 



**Happy to share about my 26 th book release in Ambattur magalir sanga manadu.

திங்கள், 19 ஆகஸ்ட், 2024

இப்படியும் சாதிக்கலாம் - முன்னுரை

 இப்படியும் சாதிக்கலாம் என்ற என்னுடைய 26 வது நூலின் முன்னுரை.

முன்னுரை


சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே வலசைக்குக் கொண்டுவிக்கச் சென்றவர்கள் நம் மக்கள். முன்னர் செழித்து வந்த தனவணிகம் 1977 க்குப் பின்னர் பேப்பர், எலக்ட்ரிக், மருந்துக் கடைகள் என மாறியது. 1980 களில் இருந்து வங்கிப் பணிக்கும், 2000 ஆண்டுகளில் இருந்து மென்பொறியாளர் பணிக்கும் செல்ல ஆரம்பித்தனர் நம் இளையர்கள். இன்றும் வணிகம்தான் நம் தொழில் என்று விடாமுயற்சியோடும் தொடர் அர்ப்பணிப்போடும் ஈடுபட்டு வருபவர்கள் பலரும் உண்டு. அவர்களில் தொழில் முனைவோராக, வணிகத்தில் வெற்றிக்கொடி நாட்டும் வனிதையராக, கல்வி நிலைய நிறுவனர்களாக, பேருந்து உரிமையாளர்களாக, கட்டுமானத் தொழில் வல்லுநர்களாக நம் ஆச்சிகளும் அடக்கம். எந்த இடையூறிலும் இன்னல்களிலும் தங்கள் பணியைத் தொடரும் அவர்களின் தன்னம்பிக்கை என்னைப் பிரமிக்க வைக்கின்றது. அவர்கள் அனைவரின் உழைப்பையும் விதந்தோதும் விதத்தில் நான் எடுத்த பேட்டியும் நேர்காணல்களுமாகப் ”பெண்மையைப் போற்றுவோம்” என்கின்ற இத்தொகுப்பு வெளியாகின்றது.

Related Posts Plugin for WordPress, Blogger...