எனது பதிநான்கு நூல்கள்

சனி, 18 ஜனவரி, 2014

அன்ன பட்சி வெளியீடு ( அழைப்பிதழ் )

நாளைசென்னை புத்தகத் திருவிழாவில் என்னுடைய நூல் அன்ன பட்சி அகநாழிகை பதிப்பகத்தின் அரங்கு எண் 666, 667 இல் வெளியிடப்படுகிறது.

இந்த ஈவண்டில் போட்டபடி நாளை நாஞ்சில் நாடன் அவர்கள் கலந்து கொள்ள இயலாத காரணத்தால் இன்றே வெளியிடும்படிக் கேட்டுக் கொண்டேன். எனவே நாஞ்சில் நாடன் அவர்கள், மோகனரங்கன் அவர்கள், வாசுதேவன் அவர்கள், பரமேசுவரி அவர்கள், சுபாஷிணி அவர்கள் வெளியிட்டு நெகிழ வைத்து விட்டார்கள். நன்றியும் அன்பும் இவர்களுக்கு.


நாளைதான் நான் கலந்து கொள்ள இயலும் என்பதால் நாளை மாலை இதே அரங்கு எண் 666. 667 இல் அகநாழிகை பொன் வாசுதேவன் அவர்கள் வெளியிட, லேடீஸ் ஸ்பெஷல் ஆசிரியை திருமதி கிரிஜா ராகவன் அவர்கள் பெற்றுக் கொள்வார்கள்.   அனைவரும் கட்டாயம் வந்துடுங்க.

இந்தக் கவிதைத் தொகுப்பைக் கொண்டுவருவதில் அகநாழிகை பொன் வாசுதேவனின் பங்குதான் 90%. நான் வெறும் 10 % தான். கவிதைகளை மட்டும் அனுப்பினேன்.

அவற்றில் சிறந்ததைத் தேர்ந்தெடுத்து அழகாக வடிவமைத்து அருமையான அட்டைப் படம் தேர்ந்தெடுத்தது எல்லாமே அவர் உழைப்புத்தான்.

ஒற்றைப் பைசாகூட வாங்கிக் கொள்ளாமல் தானே புத்தகமாக்கி வெளியிடுகிறார். நன்றியும் அன்பும் தேவன்.

இந்தத் தருணத்தில் இன்னும் நால்வரைக் குறிப்பிட்டாக வேண்டும். முன்னுரை எழுதித் தந்த சுசீலாம்மா, அழகான அட்டைப்பட ஓவியம் கொடுத்த செல்விலெக்ஷ்மணன் , அதைப் புகைப்படமாக்கித் தந்த ராமலெக்ஷ்மி. மேலும் இந்த மின் அழைப்பிதழை வடிவமைத்துத் தந்த சுகுமார் சுவாமிநாதன்.

இவர்களுக்கு எல்லாம் என்னுடைய அன்பும் வாழ்த்தும். நன்றிகளும்.

கட்டாயம் நாளை மாலை சென்னைப் புத்தகத் திருவிழாவில் அரங்கு எண். 666. 667 இல் சந்திப்போம். வந்திருங்க மக்காஸ்.

10 கருத்துகள்:

 1. மிக்க மகிழ்ச்சி சகோதரி... உதவி செய்த அனைவருக்கும், தங்களுக்கும் வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 2. ரொம்ந மகீழ்னா இருக்கு தேனக்கா புத்தகத்தையும் வெளியீட்டு நிகழ்வையும் பாக்கறப்ப. அவசியம் நான் அங்க இருப்பேன்!

  பதிலளிநீக்கு
 3. அட, அதுக்குள்ள வெளியிட்டாச்சா... நாளை மாலை புத்தகக் கண்காட்சியில் சந்திக்கலாம்....

  பதிலளிநீக்கு
 4. மிக்க மகிழ்ச்சி அக்கா....
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 5. மிக்க மகிழ்ச்சி தேனு.வாழ்த்துகக்ள்.

  பதிலளிநீக்கு
 6. ரொம்ப நன்றி தனபாலன் சகோ

  நன்றி கணேஷ்

  நன்றி ஸ்கூல் பையன்

  நன்றி கோமதி மேடம்

  நன்றி குமார்

  நன்றி ஸாதிகா

  நன்றி அப்பாத்துரை சார்

  நன்றி ஆதி.

  பதிலளிநீக்கு
 7. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...