எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 31 ஜனவரி, 2014

நம்மாழ்வார் அவர் நம்மாழ்வார்.

இயற்கையாய்ச் சிரிக்கும் பூப்போல உன் சிரிப்பு
இழந்து தவிக்குதய்யா உரம்போட்ட கத்திரிப்பூ.

.உரமடிச்சு உரமடிச்சு உரமிழந்த தென்னை
காய்க்காமல் கருக வைக்குதய்யா என்னை.

மரபணு மாத்தி மரபையும்தான் கத்தரிச்சோம்
மடமை செயலையெல்லாம் மகான் நீ எச்சரிச்சும்.


மண்ணுழப்பி கொன்னு போட்டு மரங்களெல்லாம் நொந்து போச்சு.
விவ ’சாய’ நீருபட்டு வெள்ளாமை வெந்து போச்சு

பாத்திக்குள் உரமிட்டு கழனியைப் பாளம் போட்டோம்
பாழும் குடலை ரொப்ப  எலி பிடிக்கும் நிலைக்காளானோம்.

தங்கமுட்டை வாத்தறுக்கும் நிலைகெட்ட மனிதருக்கும்
தங்க மகன் நீ சொன்ன தவ வாக்குப் புரிஞ்சிருக்கும்.

மண்ணை நீ நேசிச்சே மனம் மகிழும் தாயாத்தான்.
கண் கசியப்  பூசிக்குதே அதுவும் உன்னை சேயாத்தான்.

பசுமையை விதைச்சுப் போனே பக்குவமாய் சொல்லிப் போனே
பாவி மக்கா நாங்களுந்தான் பின்பற்றப் பார்க்குறமே.

மக்களுக்கு மந்திரஉபதேசம் செய்து போனார் நம்மாழ்வார்.
நீ மக்களுக்கு மண் உபதேசம் சொல்லிப்போன நம்மாழ்வார்.

புரட்சி ஏதும் வேணாம். புதுமை ஏதும் வேணாம்.
நீ புதைஞ்ச மண்ணிலே உரமாகி விளைஞ்சு வா.

நீ விதைச்சுப் போன விதை விளைஞ்சு காடாகும்.
நேயமுள்ள உன்  சிரிப்பாய்ப் பூமியெல்லாம் பூப்பூக்கும்.


5 கருத்துகள்:

  1. உண்மையான வரிகள்...

    ஒவ்வொரு வரியும் சிறப்பித்து விட்டீர்கள் சகோதரி...

    வாழ்த்துக்கள்...

    நன்றி...

    பதிலளிநீக்கு
  2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  3. புரட்சி ஏதும் வேணாம். புதுமை ஏதும் வேணாம்.
    நீ புதைஞ்ச மண்ணிலே உரமாகி விளைஞ்சு வா.

    நீ விதைச்சுப் போன விதை விளைஞ்சு காடாகும்.
    நேயமுள்ள உன் சிரிப்பாய்ப் பூமியெல்லாம் பூப்பூக்கும்.///

    விளைந்து நிச்சயம் வருவார்
    நம் வேதனைப் போக்கி மகிழ்வார்
    அற்புதமான அஞ்சலிக் கவிதைக்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...