எனது பதிநான்கு நூல்கள்

திங்கள், 6 ஜனவரி, 2014

அன்ன பட்சி. -- எண்ணங்களின் தூது..

2009 ஜூலை 15 இல் வலைத்தளம் ஆரம்பித்து எழுதத் துவங்கினேன்.அதை ஆரம்பித்துக் கொடுத்தவரே என் தமிழன்னை சுசீலாம்மா அவர்கள்தான்.

அதன்பின் இரண்டரை வருடங்கள் கழித்து 2012 ஜனவரியில் என் முதல் புத்தகம் ”சாதனை அரசிகள்” வெளிவந்ததது.

அதே வருடம் ஃபிப்ரவரி 5 இல் என் இரண்டாம் புத்தகம் ’ங்கா’ வெளிவந்தது.

என் மூன்றாம் புத்தகம் கிட்டத்தட்ட 4 1/2 வருடங்கள் கழித்து வெளிவருகிறது.

கவிதைத் தொகுப்பு போடலாம் என எண்ணும்போதெல்லாம் ஏதோ ஒரு யோசனை தடை செய்துவிடும்.

அகநாழிகை பொன் வாசுதேவன் அகநாழிகை பதிப்பகத்தின் மூலம் பலர் புத்தகங்களை வெளியிட்டிருக்கிறார். அவர் பதிப்பகத்தின் மூலம் என் மூன்றாவது புத்தகம் “ அன்ன பட்சி” கவிதைத் தொகுப்பு வெளி வருகிறது.


நன்மையும் தீமையும் கலந்தது உலகம். எல்லாம் சேர்ந்துதான் வரும். எனவே நீ பாலை மட்டும் பிரித்து அருந்தும் அன்னமாக இரு என்று என் கணவர்  அடிக்கடி சொல்வார். அந்தச் சொல் ரொம்பப் பிடித்து இருந்ததால் அதையே என் கவிதைத் தொகுப்புக்கும் தலைப்பாக வைத்தேன்.

WHAT YOU SEEK SEEKS YOU ---  என்று சொல்வார்கள்.   நன்மையையே நாடினால் நன்மைதான் விளையும் என்பதும் என் அனுபவத்தில் உணர்ந்த உண்மை.

என் கவிதைகளை இரண்டாவது நூலாகக் கொண்டுவந்தவர் தாமோதர் சந்துரு அண்ணன் அவர்கள். ஆராதனாவின் புகைப்படங்களுடன் என் கவிதைகளும் சேர்ந்த மிக அழகான ஆல்பம் அது. அண்ணன் என் தன்னம்பிக்கை முன்னோடி.

அன்ன பட்சியை முழுமையாக அழகாகத் தொகுத்தவர் அகநாழிகை பொன் வாசுதேவன். அதற்கு அணிந்துரை தந்தவர் என் தமிழன்னை சுசீலாம்மா. கல்லூரிப் பருவத்துக்குப் பின் சமீபத்தில்தான் அவரைத் திரும்ப சந்தித்தேன்.

என் புத்தகம் பற்றிச் சொன்னதும். பேரைக்கேட்டதும் உடன் ஓவியம் ஒன்றை அனுப்பித் தந்தவர் அன்புத் தோழி ராமலெக்ஷ்மி, அந்த ஓவியத்தை வரைந்தவர் செல்வி லெக்ஷ்மணன். அதை ஒளி ஓவியமாக்கியவர் ராமலெக்ஷ்மி.

இவர்கள் அனைவருக்கும் நன்றி என்ற ஒற்றைச் சொல் போதுமா தெரியவில்லை. ஏதாவது செய்து கொண்டே இருக்கவேண்டும் என நினைப்பேனே தவிர இதைத்தான் செய்ய வேண்டும் என்ற முடிவோடு இருந்ததில்லை. இதைச் செய்யலாம் என்று திடமாக என்னுடன் கரம் கோர்த்த இவர்களுக்கு வந்தனங்கள்.

இவர்கள் எல்லாரின் அன்பும், உங்களின் அன்பும் கலந்து நானும் அதிலே இருக்கிறேன். என்னுடன் இருந்து என்னுள்ளே உறைந்து என்னைப் புதுப்பித்த அனைவருக்கும் நன்றி.

அன்ன பட்சி இந்தப் புத்தகத் திருவிழாவுக்கு உங்கள் மேலான பார்வைக்கு வருகிறது.. என் எண்ணங்களின் தூதாக.. நன்றி அனைவருக்கும். வாழ்க வளமுடன்.


7 கருத்துகள்:

 1. மிகவும் மகிழ்ச்சி சகோதரி... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

  உதவி புரிந்த அனைவருக்கும் நன்றி... வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 2. வாழ்த்துக்கள் தோழி இப் புத்தக வெளியீட்டினால் நற் பெருமையும்
  புகழும் கை கூடி வர வேண்டும் .மிக்க நன்றி பகிர்வுக்கு .

  பதிலளிநீக்கு
 3. மனமார்ந்த வாழ்த்துகள்.. தங்களின் சாதனைகள் தொடரட்டும்...

  பதிலளிநீக்கு
 4. நன்றி தனபாலன் சகோ

  நன்றி அம்பாளடியாள்

  நன்றி ஆதி வெங்கட்

  நன்றி ராஜலெக்ஷ்மி

  நன்றி வெங்கட் :)

  பதிலளிநீக்கு
 5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...