எனது இருபது நூல்கள்

எனது இருபது நூல்கள்
எனது இருபது நூல்கள்

சனி, 4 ஜனவரி, 2014

சாட்டர்டே ஜாலி கார்னர், ரமலான் தீன் - காதலர் இருவர் கருத்தொருமித்து..

என் முகநூல் சகோதரர்களில் குறிப்பிடத்தக்கவர் ரமலான் தீன். பிறந்த நாள் என்றாலும் சரி, திருமண நாள் என்றாலும் சரி முதல் வாழ்த்து இவருடையதாகத்தான் இருக்கும். இருவருமே சிவகங்கைச் சீமையைச் சேர்ந்தவர்கள் என்பதால் ஊர்ப்பாசமும் அதிகம். 

அவரிடம் நம் வலைத்தளத்தின் சாட்டர்டே ஜாலி கார்னருக்காக ஒரு குண்டக்க மண்டக்க கேள்வி.

////உங்க மனைவி உங்களைத் திட்டினது உண்டா. அப்பிடின்னா எதுக்கு. ஏன். ////


என் மனைவி சொந்த அத்தை மகள் தான் இருப்பினும் காதல் என்னும் அரவணைப்பில் தான் வளர்ந்தது வாழ்க்கை. பின்னர் பெரியவர்களாக சேர்ந்து மணமுடித்து வைத்தார்கள்.
எங்களுக்குள் சண்டை என்பது ஒரு விளையாட்டுப்போலதான் வேடிக்கை பார்ப்பார்கள் அனைவரும் ஏனென்றால் வாழ்க்கையில் கணவன் மனைவிக்குள் சச்சரவு இல்லையெனில் வாழ்க்கை இன்பமாய் இருக்காது.

அதுபோல எங்களுக்குள் வரும் சண்டையும் மழை பெய்து ஓய்வது போல அடுத்த நொடியே மறிவிடும். அந்த சண்டை வரும் நேரங்களில் இருவரும் மாறி மாறி திட்டுவோம்

அதிகமா சத்தம் போடுவது என் மனைவி தான்( இந்த செய்திய மட்டும் பாஸ் பண்ணிடாதிங்க தேனக்கா அப்புறம் அருவாள் வந்துடும்)

ஏதாச்சும் திட்டும் போது ஏன் இப்புடி பண்ற நு கேட்டா உன் பொண்டாட்டி உன்னை மாதிரி தான் இருப்பானு ஒரு பஞ்ச் கொடுக்கும்போது கோவம் எல்லாம் மாறிவிடும்
கணவன் மனைவிக்குள் சிற்சில சச்சரவுகள் வரலாம் ஆனால் அது உடனே மாற்றிக்கொள்ள வேண்டும்.. அப்படி இருந்தால் தான் வாழ்க்கை சக்கரம் இன்பமாய் ஓடும்... ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்வதே இனிமை
  
 --- மிக அருமையா சொன்னீங்க ரமலான். உங்களை உங்க மனைவிகிட்ட மாட்டி விடலாம்னா சரியான பஞ்ச் டயலாக்கா பதில் சொல்லிட்டீங்க. காதலர் இருவர் கருத்தொருமித்து ஆதரவு பட்ட இன்பம் வாழ்வில் இனிக்கவே செய்யும். வாழ்க வளமுடன் சகோதரர் ரமலான் தீனும் அவர் மனைவியும்.

11 கருத்துகள்:

 1. கருத்தொருமித்த காதலும் தம்பதியினரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 2. ரமலான் தீன் தம்பதியருக்கு வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 3. Super.....actualla adhai sandai sacharavu endru solla kudathu, adharku peyae udal :), vaazhkaiyil ellamum irukavenum (spice)., irundha thaan life.ilena romba bore... anniyin satham jaasthi nu kekum pozhudhu manasuku nemba sathosama iruku :-p

  பதிலளிநீக்கு
 4. Super.....actualla adhai sandai sacharavu endru solla kudathu, adharku peyae udal :), vaazhkaiyil ellamum irukavenum (spice)., irundha thaan life.ilena romba bore... anniyin satham jaasthi nu kekum pozhudhu manasuku nemba sathosama iruku :-p

  பதிலளிநீக்கு
 5. ரமலான் தீன் தம்பதியருக்கு வாழ்த்துக்கள். இன்று போல் என்றும் வாழ்க!

  பதிலளிநீக்கு
 6. மகிழ்ச்சியான மணவாழ்க்கைக்கு ரமலான் தீன் தம்பதிக்கு என் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 7. தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 8. நன்றி ஆசியா

  நன்றி தனபாலன் சகோ

  நன்றி கயல்.. அப்பிடிப் போடு.. :)

  நன்றி கோமதி மேம்

  நன்றி ராஜலெக்ஷ்மி

  நன்றி முகம்மது

  நன்றி சீனி

  நன்றி வெங்கட்.

  பதிலளிநீக்கு
 9. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...