எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 29 நவம்பர், 2024

சோகி சிவா சொல்வழக்கு - 13

23.

ஆத்தாடியோவ் - வெகுண்டு சொல்வது.

சுளகு - முறம் போன்று இருப்பது. முறம் விரிந்திருக்கும். சுளகு முடிவில் குவிந்திருக்கும்.

பானாக் காதுச் சட்டி - ப னா வடிவில் கைப்பிடி வைத்த சட்டி

அத்தத்தண்டி - அவ்வளவு பெரிய

தோது - திருமணத்துக்குத் தோதாகச்/சீராகக் கொடுக்கும் பணம்,நகை.

பெருவாரிப் பேரு - நிறையப் பேர்

சேயக்கொள்ள - திருமணம் செய்து வைக்க

எதவானவுக - வசதி இல்லாதவர்கள், பொருளாதார ரீதியாக எளியோர்

அதார - அது யாரை

தெங்கணம் - விவரம் புரியாதவர்கள்

மானி - மான அவமானத்துக்குக் கட்டுப்பட்டவர்கள்.

வளப்பு - வளர்ப்பு, வளர்த்த விதம்

கிராஸ் - இரு இனக் கலப்பு

செட்டிச்சி - செட்டிய வீட்டுப் பெண்/குழந்தை

மொறையாக - சீராக, பெற்றோருக்குக் கட்டுப்பட்டு

சமைஞ்சவோடனே - பெரிய பெண்ணாதல், புஷ்பவதியாதல்

அடிப்பாதரவே - இழிவரல் சொல்

கேளாம - கேட்காமல்

அடுப்படிப் பத்தி - சமையல்கட்டை ஒட்டிய நடைபாதைப் பகுதி

 

24.

உபவாசம் - விரதம்

சோகிகள் இருந்த சீசா - தாயம் விளையாடும் சோகி எனப்படும் முத்துக்கள் வைத்த பாட்டில்.

எத்தைத்தண்டி - எவ்வளவு பெரிதாக

ரவைக்குத்தான் - இரவுக்குத்தான்.

தாயம் போட்டுத் தகைதல் - தாயம் என்றால் ஒன்று போடுதல், தகைதல் என்றால் ஆட்டத்தை ஆரம்பித்தல்.

பொறப்புல இருந்தா - பிறப்பில் இருந்தா என யோசிப்பது.

புடிமானம் - பிடிமானம்.

அப்பத்தா - அப்பாவின் அம்மா.

சகுனி - மகாபாரதத்தின் ஒரு பாத்திரம். தாயம் போட்டுச் சூதாட்டத்தின் மூலம் பாரதப் போர் நிகழக் காரணமானவன்.

கூட்டம் எக்கித் தள்ளியது - கட்டுக்கடங்காத கூட்டம்.

ஆசுவாசம் - நிம்மதி

செதர்காய் - கோயிலின் முன் அல்லது குறிப்பிட்ட சன்னதி முன் சிதறுமாறு உடைக்கும் தேங்காய்.

வெள்ளைச்சீலைக்கார ஆச்சி - விதவைப்பெண்களை அவர்கள் உடுத்தும் வெள்ளைச் சீலை மூலம் குறிப்பிடுவது.

பொசுப்பு - அதிர்ஷ்டம். பாக்கியம், அவகாசம். கொடுத்து வைத்தது அவ்வளவுதான் எனச் சொல்வார்கள்.

புள்ளை கூட்டுதல் - பிள்ளையில்லாதோர் பிள்ளை உள்ளவரிடம் இருந்து தத்து எடுத்துக் கொள்ளுதல், தன் மகனாக சுவீகாரம் செய்து கொள்ளுதல்,

ஆத்தாத்தோய் - ஆத்தா ஆத்தோய் என்று பெண்ணைப் பார்த்துக் கூறும் ஆச்சர்ய விளிப்பு.

துவாதசி பாரணை - துவாதசி விரதம் முடித்தல்.

பெருமா கொயில் - பெருமாள் கோயில்

மூட்டம் - மழைப் பொழிவிற்கான மேகமூட்டம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...