21.
ரொட்டிப் பொட்டித் தகரம் - ஒரு காலத்தில் ரொட்டி/பிஸ்கட்
வைக்கப் பயன்பட்ட ஒரு நீள் செவ்வக டப்பா
பெருமை பீத்தக்கலம் - அடுத்தவர்களுடன் இயல்பாக உரையாடாமல்
தன்னைப் பெருமையாக எண்ணித் திரிபவர்களைக் கிண்டல் செய்வது. பீத்தல் கலத்தில், ஓட்டைக்கலத்தில்
வைப்பது போல பெருமை வடிந்து விடும் என்பது.
தெம்பட்டுச்சு - தென்பட்டது, காண/உணரக் கிடைத்தது.
அடி ஆத்தி - ஆச்சரியத்தின் போதும் ஒரு புது விஷயத்தைக் கேள்விப்படும்போதும் இப்படிப்பட்ட சொலவடைகளை இருபாலாரும் உதிர்ப்பார்கள்.
சேய வேண்டிய புள்ளைய - கல்யாணம் செய்ய வேண்டிய பிள்ளை.
22.
ஆய்ஞ்சு விட்ரும் ஆய்ஞ்சு - திட்டித் தீர்ப்பது, விமர்சிபது
நோட்டம் விட்டபடி - கண்காணித்தபடி
கையூனிக் கரணம் பாய்ஞ்சாலும் – கஷ்டப்பட்டாலும்
23.
சோகிகள் இருந்த சீசா - தாயம் விளையாடும் சோகி எனப்படும் முத்துக்கள்
வைத்த பாட்டில்.
ரவைக்குத்தான் - இரவுக்குத்தான்.
தாயம் போட்டுத் தகைதல் - தகைதல் என்றால் ஆட்டத்தை ஆரம்பித்தல்.
பொறப்புல இருந்தா - பிறப்பில் இருந்தா என யோசிப்பது.
புடிமானம் - பிடிமானம்.
அப்பத்தா - அப்பாவின் அம்மா.
கூட்டம் எக்கித் தள்ளியது - கட்டுக்கடங்காத கூட்டம்.
பொசுப்பு - அதிர்ஷ்டம். பாக்கியம், அவகாசம். கொடுத்து வைத்தது
அவ்வளவுதான் எனச் சொல்வார்கள்.
ஆத்தாத்தோய் - ஆத்தா ஆத்தோய் என்று பெண்ணைப் பார்த்துக் கூறும்
ஆச்சர்ய விளிப்பு.
துவாதசி பாரணை - துவாதசி விரதம் முடித்தல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)