புஸ்தகாவில் எனது பதிமூன்றாவது மின்னூல் ஆழ்வார்களின் கதைகள்.
ஆழ்வார்களின் கதைகள் பற்றிய குறிப்பு
முன்னுரை
வைணவக் கடவுளான திருமாலைப் பாடித் தொழுதவர்கள் ஆழ்வார்கள். இவர்கள் திருமாலையே தம் முழுமுதற் தெய்வமாக, அன்பிற்குரியவராகப் பாடிப் பரவி இருக்கிறார்கள். ஐந்தாம் நூற்றாண்டில் இருந்து பதினைந்தாம் நூற்றாண்டு வரை ஆழ்வார்களின் இம்மரபு தொடர்ந்திருக்கிறது. நாலாயிரம் திவ்யப் ப்ரபந்தம், பாசுரங்கள், திருவந்தாதி, திருவாய்மொழி, திருப்பாவை, திருவெழுக்கூற்றிருக்கை, திருப்பள்ளி எழுச்சி, திருமாலை, திருப்பல்லாண்டு, திருமொழி, நெடுந்தாண்டகம், குறுந்தாண்டகம், விருத்தம், சிறுத்தாம்பு என 108 திவ்ய தேசங்களையும் மங்களாசாசனம் செய்தவர்கள். இவ்வாறு தமிழில் கவி இயற்றிப் பொது மக்களுக்கும் வைணவத்தைக் கொண்டு சேர்த்த ஆழ்வார்களின் பணி அளவிட இயலாதது.