எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 9 மார்ச், 2010

செவிலி... யாதுமான சக்தி நீயுமாகி!

செஞ்சிலுவை சுமந்துவரும்
வெள்ளுடை தேவதையே...

சேவை செய்ய வந்த
பாவை விளக்கே...

வாழ்வின் திசையில்
வளையக் கற்றுத் தந்த
நதியோர நாணலே...கருவாகி உருவாகி
தாயுமான தாதி
உடல் நோவிலெல்லாம்
உடன் நிற்பவளே..

உன் புன்னகையில்
உயிர்த்தெழுகிறேன்
மருந்துவக்கும் மருத்துவச்சி..
மனித ரூபம் எடுத்த சக்தி..

துயருற்ற போதெல்லாம்
என்னருகே நீயிருந்தாய்
தோளணைத்து எனைச்சுமந்து
உடல் துவட்டி மருந்தூட்டி

படுக்கையை சீர்செய்து
பாடிஸோர் வராமல் காத்து
வெளியாகும் எச்சமெல்லாம்
வெறுக்காமல் சுத்தம் செய்து...

வியாதியுடன் போராட
வாழ் நாளெல்லாம் கூட வந்து
இறைமைக்கு அடுத்தவள் நீ
அத்தனை பொறுமை உனக்கு...

யுத்தமோ பேரழிவோ
யுகயுகமாய் உன் சேவை
தெரசாவாய் நைடிங்கேலாய்
தன்னுயிரைத் துச்சமாக்கி...

நடுநிசியோ வைகறையோ
ரணகளத்திலும் முதலுதவி...
அரு மருந்தே அர்ப்பணிப்பே
ஆற்றலோடு வந்த அருங்கொடையே..
.
யாதுமான சக்தி
தாயுமானவளே
வாழ்ந்திடு நீ
எல்லோருக்குமாய்
என்றென்றென்றும்!

http://youthful.vikatan.com/youth/Nyouth/sakthi2010/thenammaipoem050410.asp

டிஸ்கி:- ஒரு சகோதரர் எனக்கு யூத்ஃபுல்
விகடனின் லிங்கை அனுப்பி வைத்தார்,..
சகோதார் கோபிநாத் முத்துசாமி
(http://bhrindavanam.blogspot.com/)யின்
அன்பு அம்மாவுக்காக அர்ப்பணிக்கப்பட்டதை
உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்..

இது சர்வதேச மகளிர் தின ஸ்பெஷல் .
சக்தி 2010 யூத்ஃபுல் விகடனில் வந்தது..

29 கருத்துகள்:

 1. நன்றாக இருக்கிறது, வாழ்த்துக்கள் அக்கா.

  பதிலளிநீக்கு
 2. யாதுமானவள் பெண்
  வாழ்த்துக்கள் தேனு

  பதிலளிநீக்கு
 3. யாதுமான சக்தியாய் யாவருக்கும் தாயுள்ளத்துடன் சேவை செய்யும் செவிலியருக்கு மரியாதை. அருமை தேனம்மை. வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 4. வாழ்த்துக்கள் தேனம்மை அவர்களே.

  பதிலளிநீக்கு
 5. ஆமாம் தேனம்மை செவிலியர் கடவுளுக்கு ஒப்பானவர் தான்

  பதிலளிநீக்கு
 6. அக்கா கோபித்து கொள்ள வேண்டாம் எனக்கு கவிதையை பற்றி விமர்சனம் எல்லாம் செய்ய தெரியாது, ஆனால் படிக்கும் போதோ உங்களுடைய கவிதைகள் அனைவருக்கும் புரியும் வண்ணம் உள்ளது, தொடர்ந்து எழுதுக

  பதிலளிநீக்கு
 7. நன்றி தேனம்மை. என் அன்னையை பெருமைபடுத்தி விட்டீர்கள்.

  பதிலளிநீக்கு
 8. வாழ்த்துக்கள், அக்கா. அருமை.

  பதிலளிநீக்கு
 9. இதுவரை யாரும் நினைவு கூறாத அற்புத கவிதை.

  வாழ்த்துக்கள் அக்கா

  (பாடிஸோர் அல்ல பெட்ஸோர் என்று கருதுகிறேன் )

  விஜய்

  பதிலளிநீக்கு
 10. வாழ்த்துக்கள் தேனம்மை.
  கவிதை அருமை

  பதிலளிநீக்கு
 11. அருமையோ.........அருமை......


  புதிய அபிமானி.........
  நம்ம பக்கமும் வாங்க........

  பதிலளிநீக்கு
 12. வாழ்த்துக்கள் அக்கா.. அருமையா இருக்கு.. உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன் அக்கா.. வந்து பாருங்கள்..

  பதிலளிநீக்கு
 13. அருமைங்க. செவிலியர் நிச்சயம் தெய்வத்திற்கும் மேலானவர்கள்தாம். :)

  பதிலளிநீக்கு
 14. நல்ல சேவை உள்ளம் படைத்த செவிலியர்களை பார்த்து பல முறை வியந்து போயுள்ளேன்.

  நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 15. நன்றி சிவாஜி

  நன்றி சை கொ ப

  நன்றி பாலா சார்

  பதிலளிநீக்கு
 16. நன்றி கண்மணி

  நன்றி நாய்க்குட்டி மனசு

  நன்றி ராமலெக்ஷ்மி

  பதிலளிநீக்கு
 17. நன்றி ரமேஷ்

  நன்றி பத்மா

  நன்றி சசிகுமார்

  பதிலளிநீக்கு
 18. நன்றி அண்ணாமலையான்

  நன்றி வினோத் கௌதம்

  நன்றி கோபி நாத்

  பதிலளிநீக்கு
 19. நன்றி சித்ரா

  நன்றி விஜய்

  நன்றி அம்பிகா

  பதிலளிநீக்கு
 20. நன்றி விடிவெள்ளி

  நன்றி திவ்யா ஹரி

  நன்றி வித்யா

  பதிலளிநீக்கு
 21. நன்றி அக்பர்

  நன்றி ஜோதிஜி

  நன்றி ஷங்கர்

  பதிலளிநீக்கு
 22. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்...!!!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்...!!!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...