திங்கள், 22 ஜூலை, 2013

SWACHA BANGALORA SUVARNA BANGALORE. சுத்தமான பெங்களூரு, ஸ்வர்ண பெங்களூர்.

SWACHA BANGALORA SUVARNA BANGALORE.

ஜூலை 1 நேஷனல் ரீசைக்ளிங் டே. ( தேசிய மறுசுழற்சி நாள் ) . இதுக்காக  பெங்களூருவில் 12, 000 க்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகள் "LESS POLLUTION IS THE BEST SOLUTION"  “ IF YOU LOVE TO BREATHE SAVE TREES " . ( GO GREEN ) என்ற வாசகம் தாங்கிய பலகைகளைப் பிடித்து நேஷனல் காலேஜ் கிரவுண்டில்  ஊர்வலமாக வந்தார்கள். திடக்கழிவு மேலாண்மையில் குப்பைகளை இனம் பிரித்து மக்கும் குப்பைகள் , மக்காக்குப்பைகள்  என வகைப்படுத்தி அவற்றுக்கான மறுசுழற்சி செய்யும் முயற்சியில் ( BBMP ) BRUHAT BANGALORE  MAHANAGARA PALIKE  மூலம் முதலில்  12 வார்டுகளில் செயல்படுத்தப்பட்டது. இப்போது 198 வார்டுகளுக்கும் ஐடிசியின் துணையுடன் செயல்படுத்த முனைந்துள்ளது.
ITC  தற்போது WASTE TO WEALTH  என்ற திட்டத்தின் படி குப்பை பொறுக்குபவர்களுக்கும் 34 வார்டுகளில் துப்புரவுத் தொழிலாளர்களுக்கும் -- பௌரகர்மிகாகளுக்கும் ( POURAKARMIKAS) பயிற்சி அளித்து தேவையான உபகரணங்களையும் அளிக்கிறது.

மிகப்பெரும் திருமண மண்டபங்களிலும் ஹோட்டல்களிலும் ZERO GARBAGE PROJECT  என்ற திட்டத்தின் மூலம் கழிவுகளை அங்கேயே பெரிய ஜெனரேட்டர்களை நிறுவக் கூறி  பிரித்து அனுப்ப வலியுறுத்துகிறது. குப்பைகள் , திடக் கழிவுகள் ஒரு அளவுக்குமேல் சேர்ந்தால் அதை ஜெனரேட்டர்களைக் கொண்டு பிரிக்கவேண்டும் என்றும் நிர்ணயிக்ககப்பட்ட அளவை விடக் குறைவாக இருந்தால் மட்டுமே நகராட்சிக் கழிவிடங்களில் கொட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. ( இதுவரை  தனித்தனி  சின்ன வண்டிகளில் கொண்டுவந்து பக்கத்தில் இருக்கும் நகராட்சிப் பள்ளியின் காம்பவுண்டுச் சுவற்றின் பக்கம் முழுவதும் ரோட்டில் கொட்டி வந்தார்கள். ) அதை நகராட்சிக் குப்பை வண்டிகள் காலை 6 மணியிலிருந்து சேகரிக்க ஆரம்பிக்கும். ஆனால் எவ்வளவு குப்பையாக இருந்தாலும் 10 மணி அளவில் ரோடுகள் பளிச்தான்.

மழைக்காலம் என்றால்தான்  முதல் நாள் இரவில் மக்கள் அங்கே குப்பைகளைப்போட்டார்கள் என்றால் நாற்றமடிக்கும். இன்னும் கலாசி பாளையம் , மடிவாலா ரோடுகள் மழை பெய்தால் சென்னை கே கே நகர்  ரோடுகளை விட படு மோசமாக இருக்கும்.  அங்கங்கே குப்பை நாற்றங்கள்.

பெங்களூரு என்றால் நாம் பள்ளி கல்லூரி நாட்களில் டூர் வரும்போது மரங்கள் சூழ்ந்த ரோடுகளையும் பார்க்குகளையும் பார்த்து ஆ என்று பிரம்மித்திருப்போம். சாஃப்ட்வேர் கம்பெனிக இருக்குமிடம் தவிர அசல் பெங்களூரு சென்னையை விட படு கலீஜான ப்ளேஸ்.

பெங்களூரின் இன்சார்ஜ் மினிஸ்டர் ராமலிங்க ரெட்டி தங்கள் வார்டுகளைத் தூய்மையாக வைத்திராத அலுவலர்களின் மேல் பி பி எம் பி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார். டெண்டரின் படி செயல்படாத காண்ட்ராக்டர்களின் மேலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி இருக்கிறார்.

இது தவிர வீடுகள் தோறும்  BBMP , RESIDENTS' WELFARE ASSOCIATION ( RWA )  மற்றும் என் ஜி ஓ க்கள் மூலம் கழிவுகளைப்பிரித்துக் குப்பையில் போடும்படி வலியுறுத்துகிறது. இதனால் ப்ளாஸ்டிக் கவர், ப்ளாஸ்டிக் பைகள், கண்ணாடிப் பொருட்கள், ப்ளாஸ்டிக் பாட்டில்கள், உலோகங்கள், ரப்பர் பொருட்கள் இவைகளைப் பிரித்துப் போடுவதன் மூலம் மக்கும் குப்பைகளை மட்டும் தனியாகவும் மக்காத குப்பைகளைத் தனியாகவும் மறுசுழற்சி செய்ய முடியும் எனச் சொல்கிறார்கள்.

”சிங்காரச் சென்னை” ஸ்லோகன் மாதிரிதான் ”சுத்தமான பெங்களூரு தங்கம்போல பளபளக்கும் பெங்களூரு” ஸ்லோகனும்.  இந்த மாசக் கடைசிக்குள் இதெல்லாம் முடிவுக்கு வந்துவிடும் என்றும் முதலமைச்சர் சீதாராமையா இந்த ஸீரோ கார்பேஜ் ப்ராஜெக்டை லாஞ்ச் செய்வார் என்றும் கூறுகிறார்கள்.

அதுவரை குப்பை லாரியில் அழுக்கு ஸ்வெட்டர்களோடு ரோடு ரோடாகச் சென்று குப்பைகளை மண் கொத்தும் மண் வெட்டியால் வாரிக் கொட்டி  இனம் பிரித்து அள்ளும் இந்தத் துப்புரவுத் தொழிலாளர்களை --பௌரகர்மிகாக்களைப்  பார்த்தால் கஷ்டமாகத்தான் இருக்கிறது.5 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

துப்புரவுத் தொழிலாளர்களின் சேவை அளப்பரியது... இங்கு தினமும் வரும் அவர்களின் நிலையைப் பார்த்து நாங்களே குப்பைகளை தனித்தனியாக கட்டி போட்டு விடுவதுண்டு...

அமைதிச்சாரல் சொன்னது…

சுத்தமா வெச்சுக்கணும்ன்னு எல்லோரும் சொல்றாங்க. பின்பற்றுவோமே.

சே. குமார் சொன்னது…

சுத்தமாக வைத்துக் கொள்ள எல்லாரும் முயற்சித்தால் சிங்கார நகரமாக மாற்றலாம்... துப்புரவுத் தொழிலாளிகளின் சேவை போற்றுதலுக்கு உரியது...

Thenammai Lakshmanan சொன்னது…

அதுதான் சரியானது தனபாலன்..

ஆம் சாரல்

ஆம்...நன்றி குமார்.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...