வியாழன், 4 ஜூலை, 2013

பணம் செய்ய விரும்பு...

பணம் செய்ய விரும்பு.. எனது பார்வையில்:-


அறம் செய விரும்பு என சொல்லி இருக்காங்க பெரியவங்க.. ஆனா இந்த கார்ப்பரேட் உலகத்துல நாம பணம் செய விரும்பணும்னு நாணயம் நாகப்பனும் புகழேந்தியும் சொல்றாங்க. நாணயம் நாகப்பன் சென்னை பங்குச் சந்தை இயக்குநர். புகழேந்தி பொறியாளர்.


ஒரு நாட்டோட பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் விஷயங்களில் பங்குச் சந்தை முக்கியமானது. தனி மனிதன் உயர்வதற்கும் நாட்டை உயர்த்துவதற்கும் கூட பொருளாதாரம் இன்றியமையாதது. பணத்தைப் பணத்தால் பெருக்கும் உபாயத்தை இதில் சொல்லி இருக்காங்க. நம்ம நாட்டுல இரண்டு சதவீதம் மக்கள்தான் பங்குச் சந்தையில் ஈடுபட்டு இருக்காங்கன்னு சொல்லி இருக்காங்க இவங்க.

மிச்ச மக்களும் தங்கள் பணத்தைப் பெருக்குவது எப்படின்னு இந்தப் புத்தகத்தைப் படிச்சுப் பார்த்துத் தெரிஞ்சுக்கலாம். வங்கியில் சேமிப்பு, அஞ்சலக சேமிப்பு, பிஎஃப், பி பி எஃப், வி பி எஃப், கடன் பத்திரங்கள், தங்கம் வெள்ளி, இன்சூரன்ஸ், சீனியர் சிட்டிசன்ஸ் ஸ்கீம் பத்தி எல்லாம் சொல்லிட்டு மியூச்சுவல் ஃபண்ட்ஸ், ஷேர்ஸ் பத்தி விலாவாரியா சொல்லி இருக்காங்க.

ஆனா தங்கம் வெள்ளி அவ்வளவு ஏறலைனு சொல்லி இருக்காங்க. இந்தப் புத்தகம் வந்து ( 2007 இல் எழுதப்பட்டிருக்கு ) சில வருடங்கள் ஆயிட்டதால் இதுல தங்கம் வெள்ளி புள்ளி விபரம் பார்த்தா பயங்கர வித்யாசமா இருக்கு இன்னைக்கு. 1982 இல் தங்கம் ( 24 காரட் தங்கம் 10 கிராம் விலை ) 1775. இன்னிக்கு ஒரு கிராம் தங்கமே 3000த்துக்கிட்ட. அதே போல் வெள்ளி ஒரு கிலோ 2715 ரூபாய் . இன்னிக்கு 70,000 சொச்சம்.

ரிஸ்க் இல்லாத சேமிப்பே இல்லை.. என்ன அதிர்ச்சியா இருக்கா. அப்பிடித்தான் சொல்றாங்க இவங்க. ரிஸ்க் கம்மியா உள்ள திட்டம் அல்லது  ரிஸ்க் மீடியமா உள்ள திட்டம் அல்லது ரிஸ்க் அதிகமா உள்ள திட்டம்  இதுதான் இருக்கு.
என்ன சொல்றாங்கன்னா வங்கிகள்ல சேமிப்பது ரிஸ்க் கம்மியா உள்ள திட்டம்தான் ஏன்னா அந்த வங்கிகள் “ டெப்பாஸிட் இன்ஷூரன்ஸ் அண்ட் கிரெடிட் கியாரண்டி கார்பரேஷன்” என்னும் அமைப்பில் காப்பீடு செய்து அதன் பிரிமியத்தை கரெக்டா கட்டி இருந்தால்தான் நாம் டெபாசிட் செய்த பணம் வங்கி திவாலானாலும் நமக்குத் திரும்பக் கிடைக்கும். இதுல நாம போட்ட பணத்தோட வட்டி ( 9 - 11 %)கிடைக்கும்.

அதேபோல மியூச்சுவல் ஃப்ண்டுகளில் நாம் போடும் பணத்தை அவர்கள் பங்குச் சந்தையிலேயே முதலீடு செய்வதால் அதன் ஏற்ற இறக்கம் பொறுத்தே நம்முடைய யூனிட்டுகளின் விலை ஏறும் அல்லது இறங்கும்.இது ரிஸ்க் மீடியமாக உள்ள திட்டம். இதில் லாபமும் நஷ்டமும் சரி பாதி உண்டு.

பங்குச் சந்தை நம் நாட்டின் அரசியல், யுத்த சூழ்நிலை, கச்சா எண்ணெய் விலை ஏற்றம் , தங்க இருப்பு பொறுத்து ஏறும் அல்லது இறங்கும். தங்கம் ( கூலி சேதாரமில்லாமல் ) ,  பலசரக்கு போன்றவற்றையும் பங்குச் சந்தையில் வாங்கி வைக்கலாம். இதில் லாபமும் அதிகம் கிடைக்கலாம். நஷ்டமும் அதிகமாகலாம். இதற்கு ஸ்டாப் லாஸ் போட்டு வைப்பது அவசியம்.

ரோல்மாடல்களைப் பின்பற்றுதல், வரவு செலவுக் கணக்கிடுதல், தினமும் பங்குச் சந்தையைக் கவனித்து நாமே நம் கணக்கில் பங்குகளை வாங்கி விற்க வேண்டும். ( நம்முடைய கண்காணிப்பு அவசியம்). இதற்கு இவர்கள் 1.  EVALUATE THE SEVERNITY, 2. ASSESS THE PROBABILITY, 3. DETECTABILITY  AND CONTROL MECHANISM ( STOP LOSS)   என்ற மூன்றையும் கைக்கொள்ளச் சொல்கிறார்கள்.

பணக்காரர்களைப் பற்றிய நம்முடைய மனோபாவத்தையும்  மனச்சிக்கலையும் பற்றிப் பேசுகிறது இந்நூல். மனோதத்துவம் கலந்த முதலீடு பற்றிப் பேசும் நூல் எனலாம். டிவிடெண்ட், போனஸ் ஷேர்ஸ், இனிஷியல் பப்ளிக் ஆஃபரிங்ஸ்,புக் வால்யூ, சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மெண்ட் ப்ளான், சிஸ்டமேட்டிக் ட்ரான்ஸ்ஃபர் ப்ளான் ஈக்விட்டி லிங்க்டு சேவிங்ஸ் ஸ்கீம், நிஃப்டி, சென்செக்ஸ், செபி போன்றவை பற்றியும், பங்குச்சந்தை, மியூச்சுவல் ஃபண்ட்ஸ் செயல்பாடுகள் பற்றியும் இதில் நன்கு தெரிந்து கொண்டு முதலீடு செய்யலாம்.

பெரியவர்களின் அனுபவத்தைப் பயன்படுத்துதல், சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்கு சேமிப்பின் அவசியத்தை வலியுறுத்த வங்கி சேமிப்புக் கணக்கு ஆரம்பித்தல், மனைவியின் நிதித்திட்டத்தையும் கேட்டு ஏற்றுக் கொள்ளுதல் என்ற கூட்டு முயற்சியின் மூலம் நமது வருமானத்தைப் பெருக்கவும், முதலீட்டைத் தக்கவைத்துக் கொள்ளவும் முடியும் என ஆணித்தரமாகச் சொல்கிறார்கள். 2008 லேயே 4 பதிப்புக்களைக் கண்ட நூல் இது.

டே ட்ரேடர்ஸ் மாதிரி எடுத்தவுடன் ட்ரேட் செய்யாம பங்குச் சந்தையின் போக்கை நிதானமாக கவனித்து கணித்து வாங்கினால் வெற்றி நிச்சயமே. அப்புறம் நீங்க பணத்தை விரும்புற மாதிரி பணமும் உங்களை விரும்ப ஆரம்பிச்சுடும்.

புத்தகம் :- பணம் செய்ய விரும்பு.
ஆசிரியர்கள் :- நாகப்பன் புகழேந்தி
எழுத்தாக்கம் :- தளவாய் சுந்தரம்
பதிப்பகம் :- விகடன் பிரசுரம்.
விலை :- ரூ 60.
6 கருத்துகள் :

சங்கவி சொன்னது…

நல்ல அறிமுகம் இப்புத்தகம்...

சே. குமார் சொன்னது…

உங்கள் பார்வையில் புத்தக விமர்சனம் அருமை அக்கா.

Kathir Velu சொன்னது…

மனிதன் நாகரீக உலகத்தில் அற்ப ஆசைகளுக்காக பணம் எனற விஷத்தை சம்பாதித்து,அந்த பணத்தாலே இறுதியில் மாண்டு ஒழிந்து அழிந்து விடுகிறான். மனிதன் அழியாமல் மரணம் அடையாமல் வாழமுடியும் என்ற உண்மையை உலகத்திற்கு அறிவித்து,அதன்படி வாழ்ந்து கொண்டு இருக்கும் .நமது தமிழ் நாட்டில் பிறந்து வாழ்ந்த ,அருளாளர் வள்ளல் பெருமானை இந்த உலகம் தெரிந்து கொள்ளாமல் இருப்பது ,வேதனைக்குறிய விஷயமாகும்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல அறிமுகம். நன்றி.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி சங்கவி

நன்றி குமார்

நன்றி கதிர்வேல் சார், உண்மைதான்.. என்ன செய்வது இவ்வுலக வாழ்வுக்கு பணம் இன்றியமையாததுதானே..

நன்றி வெங்கட்

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...