இந்தவார சாட்டர்டே போஸ்டில் திரு விவிஎஸ் சார் கூறும் கிரவுண்ட் ரியாலிடீ பற்றித் தெரிந்துகொள்வோம்.
கவனிக்க வேண்டிய கிரவுண்ட் ரியாலிடீ !
கையகலச் சொந்த நிலம். யாருக்குத்தான் இல்லை இந்தக் கனவு. நியாயமான ஒன்றும்தானே ! ஆனால் அதை வாங்குவதில்தான் நமக்கு எத்தனை அவசரம் !
1200 சதுர அடி. செங்கல்பட்டிரிலிருந்து 2 கிலோ மீட்டரில். ரூ 5000 முதல் தவணை. பின்னர் ரூ 500 இ எம் ஐ. இந்த வகையில் அடிப்படை விவரங்கள் கொண்ட சுவரொட்டி.
கற்கண்டு போல் தண்ணீர். 5 அடி ஆழத்தில். உடனடியாக வீடு கட்டி குடி போகலாம். சுற்றிலும் இருக்கும் வீடுகளின் ஃபோட்டோ. நாளேட்டில் விளம்பரம்.
