எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
ஊடகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஊடகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 17 ஜூலை, 2013

நன்றி ஊடகம்.

தேனம்மை  லக்ஷ்மணன், தமிழ் இணைய எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவரது படைப்புகள் பல்வேறு இணையதள பத்திரிகைகளில் வெளிவந்து கொண்டு இருக்கிறது. சமூக சிந்தினைக் கொண்ட இவரது எழுத்துக்கள் வாசிப்பவரை தன்  வசமாக்கும். இவர் சும்மா என்கிற வலைப்பூவும, சமையல் கலைக்கு ஒன்று என இரு வலைப்பூ நடத்தி வருகிறார்.


ஊடகம்: நீங்கள் எழுத்து துறைக்குள் நுழைந்தது தற்செயலாகவா ? இல்லை  எழுத்து மீது உங்கள் ஆர்வம் காரணமாகவா ?

தேனம்மை லக்ஷ்மணன்: எழுத்து என்பது கல்லூரிப் பருவத்திலேயே இருந்தது.  2008 அக்டோபர் மாதம்., பாரதி பதிப்பகத்தின் குற்றமும் தண்டனையும் என்ற மொழிபெயர்ப்பு புத்தகம் பெஸ்ட் செல்லர்களில் ஒன்றாக குமுதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.. அதை எழுதியவர் என்னுடைய கல்லூரிப் பேராசிரியை திருமதி எம் ஏ சுசீலாம்மா அவர்கள்.. புது தில்லியில் இருக்கும் அவர்களை தொலைபேசியில் வாழ்த்தியபோது வலைத்தளத்தில் எழுதி வருவதைக் குறிப்பிட்டார்கள்..பின்னர் நானும் அவர்கள் உதவியால்  வலைத்தளம் ஆரம்பித்து எழுதி வருகிறேன்.