எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
ஆதி அந்தம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆதி அந்தம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 21 நவம்பர், 2018

கர்வம் தந்த அவமானம். தினமலர். சிறுவர்மலர் - 44.

சோதனைக்கு உள்ளாக்கிய ஜோதி.



எந்த விஷயத்திலும் நானே பெரியவன் என்ற கர்வம் இருந்தால் அது அழிவுக்கே வழிவகுக்கும். அப்படி நானே பெரியவன் என்று மும்மூர்த்திகளில் இருவர் சண்டையிட்டால் என்ன ஆகும். ஈசன் அந்த கர்வத்தை எப்படிக் களைந்தார் என்பதைப் பார்ப்போம் குழந்தைகளே.  
ஒரு முறை படைப்புக் கடவுளான பிரம்மாவுக்கும், காக்கும் கடவுளான விஷ்ணுவுக்கும் இடையில் யார் பெரியவர் என்ற அகந்தை ஏற்பட்டது. முதன் முதலில் பொருட்களையும் மனிதர்களையும் படைப்பதால் தானே பெரியவன் என்றும் தன்னால் படைக்கப்பட்ட அந்தப் பொருட்களைக் காப்பவர்தான் விஷ்ணு என்றும் ஆகையால் தானே பெரியவன் என்று கூறினார் படைப்புக் கடவுள் பிரம்மா. பொருட்களைப் படைத்தல் பெரிதல்ல. படைக்கப்பட்ட பொருட்களையும் மனிதர்களையும் காத்து வருதலே அரும்பணி என்றும் அதனால் தானே பெரியவன் என்றும் விஷ்ணு கூறினார்.
இவ்வாறு இவர்கள் இருவரும் சண்டையிட்டபடி இருந்ததை ஈசன் பார்த்தார். இருவரிடமும்  ஒன்றும் சொல்லாமல் சிவன் ஜோதி ரூபமாக விண்ணையும் பாதாளத்தையும் தொட்டபடி நின்றார். ”என் அடிமுடியை அறிந்து சொல்பவரே பெரியவர்” என்று ஜோதியில் இருந்து சக்தி வாய்ந்த அசரீரி புறப்பட்டது.