கர்வம்
அழிந்த இந்திரன்.
பதவி என்பது எப்பேர்ப்பட்டவரையும் ஆணவம் கொண்டவராக்கிவிடும்
தன்மை வாய்ந்தது. சாதரண பதவி கிடைத்தவர்களே இப்படி என்றால் அமரர்களுக்கெல்லாம் தலைவனாகும்
பதவி கிடைத்த இந்திரனுக்கு ஏற்பட்ட கர்வமும் அது எப்படி நீங்கியது என்பதையும் பார்ப்போம்
குழந்தைகளே.
அமராவதிபட்டிணத்தை ஆண்டுவந்த இந்திரனுக்குத் தான் எல்லாரினும்
மேம்பட்ட பதவி வகிப்பவன், தேவலோகத்தின் அதிபதி என்ற மண்டைக்கர்வம் ஏற்பட்டது. அதனால்
அனைவரையும் உதாசீனப்படுத்திவந்தான். அமிர்தம் அருந்தியதால் தான் இறப்பற்றவன், ஈரேழு
பதினான்கு லோகத்திலும் அதிகமான சம்பத்துக்களை உடையவன் என்ற இறுமாப்பில் இருந்தான்.
இந்திரசபையில் அவனுக்குக் கீழ்தான் அனைத்து தேவர்களும் கிரகங்களும்
அமர்ந்திருப்பார்கள். ரம்பா, ஊர்வசி, மேனகை, திலோத்தமை, அப்ஸரஸ் கன்னிகளும் ததாஸ்து
தேவதைகளும் அவனது கையசைவுக்குக் காத்திருப்பார்கள். கலா நிகழ்ச்சிகளும் கேளிக்கை கொண்டாட்டங்களும்
அவன் விருப்பப்படிதான் நடந்துவந்தன. இப்படி இருக்கும்போது அவன் தன்னை விண்ணளவு அதிகாரம்
கொண்டவனாக நினைத்துக் கர்வம் கொண்டான்.