எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
பிரம்மகபாலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிரம்மகபாலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 4 மார்ச், 2020

பசியில் குதித்த பிரம்மகபாலம். தினமலர் சிறுவர்மலர் - 54.

பசியில் குதித்த பிரம்மகபாலம்
பசி வந்திடப் பத்தும் பறந்து போகும் என்றொரு பழமொழி உண்டு. இது மனிதர்களுக்குத்தான். ஆனால் ஒரு கபாலத்துக்குப் பசித்தது. அதனால் அது போட்டது அனைத்தையும் தின்று தீர்த்தது. சிவனுக்கு இட்ட உணவை எல்லாம் பகாசுரன் மாதிரி அதுவே அனைத்தையும் தின்றதால் சிவன் பசியால் துடித்தார். அதுவோ அனைத்தையும் தின்றும் பசியில் குதித்து அழிந்தது. அது என்ன கதை என்று பார்ப்போம் குழந்தைகளே.
ஒரு முறை காசியில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. அப்போது அன்னை உமையவள் பரிவு கொண்ட மனத்தோடு அனைவருக்கும் உணவு வழங்கி வந்தாள். அதனால் காசி மாநகர மக்கள் பசிப்பிணி நீங்கி வாழ்ந்து வந்தனர். அன்னை உமையவளின் கணவர் சிவன் விளையாட்டாக அவளிடம் “உணவு என்பது மாயை” என்று கூற அன்னையோ ”உணவு இல்லாமல் உலகம் இல்லை. உங்களுக்கு உணவின் அருமை ஒருநாள் தெரியும் ” என்று கூறி கோபிக்கிறார்.