எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
99 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
99 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 28 நவம்பர், 2018

விவசாயக்கூட்டமைப்பு சபையின் அவசியமும் வாசகசாலையின் அத்யாவசியமும்.

1961. விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்குமா. தென்னை வாழை இதுக்கெல்லாம் இன்சூரன்ஸ் எடுக்கலாம், எடுத்திருந்தா ஒரு பங்குப் பணமாவது திரும்பக் கிடைக்கும் என்பது தோப்பு உள்ளவர்களுக்குத் தெரிந்திருக்குமா. விவசாயிகள் நிலை கவலைக்குரியது. இவை நிலைபெற மூன்று நான்கு ஆண்டுகள் ஆகலாமாம். அதுவரை எதைப் பற்றிக்கொண்டு இவர்கள் வாழ்வார்கள். மத்திய அரசும் மாநில அரசும் களப்பணியை முடுக்கிவிட்டு நிவாரணம் மேற்கொள்ளவேண்டும். தகுந்த உதவித் தொகையும் சில ஆண்டுகள் வழங்க வேண்டும்.

#எல்லா விவசாய கிராமங்களிலும் விவசாய கூட்டமைப்பு சபை வேண்டும். அது பயிர்பாதுகாப்பு, விதை நேர்த்தி, உரம், பூச்சிமருந்து விழிப்புணர்வு, நீர் உபயோகம், இன்சூரன்ஸ் பற்றிய தகவல்களை விவசாயிகளுக்கு அறிவுறுத்துவதாகவும் அமைய வேண்டும். மேலும் அரசே இவர்களின் நிலங்களின் அளவு பொறுத்தும் பயிரிடும் பயிர்கள்/செடிகள்/மரங்கள் பொறுத்தும் மிகக்குறைந்த அளவு இன்சூரன்ஸ் தொகை பிடித்து அதை அவர்கள் நஷ்டப்படும்போதும் ( MASSACRE ) இயற்கைப் பேரிடர் நேரும்போதும் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும். 

#இது எனது கோரிக்கை. 

1962. வண்ணமயமான மதியப்பொழுது
என்னை நிறைத்திருந்தது.
சூரியக் கலவையில்
இறகுகள் ஒளிர்ந்திருந்தன.
பூமியின் பசுங்குளிர்
நாசியெங்கும் நிறைய
பறக்கத்தொடங்கி இருந்தேன்.
தேன்நிறைந்த பூவில்
செம்மாந்து ஓய்வெடுத்தேன்.
திப்பியாய் ஒட்டிக்கொண்டன கால்கள்.
பறக்கத்துடிக்கும் மனதை
பசையாய்ப் பிடித்திருக்கின்றன இதழ்கள்.
சூரியன் கவிழும் நேரத்துக்காய்க்
காத்திருக்கிறேன்
குவியும் இதழ்களுக்குள்
உயிர் உணவாய்ச் சிறைப்பட

1963. உள்ளன்போடு பழகுபவர்களை ஒருபோதும் இழந்துவிடாதீர்கள். நம் உயிர்ப்பை நம்மைவிட நேசிப்பவர்கள், நம் இருப்பைக் கொண்டாடுபவர்கள் அவர்களே. !