அகத்திணை மரபுகள்
:-
1.அகத்திணைப்
பாடல்களில் ஒருவரின் பெயர் சுட்டப் பெற்றிருக்காது.
“சுட்டி ஒருவர்
பெயர் கொளப் பெறாஅர் “ என்பது அகத்திணைப் பாடல்களுக்குள்ள சிறப்பு மரபாகும்.
2.இது ஒரு குறிப்பிட்ட
காலகட்டத்துக்குள் மட்டுமே வாழும் தலைவன் தலைவியருக்கு அன்றி அனைத்துக் காலகட்டத்துக்கும்,
அனைத்துத் தலைவன் தலைவியருக்கும் அன்பு கொண்டோர் அனைவருக்கும் பொதுவானதாகும்.
3.ஆண்கள் மடலேறுவதாகக்
குறிக்கப்படுமே தவிர பெண்மக்கள் மடலேறுவதாகக் குறிக்கப்படமாட்டாது. பெண்கள் மடலேறுவது
முறையன்று.