எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
சாரதா ராமநாதன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சாரதா ராமநாதன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 20 ஏப்ரல், 2021

லெதர் தொழில் பற்றி சாரதா ராமநாதன் அவர்களுடன் ஒரு பேட்டி.

லெதர் தொழிலில் வெற்றி பெற ரகசியங்கள்

பெண் தொழில் முனைவோர் சாரதா ராமநாதன் அவர்களுடன் பேட்டி

 

பேட்டி, கட்டுரை: தேனம்மை லெட்சுமணன், காரைக்குடி

 

++++++++++++++++++++

எப்போதிலிருந்து லெதர் கம்பெனி நடத்தி வருகிறீர்கள் ?

 

நாங்கள் 2008 ஆம் ஆண்டு முதன் முதலில் மெஷினரி   வாடகைக்கு எடுத்து நடத்தி வந்தோம். பின்னர் 2009 ஆம் ஆண்டு lease-க்கு நடத்தி வந்தோம். 2010 ஆம் ஆண்டு சொந்தமாக கட்டிடம் கட்டி மிஷின்கள் சொந்தமாக வாங்கி தொடங்கினோம்.

 

இந்த வியாபாரத்தில் ஈடுபடத் தூண்டுதலாய் இருந்தது எது?

 

என் கணவர் இத்துறையில் 15 வருட அனுபவம் பெற்றவர். நான் இத்துறையில் அக்கவுண்ட்ஸ் வேலையில் 3 வருட அனுபவம் பெற்றேன். இருந்த அனுபவத்தால் நாங்கள் இணைந்து தொழில் தொடங்குவோம் என்று முடிவு செய்தோம். இந்தத் தொழிலில் எங்கள் இனத்தவர்கள் மற்றும் எங்களுக்குத் தெரிந்தவர்கள் சாதரணமாக வந்து வேலை கற்றுக் கொண்டு இன்று மிகப் பெரிய அளவில் தொழில் செய்வதைப் பார்த்து நாங்களும் தொழில் செய்யலாம் என்று முடிவு செய்தோம்.