யூரோப் டூரின் நான்காம் நாள் இத்தாலி வந்தடைந்தோம். வெனிஸை சுற்றிப் பார்த்தபிறகு ஐந்தாம் நாள் காலையில் ரோம் நகரத்தையும் மதியத்தில் வாடிகன் சர்ச்சையும் காணச் சென்றோம்.
கத்தோலிக்கக் கிறிஸ்துவர்களின் புனித நகரம். போப்பின் தனியாட்சிக்கு உட்பட்ட தனிதேசம் வாடிகன். இதற்கென்று தனி ரயில் நிலையம், தனி போஸ்ட் ஆஃபீஸ், முத்திரைகள், நாணயங்கள் உண்டு. இந்தத் திருச்சபை, புனிதர்கள், அற்புதங்கள் சம்பந்தமாக நூலகமும், அருங்காட்சியகமும் கூட உண்டு.
எனக்கு போப் இரண்டாம் ஜான் பால், புனித ஃப்ரான்ஸிஸ் ஆகிய போப்பாண்டவர்களை செய்திகள் மூலம் பரிச்சயம் உண்டு. ஆனால் அங்கே 250 க்கும் மேற்பட்ட ( 266) போப்பாண்டவர்கள் இருந்திருக்கிறார்கள்.
