எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 27 ஜூன், 2020

வாரா வாரம் ஆரவாரம்.

2681. ஆதிசங்கரர் கனகதாரா ஸ்தோத்திரம் பாடி லெக்ஷ்மி தங்க நெல்லிகனி பொழிந்த கதையும், பட்டினத்தார் கதையும், சபரியின் கதையும் என்றுமே அலுப்பதில்லை. துறவு என்பது அவ்வளவு எளிதானதுதானா ? அதிலும் சபரியின் பக்தி பற்றிச் சொல்ல வார்த்தைகள் இல்லை..

2682. தத்வமஸியாக இருக்க விரும்புகிறோம்.. நிஜத்தில்.. நாமும் காமக் க்ரோத லோப மத மாச்சர்யங்களில் சிக்கிச் சீரழிகிறோம். தெய்வதத்தை உணர்கிறோம். ஆனால் அதாகவே மாற எத்தனை கல்பகோடி காலமோ.. எத்தனை பிறவியோ..

2683. பள்ளியில் தவறு செய்தால் முட்டி போடுவோம். பிரார்த்தனையின் போது முட்டி போடுவோம். இங்கே ப்ராணனை எடுக்க முட்டி போட்ட காட்சி கொடூரம். கொரோனா அவலங்களை திசைதிருப்ப ஒரு உயிரை பலியாக்கிட்டாங்களா ? இரவு முழுதும் தூக்கமில்லை. என்ன வாழ்க்கை இது. ? எங்கோ தொடங்கி எங்கோ முடியுது.

2684. நட்டநடு ரோட்டுல நாலு பாவிங்க கழுத்துமேல முட்டிய வச்சு கொல்ற வீடியோ.. பதறுது பாவிகளா. என்னாலயும் மூச்சுவிட முடில.. அப்பிடி என்ன கொலவெறி..

2685. ஒரு ஆட்டுக்குட்டி மாதிரி அந்தாள் செத்துப் போனான் . இப்ப நெனைச்சாக்கூட விதிர்விதிர்க்குது. ஒரு மாதிரி குழப்பமா இருக்கு. எந்த உறுத்தலுமில்லாம ஒருத்தன் மேல எப்பிடி முட்டி போட முடியும். அந்த முழங்காலை எல்லாம் வெட்டி எறியணும்னு கூட அன்னிக்குக் கோவம் வந்தது.

2686. இப்பிடி ஒண்ணுல உட்கார்ந்து போனா கொரோனா தொற்று ஏற்படாது.

2687. ப்லாகர் டேஷ் போர்டை மாத்தி, லே அவுட்டையும் மாத்திட்டு அரை நாளா அதையே உத்துப் பாத்துட்டு இருந்தேன். இப்பத்தான் கொஞ்சம் புரிபட்டிருக்கு. 
அப்பா.. நமக்கே நமக்குன்னு இருக்குற சொத்து அது. 

2009 லேருந்து சின்னச் சின்ன மாற்றங்கள் வந்துக்கிட்டுத்தான் இருந்துச்சு. ஆனா இப்போ டேஷ்போர்ட் அமைப்பே வித்யாசமா இருக்கு. 

ஜூன் கடைசில கண்ணு தெரியாதமாதிரி முழிச்சிட்டு இருக்குறவிட இன்னிக்கே மாத்திடலாம்னு சக வலைப்பதிவர்களுக்கு ஃபோனைப் போட்டுக் கொடைச்சல் கொடுத்திட்டு இருந்தேன் வேற. :) 

ஒரு ஷெட்யூல்ட் போஸ்டை போட அரை நாளா ட்ரை பண்ணி வேற ஒண்ணை கடைசியா பப்ளிஷ் பண்ணிட்டேன். ஹிஹி. 

2688. ப்லாகர் பற்றிப் பல்வேறு தொழில்நுட்பத் தகவல்களை ஏறக்குறைய ஒருமணி நேரமாக சொல்லி விளங்க வைத்த திண்டுக்கல் தனபாலன் சகோவுக்கு நன்றி :) 

ட்ரை பண்ணுங்க பாத்துக்கலாம் என்று தைரியமூட்டிய தோழி ராமலெக்ஷ்மிக்கும் நன்றி :)

2689. கொரோனா வருதோ இல்லியோ, (எதுனால போய்ச் சேரப் போறோங்கிறது கடவுளுக்கே வெளிச்சம்) வாராவாரம் எதுனாவது வந்துருது.

கட்டில் கால்ல விரல இடிச்சிக்கிட்டு அது வெட்டுக்கிளி மாதிரி துடிக்க ரத்தம் கொட்டோ கொட்டுன்னு கொட்டுச்சு.. அது போன மாசம்.

அதுக்கு முன்னாடி ஆசப்பட்டுப் போட்டுக்கிட்ட நெய்யோ என்னவோ பிபி எகிறி தலைய திருகுற மாதிரி வலி. படுத்தாலும் வடிவேலு கொண்டை மாதிரி தலைய கோணல் மாணலா நாலாபக்கமும் சித்திரக் குள்ளர்கள் பிடிச்சு இழுக்குற மாதிரி அவஸ்தை. அது அதுக்குப் போன மாதம்.

ஒரு வாரமா முச்சுக்குத்துப் பிடிச்சுக்கிட்டு நான் அத எத்த அது என்னக் குத்தன்னு ஒரே இம்சை.

இத்தனை களேபரத்துலயும் ஹாஸ்பிடல் பக்கமே போகல. கை வைத்தியம், கால் வயித்தியம்னு பண்ணிப் பிழைச்சுக் கிடக்கோம்.

பார்ட் பார்ட்டா படுத்தாம கொரோனா பீதியில்லாம தூங்கும்போதே போயிட்டம்னா நல்லாருக்கும்.

அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிதுன்னு சொன்னது யாருப்பா.. ஒரே இடரா இருக்கே

2690. பத்தாண்டுகளுக்கு முன்பு திரைத்துறை சார்ந்த நண்பருடன் உரையாடும்போது சொன்னார், " புத்தகம் பத்தி எழுத சொன்னா நாலு பக்கமில்ல, நாப்பது பக்கம் கூட எழுதிக் கொடுப்பாரு அவரு. அதுல நாலு வரி தவிர மிச்சதெல்லாம் நமக்குத் தெரியாத புது தகவலாதான் இருக்கும். அவ்ளோ வொர்க் பண்ணுவாரு அவரு"ன்னு.

2691. கவசம் தேவைன்னு ஒருத்தர் நினைக்கிறது தப்பில்லையே. அவரது புனைவுகளில் சிலது பிடிக்கும். சிலது பிடிக்காது. விலகி இருந்து சாதிச்சுக் காட்டுங்கன்னு அவரோட இருக்குறவங்களுக்குதான் சொல்றார்னு தோணுது.

2692. விக்கிபிடியால அங்கே இங்கே தகவல் திரட்டி எழுதுறாருன்றாங்க. எதையும் பாக்காம படிக்காம தெரிஞ்சுக்காமத்தான் இங்கே எல்லாரும் சுயம்புவாவே எழுதுறாங்களா. அதுலயும் தகவல் முழுமையா இல்லைன்னு குறை வேற. அது என்ன புனைவா இல்ல ஆவணமா

கடித வெளியீடு அரசியல் எல்லாம் தெரியல. ஆனால் எழுத்துலகில் தொடர்ந்து செயல்பட்டு வருவதில் அவர் மாஸ்டர்தான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

2693. பைபாஸ்ல கூட குட்டிக் குழந்தைங்க ஜட்டிய காயவச்சாப்புல தொங்கிட்டு இருக்கு கலர் கலரா மாஸ்க்.

2694. சென்னையிலிருந்து ஒன்றிரண்டு உறவினர்கள் குடும்பத்தோடு ஊருக்கு வந்துவிட்டார்கள். சென்னை மக்காஸ் பத்ரம்.

2695. பெரியவர்களாகவே ஆகிவிட்டாலும் நம்முள் இருக்கும் குழந்தைக்கு விட்டுக் கொடுக்கத் தெரிவதில்லை.

- நகுலனின் குழந்தைகள் படித்தேன். என் பெரியமகன் ஒரு முறை சொல்லியது ஞாபகம் வந்தது. " நம்ம புள்ளைதானேன்னு விட்டுக் கொடுக்காம போட்டி போட்டு விளையாடிட்டு இருப்பீங்க. நீங்க எங்கள விட சின்னப்புள்ளைம்மா 

2696. 50 வயதில் எல்லோருக்கும்தான் நிழல் கவிழ்ந்து விடுகிறது. தனிமையின் நிழல், முதுமையின் நிழல், மரணத்தின் நிழல்.. அகவயமாதல் இப்போதுதான் அதிகம்.

2697. ஒன்றின் பரிச்சயத்தில் ஒன்றின் சாயலில் தொடரும் முன்னொரு நாட்கள், முன்னொரு ஆட்கள்.

2698. பாதிக்குமேல் முற்சம்பவங்களாலேயே கரைந்து கொண்டிருக்கிறது வாழ்க்கை. எது சாயை எது நாம் ?

2699. இருப்பிலேயே இருப்பற்றவர்களோடு கலந்து ஆழ்த்துகிறது கனவு.

2700. அன்ஃபாலோ பண்றனா அன்ஃப்ரெண்ட் பண்றனான்னு தெரியாம வேகமா ஏகப்பட்ட பேரை ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட்லேருந்து எடுத்துருக்கேன். ஹாஹா மன்னிச்சு மக்காஸ் 

டிஸ்கி :-



4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும். 

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும். 

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  











































74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.

75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.

76. இழிவரலும் வீரமரணமும்.  

77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்


































121. டியட்ரோ டி மார்செல்லோவும் மெஹ்திப்பட்டினமும்.

122. தனிமைக்குப் பயப்படும் மனிதரும் மனங்களில் இடம்பிடித்த மாமனிதரும்.

123. கர்நாடகா விசித்திரங்களும் செகுலார் தேசமும்.

124. வள்ளுவர் அறிவகம் இராம்மோகன் ஐயாவும் காந்திய சிந்தனையாளர் ம. பா. குருசாமி ஐயாவும்.

125. மூன்று சகோதரர்களும் மூன்று பிரபலங்களின் பொன்மொழியும்.

126. செடிக்கன்னியும் சுயமோகமும்.

127. புஸ்தகாவும் ராயல்டியும்.

128. சயிண்டிஃபிக் கால்குலேட்டரும் ஸ்பேஸ் ஸ்டேஷனும்.

129. குறவஞ்சியும் காய்கறித் தோரணமும்.

130. பதினைந்து லட்சமும் பரிவட்டமும்.

131. ஓங்காரக் கூவலும் அடிபட்ட புறாக்களும்.

132. கிருமிகளும் கொரோனா போராளியும்.





137. 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...