எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 16 ஏப்ரல், 2026

முதலாம் அத்யாயம், இரண்டாவது ஸ்லோகம்

முதலாம் அத்யாயம், இரண்டாவது ஸ்லோகம்

 

    அதீதி ஏதம் ததா சாஸ்த்ரம்

நர: ஜானாதி ஸத்தம: l

    தர்ம உபதேச விக்யாதம்

கார்ய அகார்ய சுபம் அசுபம் ll

 

பொருள்:-

அதீதி = அதீதமாக, ஆழமாக

ஏதம் ததா சாஸ்திரம் = இந்த சாஸ்திரத்தைப் பயின்றால்

நர: = நரர்கள்

ஜானாதி ஸத்தம: = சாதாரண மனிதர்கள், வெகுஜனம்

தர்ம உபதேச = தர்ம நியாய உபதேச

விக்யாதம் = விளக்கம் கிடைக்கப் பெறுவான்

கார்ய அகார்ய = உகந்த காரியம்/வேலை, தேவையில்லாத செய்கை/வேலை,

சுபம் அசுபம் = நலம்தரும் விஷயம், தீமை பயக்கும் விஷயம்

 

விளக்கம்:- சாதாரண மனிதர்கள் கூட ( வெகு ஜனக் கூட்டம்) இந்த சாஸ்திரத்தை ஆழ்ந்து படித்தால் தர்மம் எது நியாயம் எது, தாம் செய்ய உகந்த காரியம் எது, செய்யத்தகாத வேலை எது , நலம் பயக்கும் விஷயம் எது, தீமை பயக்கும் விஷயம் எது எனப் பகுத்துணர்வார்கள். அவர்களுக்கு இதைப் பயிலும்போது தர்ம நியாய உபதேசம் பற்றிய விளக்கம் கிடைக்கப் பெறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...