எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 15 ஜூலை, 2010

எழுத்தாளர் என்றொரு இனம்..

சமூகத்தால் மட்டுமல்ல..
குடும்பத்தாலும் ஒதுக்கி
வைக்கப்படும் இனம்..

வாழ்க்கையை வாசிக்கத்
தெரிந்த அளவு பொருட்களை
நேசிக்கத் தெரியாமல்,

சுஜாதாவோ., தஸ்தாவ்யெஸ்கியோ.,
பேரும் புகழும் சேர்த்து
பணம் சேர்க்காமல்..

சேர்க்கத் தெரிந்தவன்
வியாபாரியாய்...
பட்டம் சூட்டி இறக்கப்பட்டு.,


சண்டையும் சச்சரவும்
பரம்பரைச் சொத்து...
தீராமல்.. வலைத்தளம் வரை..

எழுத்தாணியின் கூர் நாவு
இன்று வலைத்தளத்தில்
வார்த்தை வாளாய்..

கனவுகளை சூலுற்று.,
கருத்துக்களை பிரசவித்து.,
காதலுணர்வைக் காதலித்து..
கொடும் நெருப்பாயும் உமிழ்ந்து...

வார்த்தை விளையாட்டுப் பயின்று
வாழ்க்கை விளையாட்டில் முயன்று..
வெற்றிக்கு ஏங்கி..

யாமார்க்கும் குடியல்லோம்...
எவர்க்கும் அஞ்சோம்..
எழுத்திருக்கும் வரை
உயிர்த்திருப்போம்..

டிஸ்கி:- 1. இன்று நான் வலைத்தளம் ஆரம்பித்து ஒரு வருடம் ஆகிறது.. சும்மாவின் முதல் பிறந்த நாள் மக்காஸ்.. உங்க ஆசீர்வாதத்தை அள்ளி வழங்குங்க..

டிஸ்கி:- நேற்று என் பிறந்த நாளில் என்னை ஆர்குட்டில்., ஜி மெயிலில்., யாஹூவில்., முகபுத்தகத்தில் வாழ்த்திய (400 பேருக்கும் மற்றும் வாழ்த்த நினைத்த மிச்ச 800 பேருக்கும் ) ., என் புகைப்படத்தை தங்கள் ப்ரொபைல் படமாக்கிய அன்பு அம்மு., வாணி., பாபுவுக்கும்.,(அமுதா தமிழ்., வாணி மல்லிகை, பாபு பழமலை) ., என் ஒப்புமையை ப்ரொபைல் படமாக்கிய பூவலூர் ஸ்ரீஜிக்கும் ..ஸ்பெஷல் விருந்து கொடுத்த .,கயல்., வசு., செல்வா., அன்பு., வெற்றிக்கும்., புத்தகப் பரிசு கொடுத்த தம்பி வேடியப்பனுக்கும் (டிஸ்கவரி புக் பேலஸ்) ., அன்பு நண்பர் விகடன் பொன். காசிராஜனுக்கும் ., ஸ்பெஷல் கேக் கொடுத்த என் மூத்த மகன் வெங்கட்டுக்கும்., நடு இரவு போன் செய்த என் சின்னப் பையன் சபாவுக்கும்.. போனில் வாழ்த்துப் பாடிய அம்மா., அப்பாவுக்கும்., என் நட்புக்களுக்கு என்னுடன் மதிய விருந்து அளித்த என் அன்புக் கணவருக்கும்.. நன்றி என்ற ஒற்றைச் சொல் போதுமா..?? என் அன்பு அனைத்தும் அனைவரையும் வியாபிப்பது தவிர ...

39 கருத்துகள்:

  1. மென் மேலும் பல நல்ல படைப்புகளை குடுக்க வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  2. பிறந்த நாளில் என் இனிய நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  3. டிஸ்கிய தனியா போட்டு இருக்கலாம்

    பதிலளிநீக்கு
  4. உங்களுக்கும் வலைதளத்துக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. தேனம்மை.:)

    பதிலளிநீக்கு
  5. இனப் பிரிவினையை கண்டிக்கிறேன்.

    வாழ்த்துகள். தொடர்ந்து வாகை சூடுங்கள்.

    பதிலளிநீக்கு
  6. பிறந்தநாள் வாழ்த்துக்கள... வலைதளத்துக்கும் ,உங்களுக்கும்

    பதிலளிநீக்கு
  7. முதல் வருட கொண்டாட்டத்துக்கு வாழ்த்துக்கள் தேனக்கா..!

    பதிலளிநீக்கு
  8. பிறந்த நாள் வாழ்த்துக்கள்,
    உங்களுக்கும், உங்கள் வலைதளத்துக்கும்.

    பதிலளிநீக்கு
  9. சும்மா பிறந்த உங்கள் வளை பக்கத்திற்கும் சாதிக்க பிறந்த உங்களுக்(தெவிட்டாத தேனக்கா )கும் என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்....

    பதிலளிநீக்கு
  10. உங்களுக்கும், உங்கள் வலைதளத்துக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் தேனக்கா.

    பதிலளிநீக்கு
  11. பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    என் பார்வையில் முதல் பார சரி இல்லை என்று நினைக்கிறேன்

    சுஜாதா விற்கும், பாலகுமாரனுக்கும், வாசந்திக்கும், மாலனுக்கும், vanna dasanukkum வீடு தான் பெரும் ஆதரவு தந்தது.

    ஒரு மென்பொருள் வியாபாரியின் குடும்பத்தை விட இந்த எழுத்தாளர்களின் குடும்பம் மிக
    அருமையாக இருக்கிறது.,
    இவர்களை யாரும் ஒதுக்கி வைக்க வில்லை

    பதிலளிநீக்கு
  12. வாழ்த்துக்கள் தேனம்மை..ஒரு வருடத்தில் இவ்வளவு நண்பர்களையும் பின்பற்றுபவர்களையும் பெறுவது என்பது சாதரணம் அல்ல..அதற்கு முழுத் தகுதி உங்களுக்கு உண்டு. மிக அழகான கவிதைகள் எழுதி எங்களை மகிழ்வித்த தாங்கள் தொடர்ந்து எழுதுங்கள்..அதுதான் நீங்கள் எங்கள் அன்பிற்கு காட்டும் நன்றி..எங்கள் ஆதரவும் அன்பும் என்றும் உண்டு வாழ்த்துக்கள் வரப்போகும் வெற்றிக்கு

    பதிலளிநீக்கு
  13. வாழ்த்துக்கள் தேனம்மை..ஒரு வருடத்தில் இவ்வளவு நண்பர்களையும் பின்பற்றுபவர்களையும் பெறுவது என்பது சாதரணம் அல்ல..அதற்கு முழுத் தகுதி உங்களுக்கு உண்டு. மிக அழகான கவிதைகள் எழுதி எங்களை மகிழ்வித்த தாங்கள் தொடர்ந்து எழுதுங்கள்..அதுதான் நீங்கள் எங்கள் அன்பிற்கு காட்டும் நன்றி..எங்கள் ஆதரவும் அன்பும் என்றும் உண்டு வாழ்த்துக்கள் வரப்போகும் வெற்றிக்கு

    பதிலளிநீக்கு
  14. @@@தமிழ் உதயம்--//பிறந்தநாள் வாழ்த்துக்கள... வலைதளத்துக்கும் ,உங்களுக்கும் //

    ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்

    பதிலளிநீக்கு
  15. வாழ்த்துக்கள். தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  16. ஆகா ரொம்ப மகிழ்ச்சியாய் இருக்கிறது.

    தமிழ் உதயம், உங்கள், புலவன் புலிகேசி மூவரின் வளர்ச்சியையும் ஒரே பார்வையில் பார்த்துக் கொண்டு இருக்கின்றேன்.

    மூவரும் மிக நல்ல முன்னேற்றம்.

    நீங்கள் மட்டும் இன்னும் என்னைப் போலவே தொழில் நுட்ப மற்றும் அலங்கார வேலைகளில் கவனம் செலுத்தாமல் எழுதுவதில் மட்டுமே நல்ல கவனம் செலுத்துவதும் நான் கவனித்தபடியே தான் இருக்கின்றேன்.

    உங்கள் வெகுஜன ஆதரவை பார்த்து பல சமயம் ஆச்சரியப்பட்டு உள்ளேன்.
    வாழ்த்துகள் தேனம்மை.

    உங்களை வாழ்த்திய உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும், உங்களை வளர்த்துக் கொண்டுருக்கும் வெகுஜன ஊடக மக்களுக்கும் வலை உலக உங்கள் ரசிகர்களும், உங்கள் எழுத்துப் பணிக்கும் தேவியர் இல்லத்தின் வாழ்த்துகள்.


    பேரும் புகழும் சேர்த்து
    பணம் சேர்க்காமல்..

    இது போன்ற நிதர்சன வார்த்தைகள் தான் உங்கள் பின்னால் வரவழைத்துக் கொண்டுருக்கிறது.

    பதிலளிநீக்கு
  17. //பேரும் புகழும் சேர்த்து
    பணம் சேர்க்காமல்.. //

    gr8 sister

    Happy Birthday :-)

    பதிலளிநீக்கு
  18. Happy 1st Blog anniversay Akkaa..
    I am really happy for you :-))

    wishing for your continuous success...!! ;-))

    பதிலளிநீக்கு
  19. உங்கள் நட்பிற்கு ஒரு விருது வழங்கி இருக்கிறேன்..
    பெற்றுக்கொள்ளுங்கள்.. :-))

    http://anbudanananthi.blogspot.com/2010/07/blog-post_15.html

    பதிலளிநீக்கு
  20. இன்னும் பல வளமும் நலமும் இறைவன் வழங்க பிரார்த்திக்கிறேன். மகிழ்ச்சி பொங்கட்டும். :) வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  21. அடடா உங்க பிறந்தநாளா சொல்லவேயில்லை. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்!!!!!

    பதிலளிநீக்கு
  22. மனமார்ந்த வாழ்த்துக்கள்

    மேன்மேலும் உங்கள் படைப்புகள் சிறக்க வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  23. ரெண்டு பிறந்த நாளுக்கும் சேர்த்து ஒன்னா வாழ்த்திக்கிறேன்.

    நல்லா இருங்க.

    பதிலளிநீக்கு
  24. நல்ல முயற்சி தொடரட்டும் .....
    வாழ்த்துக்கள் ....

    ஒரே ஒரு கேள்வி
    எழுத்தாளர்கள் எல்லாம் தாங்கள் கூறியது போலவா இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  25. கவிதை எல்லாம் சரி தேனம்மை,
    ஆசியாவிலெயெ இரண்டாவது
    பணக்காரக் குடும்பம் ஒரு
    எழுத்தாளரின் குடும்பம்....
    தெரியுமா...?
    தஸ்தாவ்யெஸ்கி....
    பாரதி...
    கண்ணதாசன்...
    அதெல்லாம்
    பொழைக்கத்தெரியாத
    பயபுள்ளைக...
    நம்ம மேற்படி எழுத்தாளர்,
    வைரமுத்து,வாலி,..
    இப்படி உதாரணங்களை
    பின்பற்றுங்க பாஸ்...
    "சும்மா"க்கு
    என் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  26. எங்கே சுத்தினும் ரங்கனை சேவி ன்னு சும்மாவா சொன்னாங்க:-))

    பதிலளிநீக்கு
  27. மீண்டும் வாழ்த்துக்கள்..மேடம்

    பதிலளிநீக்கு
  28. பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  29. வாழ்த்துக்கள்ங்க!

    கவிதை மிக அதிகமாக, அழுத்தமாக மிளிருகிறது...!
    அதற்கு ஒரு தனி வாழ்த்து!

    பதிலளிநீக்கு
  30. தோள்ப்பட்டையில் மடிக்கணினியை சுமந்து மென்பொருள் விற்கச்செல்லும் என் பார்மல் சட்டையின் கசகசப்பில் தினமும் அடங்குகிறது என் தமிழார்வம்... என் செய்வேன் அக்கா?

    பதிலளிநீக்கு
  31. முதல் வருடத்திற்க்கு வாழ்த்துக்கள் அக்கா..

    பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    சற்று தாமதமாக சொல்கிரென் சிறிய
    வருத்தம் இருக்கத்தான் செய்கிரது

    பதிலளிநீக்கு
  32. நன்றி கார்த்திக்.,நிஜாம்., ஜமால்., முத்துலெட்சுமி.,ராதாகிருஷ்ணன்., ரமேஷ்.,சரவணன்.,அம்பிகா., கனி., கண்ணகி.,ரிஷான்., நேசன்., குமார்.,
    கதிர்., ராம்ஜி., வெற்றி.,ஜெய்., மாதவராஜ்., ஜோதிஜி.,கார்த்திக் சிதம்பரம்., மாகி., ஆனந்தி.,வித்யா., அபி அப்பா., வேலு.,துளசி கோபால்., நாதன்.,அக்னி., அரவிந்த்.,கேபிள் சங்கர்., ரிஷபன்., சுரேகா.,க்ரெஸன்., செந்தில் குமார்..

    பதிலளிநீக்கு
  33. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...