எனது பதிநான்கு நூல்கள்

வியாழன், 1 ஜூலை, 2010

ஜூலை மாத லேடீஸ் ஸ்பெஷலில் சஷிகா., வாணி., ருக்மணி அம்மா., சித்ரா நாகப்பன் மற்றும் நான்..

ஹலோ மக்காஸ்.. அதுக்குள்ள அடுத்த மாத லேடீஸ் ஸ்பெஷல் வந்துருச்சு.. நாளும் கிழமையும் பறக்குது மக்காஸ்.. என்னோட நெட் போதை கவிதை வந்து இருக்கு..

இந்த மாதம் நம்ம சஷிகாவோட ஓட்ஸ் கலாகண்ட்டும்., கறிவேப்பிலை சாதமும்., பார்லி பெசரட்டும் சுவைத்துப் பாருங்கப்பா...

வயசாயிருச்சு கை வலி., கண்ணு வலின்னு சொல்றவங்க இணையத்தில் கதை சொல்லும் இனிய பாட்டியைப் படிச்சுப் பாருங்க .... அவங்க பேர் ருக்மணி சேஷசாயி.. மிக இனிமையானவங்க.. என்றும் இளமையானவங்க .. வயசு ஒண்ணும் அதிகமில்லை மக்காஸ் .. 80 ஆகுது.. மனசுக்கு வயசில்லைதானே.. அப்போ சாதனைக்கு.... எல்லையில்லை ..!!!


யங் லேடீஸ் கவிதைப் போட்டிக்கு வந்து குமிஞ்ச கவிதைகள் யம்மா. ..!!
நல்லா எழுது்றாங்க நிறைய பேர் .. சிலது செம்மைப் படுத்தினா அற்புதமா இருக்கும்.. அதுல., வாணி., புனிதா., கவிதா., ஹேமாமாலினி கவிதைகள் அருமை.. வாழ்த்துக்கள்.. இந்த மாதம் இடம் பிடிச்சிட்டாங்க.. அடுத்த மாதம் முயற்சி செய்யுங்கள்.. கண்மணிகளே..

காசு மழை என்ற தலைப்பில போன மாதம் வந்த கேள்விகளுக்கு சித்ரா நாகப்பன் கொடுத்து இருக்குற தீர்வுகளைப் பாருங்க.. இன்னும் உங்க கேள்விகளை எழுதி அனுப்பலாம்.. தொடர்ந்து பதில் அளிக்கத் தயாரா இருக்காங்க..

தொடர்ந்து நிறைய புதுமைகள் செய்து நம்மைப் போன்ற ப்லாக்கர்களை ஊக்குவிக்கும் கிரிஜாம்மாவுக்கு நம் எல்லார் சார்பிலும் நன்றிகள் ...
வாழ்க தமிழ்.. வளர்க.. எழுத்துப்பணி..

18 கருத்துகள்:

 1. லேடீஸ் ஸ்பெஷலில் என்னைப் பற்றி வெளியிட்டதற்க்கு உங்களுக்கும்,ஆசிரியர் கிரிஜாம்மாவுக்கும் மனமார்ந்த நன்றிகள்...ரொம்ப சந்தோஷமா இருக்கு...

  கவிதை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!!

  ருக்மணி பாட்டியின் கதைகளை நிறைய படித்திருக்கேன்....

  பதிலளிநீக்கு
 2. Nice and wishes, can you please give us net edition of Ladies special magazine.
  At least I could pass time by reading that instead of reading Tamilmanam, Tamilish,

  பதிலளிநீக்கு
 3. தொடர்ந்து நிறைய புதுமைகள் செய்து நம்மைப் போன்ற ப்லாக்கர்களை ஊக்குவிக்கும் கிரிஜாம்மாவுக்கு நம் எல்லார் சார்பிலும்

  என் சார்பிலும் நன்றிகள் !

  பதிலளிநீக்கு
 4. நெஞ்சார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தேனக்கா....ரெம்ப மகிழ்ச்சியா இருக்கு அணைத்து சகோதரிகளுக்கும் வாழ்த்துகள்.. கிரிஜாம்மாவுக்கு நம் எல்லார் சார்பிலும் நன்றிகள் ...

  பதிலளிநீக்கு
 5. ################
  உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்..
  http://kjailani.blogspot.com/2010/07/blog-post.html

  அன்புடன் > ஜெய்லானி <
  ################

  பதிலளிநீக்கு
 6. எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள்:)!

  பதிலளிநீக்கு
 7. எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள் கிரிஜாம்மாவுக்கும் உங்களுக்கும் சேர்த்துதான் தேனக்கா.

  பதிலளிநீக்கு
 8. நன்றி மேனகா., ராம்ஜி.,ரிஷபன்., நேசன்., அம்பிகா.,கனி., சரவணா., முனியப்பன் சார்.,சித்ரா ., ஆனந்தி., ஜெய்.,ராமலெஷ்மி., குமார்., அக்பர்.,ராமமூர்த்தி .,விஜய்

  பதிலளிநீக்கு
 9. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...