உப்புரசிக் கிடக்கப் போகும்
மீன்கள் துள்ளலாய்..
பவளப்பாறை ., கடற்குதிரை
அயோடின் கரைசலில்..
மூச்சடங்கி முங்குளித்துப்
பழைய கப்பல் துண்டுகள்..
பாட்டன் பூட்டன் காலத்துக்
கிளியாஞ்சட்டிகள்..
யுகயுகமாய் விழுங்கிய
மக்கள் துகள்..
புகார் தனுஷ்கோடி
மிச்ச சொச்சம்..
கொண்டு செல்லும் வழியில்
கொட்டிக் கவிழ்த்த எண்ணெய்கள்..
அலைகளற்ற இடத்து டால்பின்கள்..
துருவப் பாறைப் பென்குவின்கள்...
விமானங்களும் விண்கோள்களும்
வெடித்து வீசிய வாழ்வுகள்..
ப்ளாஸ்டிக் கழிவுகள்..
பனிமலை கரைந்து..
பாவ அழுக்கு சுமந்து..
சேர்ந்த எச்சங்கள் சேர்த்து..,
கசடான உப்புறைந்த நீர்
அடங்கி அடக்கிக் காத்திருக்கிறது..
எப்போது சுனாமியாகி
எல்லாம் விசிறி எறிவோமென..

மீன்கள் துள்ளலாய்..
பவளப்பாறை ., கடற்குதிரை
அயோடின் கரைசலில்..
மூச்சடங்கி முங்குளித்துப்
பழைய கப்பல் துண்டுகள்..
பாட்டன் பூட்டன் காலத்துக்
கிளியாஞ்சட்டிகள்..
யுகயுகமாய் விழுங்கிய
மக்கள் துகள்..
புகார் தனுஷ்கோடி
மிச்ச சொச்சம்..
கொண்டு செல்லும் வழியில்
கொட்டிக் கவிழ்த்த எண்ணெய்கள்..
அலைகளற்ற இடத்து டால்பின்கள்..
துருவப் பாறைப் பென்குவின்கள்...
விமானங்களும் விண்கோள்களும்
வெடித்து வீசிய வாழ்வுகள்..
ப்ளாஸ்டிக் கழிவுகள்..
பனிமலை கரைந்து..
பாவ அழுக்கு சுமந்து..
சேர்ந்த எச்சங்கள் சேர்த்து..,
கசடான உப்புறைந்த நீர்
அடங்கி அடக்கிக் காத்திருக்கிறது..
எப்போது சுனாமியாகி
எல்லாம் விசிறி எறிவோமென..

rait ,apt reason,why a tsunami can come ,diff thinking , good keep rocking
பதிலளிநீக்கு//பாவ அழுக்கு சுமந்து..
பதிலளிநீக்குசேர்ந்த எச்சங்கள் சேர்த்து..,
கசடான உப்புறைந்த நீர்
அடங்கி அடக்கிக் காத்திருக்கிறது..
எப்போது சுனாமியாகி
எல்லாம் விசிறி எறிவோமென..
//
அருமை
சில நேரங்களில் ஒரு எல்லையிலடங்காமல் இருக்கிறது உங்கள் சிந்தனைகள்
நல்ல கவிதை
பதிலளிநீக்குஇருந்தாலும் மீன்கள், திமிங்கிலங்கள், ஆமைகள் வாழ ஒரு இடம் வேண்டுமே
ரொம்ப நல்லாயிருக்கு அக்கா.
பதிலளிநீக்குவெகு நாட்களுக்கு பிறகு ஒரு அருமையான புரியும்படியான
பதிலளிநீக்குநாம் அழித்துக்கொடிருக்கும்இயற்கையின்
அழகினை அது பொங்கி எழுந்தால் ஏற்படும் கோரங்களை பற்றிய ஒரு
வித்தியாசமான கவிதை
வாழ்த்துக்கள் தேனு தொடருங்கள்!!!!
//கசடான உப்புறைந்த நீர்
பதிலளிநீக்குஅடங்கி அடக்கிக் காத்திருக்கிறது..
எப்போது சுனாமியாகி
எல்லாம் விசிறி எறிவோமென..//உண்மை தானே...அருமையாக இருக்கின்றது...வாழ்த்துகள் அக்கா....
நல்ல கவிதை.
பதிலளிநீக்குChitra Solomon to me
பதிலளிநீக்குshow details 12:50 PM (1 hour ago)
டியர் அக்கா,
உங்கள் பதிவுக்கு என்னால் கமென்ட் போட இயலவில்லை. தமிழிஷ் ப்ரோப்லேம் என்று நினைக்கிறேன். உங்கள் ப்லாக் முழுதும் அப்லோட் ஆக மாட்டேன் என்கிறது. இதோ எனது கமென்ட்:
///விமானங்களும் விண்கோள்களும்
வெடித்து வீசிய வாழ்வுகள்..
ப்ளாஸ்டிக் கழிவுகள்..
பனிமலை கரைந்து..
பாவ அழுக்கு சுமந்து..
சேர்ந்த எச்சங்கள் சேர்த்து..,
கசடான உப்புறைந்த நீர்
அடங்கி அடக்கிக் காத்திருக்கிறது..
எப்போது சுனாமியாகி
எல்லாம் விசிறி எறிவோமென..////
....... அக்கா, ஆழமான வரிகள்! அருமை! பாராட்டுக்கள்!
அருமையான கவிதை
பதிலளிநீக்குசகோதரியே ..
உண்மைதானே ..
இயற்கையின் எல்லைக்கு ஒரு பொறுமை உண்டு
அடங்கி காத்திருக்கும் அதன் பொறுமை பொங்கினால்
சுனாமியாய் சுற்று புறத்தையே சூறையாட நொடிகள் போதுமே ..
அர்த்தமுள்ள கவிதை
அனைவரின் மனங்களிலும்
நன்மையை விதைக்கட்டும் ..
இயற்கையை காப்போம் ..!!!
வாழ்த்துக்கள் சகோ ...
விஷ்ணு
மெல்ல பார்முக்கு வருவது போலத்தெரியுதே :)
பதிலளிநீக்குசந்தோஷம் மகிழ்ச்சி !
நல்லா இருக்கு
சமூக அக்கறையோடு நல்லதொரு கவிதை தேனக்கா.
பதிலளிநீக்குகவிதை நல்லா இருக்கு அக்கா, அப்புறம் ஒரு விஷயம் வந்தேமாதரம் என்று ஒரு ப்ளாக் இருக்கிறது ஞாபகம் இருக்கா, அங்கே உங்கள் தம்பி உங்களுக்காக காத்து கொண்டிருப்பது ஞாபகம் இருக்க ஹா ஹா ஹா
பதிலளிநீக்குvery nice akka!!
பதிலளிநீக்குரொம்ப நல்லாருக்குகா :-).
பதிலளிநீக்குகசடான உப்புறைந்த நீர்
பதிலளிநீக்குஅடங்கி அடக்கிக் காத்திருக்கிறது..
எப்போது சுனாமியாகி
எல்லாம் விசிறி எறிவோமென
அம்மா.. கடலம்மா.. வேணாம் தாயி.. பொறுத்துக்க..
அருமை... தேவையான கவிதை
பதிலளிநீக்குசகோதரி,உங்கள் பேச்சினைப்போல் கவிதையும் ஏக ஸ்பீட்..அருமை.ரசித்தேன்.
பதிலளிநீக்கு///கசடான உப்புறைந்த நீர்
பதிலளிநீக்குஅடங்கி அடக்கிக் காத்திருக்கிறது..
எப்போது சுனாமியாகி
எல்லாம் விசிறி எறிவோமென..////
அருமையான வரிகள் .. அக்கா... :-))
ரொம்ப நல்லாயிருக்கு அக்கா.
பதிலளிநீக்குகவிதை சுனாமி
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
விஜய்
Nice things abt sea Thenammai.You have covered practical things.
பதிலளிநீக்குஉப்பு நீர் தப்பு நீர் ஆகதவரைக்கும் கடலும் திடலும் சார்ந்த கவிதை அருமை தேனக்கா..
பதிலளிநீக்குரசித்தேன்...சித்தேன் த்தேன் தேன்....கவிதை....
வாழ்த்துகள்
\\கசடான உப்புறைந்த நீர்
பதிலளிநீக்குஅடங்கி அடக்கிக் காத்திருக்கிறது..
எப்போது சுனாமியாகி
எல்லாம் விசிறி எறிவோமென\\
நிஜம்தான்.
நல்ல கவிதை.
sutrupura soolal kuriththa kopam . arumai
பதிலளிநீக்குமனிதனுக்கு தான் கோபம் வருமா. கடலுக்கு வரக்கூடாதா.
பதிலளிநீக்குநல்ல கவிதை தேனம்மை.
பதிலளிநீக்குநன்றீ ரோஹிணிசிவா., வேலு.,ராம்ஜி., சரவணா., சக்தி.,கீதா., அக்பர்., சித்து.,விஷ்ணு., நேசன்., ஹேமா.,சசி.,மேனகா., இராமசாமிகண்ணன்., ரிஷபன்.,கார்த்திக்., ஸாதிகா., ஆனந்தி.,குமார்., விஜய்., முனியப்பன் சார்., கனி.,அம்பிகா., வேடியப்பன்., ரமேஷ்., ராமலெக்ஷ்மி.
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்