சனி, 10 ஜூலை, 2010

கண்ணகியின் துயரம்

வணிகக் குலத்தில் பிறந்த
வனிதைகளை வடித்துப் போடவும்
வாகாய் அடிமைப்படுத்தவும் பழக்கி.,
வணிகம் பழக்காமல்..

வண்ணச்சீறடி மண்மகள் அறிந்திலள்..
வாழ்வின் வண்ணம்
அறியக் கிடைக்காமல் செய்ய....

கணிகைக்குலத்து மகளிடம்
கூடையிலேற்றியும் கொண்டு
விடச்சொன்ன சமூகம்..எரிக்கக் கற்றுத்தந்த காவியம்.,
ஆதியிலேயே எனக்கு
இதுதான் வேண்டும் என
எதிர்க்கக் கற்றுத் தராமல்..

சோகாக்கச் சொன்ன உலகம்
வாகாக்கவில்லையே எதையும்..
வசப்படுத்த..

கணவன்தான் உலகமென்றால்
சுற்றிவரலாம்.. ., சுற்றிவரும்
பக்கமிருந்தால்..

நெருங்கமுடியாத்
தொலைதூரக் கோளாயிராமல்
அணுக்கத்தோடு...

ஒரு தவறே பல தவறாய்
இழுத்துச் செல்ல அனுமதியாமல்..
சேணம் மாட்டி.,

எதற்கு துயரமும்., எரித்தலும்.,
மேற்குச் செல்லலும்.,
கோப ரத்தமும் ., கரிந்த தேசமும்..

வாணிபமும்., வளர் கல்வியும்.,
உத்யோகமும் .,உயர் பதவியும்
தன்னம்பிக்கையின்
தொடு தூரத்தில்தான்..

வசப்படுத்த வேண்டும்
வானத்தை இனியேனும்...
வளமாவோம்., வளப்படுத்துவோம்..
நம்பிக்கையில் கண்ணகிகள்..

அர்ப்பணம்..:- என்னை வேற்றாகவும் சிந்திக்கச் செய்த அன்புத் தோழி/ தங்கை உமா ருத்ரனுக்கு.

35 கருத்துகள் :

LK சொன்னது…

excellent

தமிழ் உதயம் சொன்னது…

கண்ணகியின் துயரத்தோடு - கன்னிகைகளுக்கான தன்னம்பிக்கை காவியம்.

Karthick Chidambaram சொன்னது…

Nice Post :-) awesome poem !

Karthick Chidambaram சொன்னது…

Nice Post :-) awesome poem !

Karthick Chidambaram சொன்னது…

Nice Post :-) awesome poem !

ராம்ஜி_யாஹூ சொன்னது…

அருமை, ஆனால் கண்ணகி பாத்திர படைப்பில் எனக்கு ஒரு குறை உண்டு

ஒரு மன்னரின் தவறான தீர்ப்பிற்காக , அந்த ஊர் மக்களை டீக்கு இரையாக்குவது எந்த வகையில் நியாயம்.

அண்ணாமலை..!! சொன்னது…

@ ராம்ஜி_யாஹூ

மன்னர் எவ்வழி..மக்கள் அவ்வழி என நினைத்திருக்கலாம்!!
:)


உங்களின் இந்தக்கவிதை மிக அருமையாகவும்,
வழக்கமானவற்றிலிருந்து சற்றே வேறுபட்டும் உள்ளது.
நன்றிகள்!

அண்ணாமலை..!! சொன்னது…

@ ராம்ஜி_யாஹூ

மன்னர் எவ்வழி..மக்கள் அவ்வழி என நினைத்திருக்கலாம்!!
:)


உங்களின் இந்தக்கவிதை மிக அருமையாகவும்,
வழக்கமானவற்றிலிருந்து சற்றே வேறுபட்டும் உள்ளது.
நன்றிகள்!

கண்ணகி சொன்னது…

ஆதியிலேயே எனக்கு
இதுதான் வேண்டும் என
எதிர்க்கக் கற்றுத் தராமல்..


வாணிபமும்., வளர் கல்வியும்.,
உத்யோகமும் .,உயர் பதவியும்
தன்னம்பிக்கையின்
தொடு தூரத்தில்தான்..

வசப்படுத்த வேண்டும்
வானத்தை இனியேனும்...
வளமாவோம்., வளப்படுத்துவோம்..
நம்பிக்கையில் கண்ணகிகள்..

nice words...nice..

அன்புடன் மலிக்கா சொன்னது…

தன்னம்பிக்கை கவிதை.
மிக அருமையான வரிகள்.

அஹமது இர்ஷாத் சொன்னது…

ஒரு தவறே பல தவறாய்
இழுத்துச் செல்ல அனுமதியாமல்..//

True Lines i like it.. Super

Discovery book palace சொன்னது…

அருமை, மீண்டும் ஒரு முறை சிலபதிகார நினைவுக்கு மனம் போக தவறவில்லை.

சே.குமார் சொன்னது…

தன்னம்பிக்கை காவியம்.

ராமலக்ஷ்மி சொன்னது…

//ஒரு தவறே பல தவறாய்
இழுத்துச் செல்ல அனுமதியாமல்..
சேணம் மாட்டி.,

எதற்கு துயரமும்., எரித்தலும்.,
மேற்குச் செல்லலும்.,
கோப ரத்தமும் ., கரிந்த தேசமும்..//

கண்ணகி குறித்து இதுவேதான் எனது கருத்தும்.

அருமையான கவிதை தேனம்மை.

ஜெய்லானி சொன்னது…

அன்னைக்கு கண்ணகி எரிக்காம இருந்தா நாம இன்னைக்கு சிலை வச்சிருப்போமா..?

சூப்பர் பதிவு தேனக்கா..!!

அமைதிச்சாரல் சொன்னது…

//வசப்படுத்த வேண்டும்
வானத்தை இனியேனும்...
வளமாவோம்., வளப்படுத்துவோம்..
நம்பிக்கையில் கண்ணகிகள்..//

ரொம்ப பிடிச்சிருக்கு..

செந்தில்குமார் சொன்னது…

கம்பிரமான வரிகள் அக்கா....

வாழ்க்கைக்கு தேவையான ஒன்று சரியான தருனத்தில் நீங்கள் சொல்லியிருப்பது அருமை...

ஹேமா சொன்னது…

தேனக்கா...அருமையான எதிர்ச்சிந்தனை.அப்போ இப்படிக் கண்ணகி யோசிச்சிருந்தா அநியாயமா ஒரு ஊரே எரிஞ்சிருக்காது.இப்போ பெண்கள் ஓரளவு சரியாகச் சிந்திக்கத் தொடங்கிவிட்டோம்.நானும் கூட !

ரோகிணிசிவா சொன்னது…

//ஆதியிலேயே எனக்கு
இதுதான் வேண்டும் என
எதிர்க்கக் கற்றுத் தராமல்.//
super -wel said inspiring

தமிழ் மகன் சொன்னது…

எரிக்கக் கற்றுத்தந்த காவியம்.,
ஆதியிலேயே எனக்கு
இதுதான் வேண்டும் என
எதிர்க்கக் கற்றுத் தராமல்..


மிக அருமையான வரிகள்..

அக்பர் சொன்னது…

நிச்சயமாக சிறுதவறுகளை தட்டிக்கேட்காமல் விட்டுவிட்டு பின்பு வருத்தப்படுவதும் தவறுதான். சொந்த காலில் நிற்க கற்றுக்கொடுக்கும் கவிதைக்கு வாழ்த்துகள்.

Mrs.Menagasathia சொன்னது…

//கணவன்தான் உலகமென்றால்
சுற்றிவரலாம்.. ., சுற்றிவரும்
பக்கமிருந்தால்..// very nice akka...

அபி அப்பா சொன்னது…

எனக்கு இந்த கவிதையின் பால் பல கருத்துகள் உள்ளன தேனம்மை. எதை சொல்வது எதை விடுவது என ஏபப்பட்ட குழப்பங்கள் தான் மிஞ்சுகின்றன.

செ.சரவணக்குமார் சொன்னது…

நல்ல சிந்தனை தேனக்கா.

சிலப்பதிகாரம் வாசித்து தீராத காவியம். எத்தனை கோணங்களில் வேண்டுமானாலும் அதை அணுகலாம். ஜெயமோகனின் கொற்றவை வாசியுங்களேன்.

நன்றி.

ஸ்ரீராம். சொன்னது…

தன்னம்பிக்கைக் கவிதை...

seemangani சொன்னது…

நம்பிக்கையூட்டும் கவிவரிகள் நிகழ்கால கண்ணகிகளின் கதைக் கவிதை சிறப்பாய் இருக்கு தேனக்கா

அம்பிகா சொன்னது…

\\எரிக்கக் கற்றுத்தந்த காவியம்.,
ஆதியிலேயே எனக்கு
இதுதான் வேண்டும் என
எதிர்க்கக் கற்றுத் தராமல்\\
சரியான சிந்தனை.

கலாநேசன் சொன்னது…

நல்லா இருக்குங்க....

ஸாதிகா சொன்னது…

//வசப்படுத்த வேண்டும்
வானத்தை இனியேனும்...
வளமாவோம்., வளப்படுத்துவோம்..
நம்பிக்கையில் கண்ணகிகள்..//வழக்கம் போல் அழகிய வார்த்தைகள் தேர்ந்தெடுத்து அழகிய கவிதை படைத்துள்ளீர்கள்.

GEETHA ACHAL சொன்னது…

அருமை அக்கா...excellent...

thenammailakshmanan சொன்னது…

வேலனுடைய கமெண்ட்ஸை தவறுதலாக மறுத்து விட்டேன்.. எனவே இங்கு வெளியிடுகிறேன்..

வேலன். உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"கண்ணகியின் துயரம்":

கணவன்தான் உலகமென்றால்
சுற்றிவரலாம்.. ., சுற்றிவரும்
பக்கமிருந்தால்..//

அருமையான வரிகள் சகோதரி...
வாழ்க வளமுடன்,
வேலன்.

Karthick Chidambaram சொன்னது…

அருமையான கவிதை.
//உன் வரவில் எவ்வளவு
மகிழ்வெனக்கு..உணர்வாயா..?
உடம்பெல்லாம் சடசடக்கிறது..
குரல் கூட படக்கிறது..//

எப்படி இப்படி கூடு விட்டு கூடு பாய்ந்து கண்டறிந்தீர்கள்?

அருமை அருமை :-)

arrawinth சொன்னது…

இன்றும் "கண்ணகி" கள்
இருக்கத்தான் செய்கிறார்கள்
தேனம்மை...

அவள் பொறுத்தாள்...
இவர்கள் பொருமுகிறார்கள்...

அவளாவது மதுரையை எரித்தாள்...
இவர்கள் தனக்குள்ளே
எரிந்துகொண்டிருக்கிறார்கள்...

அவளுக்கு தெரியவில்லை....
இவர்களுக்கு முடியவில்லை...

இடையில் இத்தனை
நூற்றாண்டுகள்...!!!!??

thenammailakshmanan சொன்னது…

நன்றி கார்த்திக்.,ரமேஷ்., கார்த்திக் சிதம்பரம்.,ராம்ஜி., அண்ணாமலை, கண்ணகி.,மலிக்கா.,இர்ஷாத்., வேடியப்பன் ., குமார்.,ராமலெக்ஷ்மி., ஜெய். அமைதிச்சாரல்.,செந்தில் குமார்., ஹேமா., ரோஹிணி,தமிழ் மகன்., அக்பர்., மேனகா.,அபி அப்பா.,சரவணா., ஸ்ரீராம்., கனி.,அம்பிகா., கலாநேசன்., ஸாதிகா ., கீதா.,வேலன்., கார்த்திக் சிதம்பரம்.,அரவிந்த்.

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...