எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 27 ஏப்ரல், 2026

சில மொக்கைக் குறிப்புகள் - 3

 

**நீரற்ற உலகில்
வாழக் கற்கிறேன்
நீரற்ற உலகில்
வாழப் பழகுவேனா.


**ஒளிந்து ஒளிந்து
உன்னை ரசிக்கிறேன்.
திருட்டுக் கண்காணிப்புக்கும்
ருசி அதிகம்தான்




**தாவும் குறுஞ்செய்திகளால்
தம்மைத் தாமே
ஊஞ்சலாட்டிக் கொள்கிறது
நமது காதல்


**ஜலக் க்ரீடைகளில்
மிக விருப்பம் உனக்கு.
புதிய அவதாரத்தில் நிகழ்த்துவது
ரகசிய பிக்சல் டெசிபல் க்ரீடை

 

**ஆர்வக் கோளாறால்
கவிதை எழுதவில்லை
உன் மேலான ஆர்வம்
கோளாறானதால் கவிதை எழுதுகிறேன்

 

**என் விழிக்குள் 
உன் விழிகள் பட்டதால் 
அச்சோ விழுப்புண்.


**பேரைச் சொல்லாதே
கத்துகிறேன்
பாடத் துவங்குகிறாய்
மீனு எத்தனை மீனு
குளத்துப் பாசியாய்க்
கடிக்கத் துவங்குகிறேன்
பக்கத்திருக்கும் உன் பாதங்களை


**சொட்டுச் சொட்டாய்
சிதறும் உன்
ஞாபகத் தேனை
ருசிக்கிறது மனவண்டு.


**குறுக்கும் நெடுக்கும்
சிறகசைத்துத் திரும்புகிறாய்
உதிரும் இறகுகளில்
சிலிர்க்கிறது வரிவரியாய்க் குளம்



**கன்னம் நக்கி
கால் கவ்வி
ஓடி விளையாடி
கைபிடித்துக் கடித்துத்
தான் மட்டுமே என் துணை என
நினைத்துக் கொள்கிறது
என் செல்ல நாய்க்குட்டி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...