எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 31 மே, 2020

செவிலித் தாயருக்கும் வங்கி ஊழியருக்கும் வந்தனங்கள்.

2641.குழந்தைகள் கூட சத்தம் கொடுப்பதில்லை. ஒரு கொடுமையான கனவுக்குள் அகப்பட்டது போல் சமைந்துகிடக்கின்றன கட்டிடங்கள்.

2642. ஃபேரி டேல்ஸில் வரும் உறைந்த நகரம்போல் வெய்யில் உறைந்திருக்கிறது நகரத்தின் மேல். சூரியச் சிலந்தியின் இழைகளுக்குள் மாட்டிய பூச்சிகளாய் ஒடுங்கிக் கிடக்கிறோம்.

2643. சிறிதாவது வெளியே வரலாம் என நினைக்கும்போதெல்லாம் அச்சத்தின் பிடியை இறுக்குகிறது கொரோனா.

2644. அடுத்தடுத்து சீனாவிலும் சிங்கையிலும் இரண்டாம் கட்டத் தாக்குதல்.

2645. வங்கி அலுவலர்களும் தினமும் வங்கி செல்ல வேண்டியிருக்கிறது. ஜூன் மாதமே என்றாலும் பள்ளிக் குழந்தைகளை எந்தவித பயமுமில்லாமல்  அனுப்ப மனம் இடம் கொடுக்குமா என்பதும் மிகப் பெரும் கேள்விக்குறி.


2646. என்றைக்கு,எங்கிருந்து, எது தாக்குமோ என்ற இனந்தெரியாத பீதியில் யாரிடமும் போனில் உரையாடக்கூடப் பொறுமை இருப்பதில்லை.

2647. வெட்டி முறிக்க எந்த வேலையும் இல்லை என்றாலும் வெட்டி முறிந்ததுபோல் வீழ்ந்து கிடக்கிறேன். வெறிச்சோடிக்கிடக்கிறது பால்கனி வழி தெரியும் வானும் தெருவும்.

2648. இருளடைந்த மனதைத்தான் எப்போது முழுதாய் மீட்கப் போகிறோமெனத் தெரியவில்லை

2649.என் அன்பு விஜி.,Vijayalakshmi Jayavelu 9 வருடம் முன்பு இழந்த அப்பாவை நினைத்து வருந்திக் கொண்டே இருக்கும் பெண்ணே., அப்பா என்பது நம் வாழ்வில் மறக்க முடியாத பெயரடா.. நாம் விழித்த முகமும் நம்மை விழிப்பித்த முகமும் அதுதானடா..  அப்பா இல்லாவிட்டால் நாம் இந்த உயரத்தை அடைந்திருக்கவே முடியாது. தன்னம்பிக்கைப் பெண்ணாக நம்மை உருவாக்கியவர்., என்றும் நம் உயர்வில் மகிழ்ந்தவர் அவர். 

அவர் இல்லாத இடம் சூன்யமென்றா நினைக்கிறாய். சூன்யத்தில்லாம் நிறைந்திருப்பவரே அவர்தான். உன்னைச் சுற்றி அவரின் ஆசி நிரம்பித் ததும்பி இருக்கிறது.. 
அந்த அன்பு வெள்ளத்தை உணர்ந்தபடி நாங்களும் உன்னோடு...

2650. சண்டைக்கோழி 2 . க்ளைமாக்ஸ்ல ஏன்பா டூயட்டு. விறுவிறுப்பா போகும்போதெல்லாம் தெளிய வச்சு தெளிய வச்சு அடிக்கிறாங்களே. கொரானாலேர்ந்து கூட தப்பிச்சிரலாம் போலயே

2651. 40 நாட்கள் நிம்மதியாக இருந்தோம் .

---மதுக்கடை திறப்பு குறித்து பெண்களின் கொந்தளிப்பு நியாயமானதுதான்

2652. ரயில்வே ட்ராக்கில் படுத்திருந்த சிலர் விபத்துக்குள்ளானது துரதிர்ஷ்டவசமானது. ரயிலே ஓடாததனால்தானே நடந்து சென்றார்கள். சரக்கு ரயில் மட்டும் வரும் என்று எப்படித் தெரியும்.

2653. உலகத்துலேயே நீளமான டாய்லெட் இந்தியன் ரயில்வே தண்டவாளம்தான்னு அனைவருக்கும் தெரியும். ரயில்வே ட்ராக்கை ஒட்டி நடந்தால் அவர்கள் ஊருக்கு எளிதாக செல்லலாம் என நினைத்திருப்பார்கள். ரயில்வே ஸ்டேஷன்களிலேயே தண்டவாளத்தில் இறங்கி பிளாட்ஃபார்ம்களில்  கை வைத்து ஏறி டீ விற்பவரைப் பார்த்ததும் நான் அங்கே டீ வாங்கி அருந்துவதில்லை

2654. இன்றைக்கு மட்டும் 600. கொரோனா தொற்று அதிகமாகிறது. காய்கறி வாங்க செல்லக் கூட யோசனையா இருக்கு

2655. விசாகப்பட்டினத்தில் விஷ வாயு கசிவு. இன்னொரு போபாலா. கொரோனாவை விட அச்சுறுத்தலாக இருக்கு.

2656. குடும்பத்தினரைப் பிரிந்து உயிரையும் துச்சமாக எண்ணி பிணி நீக்கப் பணிபுரியும் செவிலியர் அனைவருக்கும் சிரம்தாழ்ந்த வந்தனங்கள்.

2657. குடிச்சா லிவருக்கு கெடுதல். மேற்கொண்டு செலவு. வீட்ல குடிச்சா வீண் பேச்சு, வெட்டி வம்பு. அப்பாடா இதெல்லாம் இல்லாம இப்பத்தான் பசங்க பிறந்த காலத்துக்குத் திரும்பி இருக்கோம். மே 3 க்கு அப்புறமும் லாக்டவுனை நீடிக்கலாம்.

--ஒரு இல்லத்தரசியின் முகநூல் குமுறல். 

2558. லாக்டவுன் முடிந்ததும் பஸ் ஓடுமா ஓடாதா .. சாமான்யர்களின் கவலை..

2659. எதையும் தடுத்து நிறுத்த முடியாது.. எதையுமே என்பதில் மதுவும் அடக்கமா.. என்ன கொடுமை சரவணா.

2660. 50 சதவிகித ஊழியர்கள் வேலைக்கு வருவதே சாதனை மாதிரி அறிவிக்கிறார்கள். லாக் டவுன் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இன்றுவரை விடுமுறை எடுக்காமல் 
எல்லா வங்கி ஊழியரும் பணிபுரிந்துள்ளார்கள். அவர்கள் சேவையை யாருமே பாராட்டியதாகத் தெரியவில்லையே.

டிஸ்கி :-



4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும். 

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும். 

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  











































74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.

75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.

76. இழிவரலும் வீரமரணமும்.  

77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்


































121. டியட்ரோ டி மார்செல்லோவும் மெஹ்திப்பட்டினமும்.

122. தனிமைக்குப் பயப்படும் மனிதரும் மனங்களில் இடம்பிடித்த மாமனிதரும்.

123. கர்நாடகா விசித்திரங்களும் செகுலார் தேசமும்.

124. வள்ளுவர் அறிவகம் இராம்மோகன் ஐயாவும் காந்திய சிந்தனையாளர் ம. பா. குருசாமி ஐயாவும்.

125. மூன்று சகோதரர்களும் மூன்று பிரபலங்களின் பொன்மொழியும்.

126. செடிக்கன்னியும் சுயமோகமும்.

127. புஸ்தகாவும் ராயல்டியும்.

128. சயிண்டிஃபிக் கால்குலேட்டரும் ஸ்பேஸ் ஸ்டேஷனும்.

129. குறவஞ்சியும் காய்கறித் தோரணமும்.

130. பதினைந்து லட்சமும் பரிவட்டமும்.

131. ஓங்காரக் கூவலும் அடிபட்ட புறாக்களும்.

132. கிருமிகளும் கொரோனா போராளியும்.





137. 

3 கருத்துகள்:

  1. //லாக் டவுன் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இன்றுவரை விடுமுறை எடுக்காமல் 
    எல்லா வங்கி ஊழியரும் பணிபுரிந்துள்ளார்கள். அவர்கள் சேவையை யாருமே பாராட்டியதாகத் தெரியவில்லையே.//
    ஆமாம், யாரும் வங்கி ஊழியர்களை கண்டு கொள்ளவே இல்லை. இதைப்பற்றி நான் மத்யமரில் எழுதியிருந்தேன்.   

    பதிலளிநீக்கு
  2. லாக் டவுன் இல் சேவைகள் செய்த அனைவரையும் பாராட்டுவோம்.

    பதிலளிநீக்கு
  3. நன்றி பானுமதி

    நன்றி மாதேவி

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...