எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 6 மே, 2020

ஷ்லாஸ்பர்க் கோட்டை - விபத்துகளும் விசேஷங்களும்.

12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மிக அழகான இந்த ஷ்லாஸ்பர்க் கோட்டை பல்வேறு போர்களையும் சிதைவுகளையும் சந்தித்தபின் பதினெட்டாம் நூற்றாண்டில் புதுப்பிக்கப்பட்டது.டச்சி ஆஃப் லிம்பர்க்கில் அடுத்தடுத்து நடந்த போர்கள் கோட்டையோட நிலைமையை ரொம்பவும் பாதித்தது. 
இவை இப்போது நிறுவப்பட்டுள்ள அலங்கார உணவகங்கள். சர்ச். 

கோட்டையின் பக்கவாட்டுச் சுவர் வரை சென்று பார்த்தோம். எட்டாம் அடோல்ஃப் மன்னர் 1288 இல் நடைபெற்ற வொரிங்கன் போரில் பங்கேற்று இரண்டாம் சீக்ஃப்ரைட் என்ற பேராயரை ( மன்னரை ) இங்கேதான் கைதியாக சிறை வைத்தார். இதன் பின் அவர் தனது டசில்டார்ஃப் நகரை விரிவாக்கச் சென்றுவிட்டார். ரைன் நதியின் போக்குவரத்தையும் சீர்படுத்தினார். ஏதோ மராமத்துப் பணிகள் நடந்துகொண்டிருந்தன இங்கே 

எனவே யூ டர்ன் அடித்துத் திரும்பினோம். சரித்திரத்துக்கும் திரும்புவோம் வாங்க. 13 மற்றும் 14 ஆம் நூற்றாண்டுகளில் ஷ்லோஸ்பர்க்தான் இங்கே முக்கிய நிர்வாக ஸ்தலம். ஐந்து வருடம் கழித்து 1380 ஆம் ஆண்டில் வென்ஸல் மன்னர் டுசில்டார்ஃபைத் தலைநகராக்கி வில்லியம் என்ற நிர்வாகியை பிரபு/இளவரசுப் பதவி கொடுத்து உயர்த்தினார். ஷ்லாஸ்பர்க் திரும்பவும் வேட்டைக் கோட்டையாகவே நீடித்தது.! கீழே இருக்கும் அண்டர்பர்கைச் சுற்றிப் பசுமையான கானகம்தான். எனவே வேட்டையாடத் தோதான இடம். 

மழையில் நனைந்து எவ்ளோ அழகா இருக்கு பாருங்க.அதன் பிறகு இது விருந்து விசேஷம் கொண்டாட்டங்கள் திருமண நிகழ்வுகளுக்கான இடமாகப் பயன்பட்டது . இன்றைக்கும் இங்கே இது அப்படியான நிகழ்வுகளுக்கு வாடகைக்கு விடப்படுகிறது. 1496 இல் இங்கே நடந்த முதல் எங்கேஜ்மெண்ட் ஜூலிச்பர்க்கின் மரியாவுக்கும், க்ளீவ்ஸ் மார்க்கின் ஜானுக்கும்.  ஜூலிச் க்ளீவ்ஸ்பர்க்கின் இணைப்பாக இவர்களின் திருமணம் 14 ஆண்டுகள் கழித்து நடந்தது. பின்னர் இந்த ஜோடியின் இரண்டாவது மகள் ஆனி இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியை மணந்தார். 

1632 இல் ஸ்வீடிஷ் வீரர்கள் கோட்டையை முற்றுகை இட்டனர். அதன் பின் ஏகாதிபத்தியப் படைகள் 30 ஆண்டுகால யுத்தத்திற்குப் பின் 1648 ஆம் ஆண்டு இக்கோட்டையை அழித்து சிதைத்து சர்வநாசம் செய்தன. 1700 இல்தான் இக்கோட்டை ஓரளவு புனரமைக்கப்பட்டது. இதை அரசாங்க அலுவல்களுக்குப் பயன்படுத்தினாங்க. ஆனாலும் 1849 இல் இதை அழிப்பதற்காக விற்றுவிட்டார்கள் ! 

எங்கள்பர்ட் 2 ( 1188 - 1225 ) இவர் மாவீரன் போல. அதுதான் இவரோட சிலையை இங்கே நிறுவி இருக்காங்க. !!! 1929 இல் தான் பால் வினாண்ட் என்ற சிற்பி இந்தக் கோட்டையை உருவாக்கிய ஆர்ச்பிஷப், நம்மளோட எங்கள்பர்க் 2 வோட சிலையை அழகா செதுக்கி இங்கே நிறுவினார். பர்மனைச் சேர்ந்த கட்டிடக் கலைஞர் ஹெக்கார்ட் ஆகாஷ் ஃபிஷர் இதை மறுசீரமைப்புச் செய்ய 1882 இல் பழைய ஆவணங்கள் அடிப்படையில் வரைபடம்போட்டு முன் மொழிந்தார். ஒரு வழியாக அனுமதி கொடுக்கப்பட்டு புனரமைத்த கோட்டைதான் இப்ப நாம பார்ப்பது. ஒருவழியா பதினாறாம் நூற்றாண்டுக் கோட்டையை 1890 இல் கொண்டு வந்துட்டாங்க ! 24 வருஷம் ஆச்சு இத்திட்டம் நிறைவேற. இதுக்கு டுசில்டாஃபின் குயின்ஸ் அகாடமியைச் சேர்ந்த ஓவியர்களும் பங்களிப்பு செய்தாங்க. 1914 இல் பேட்டரி கோபுரத்தை எழுப்பியதும் அனைத்துப் பணிகளும் நிறைவுற்றன. அப்பாடா.. எவ்ளோ அழகா இருக்கு இந்தக் கடிகார கோபுரம். 

இதன் பின்னரும் நவம்பர் 26, 1920 இல் ஒரு பெரிய தீ விபத்தில் இக்கோட்டை பாதிக்கப்பட்டது. 1922 இல் 1925 வரை இதைத் திரும்ப சரி செய்தாங்க. அதனால் இதைப் பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகளிடம் நுழைவுக் கட்டணம் வசூலிக்கிறாங்க. அது இந்தக் கோட்டையோட பராமரிப்புக்குப் பயன்படுது. 

பெர்கிஸ்லாண்ட் என்ற மியூசியம் இங்கே இருக்கு. இன்னும் சில ரெஸ்டாரண்ட்களும் செயல்படுது. மேலும் திருமணக் கூடமாகவும் விருந்து விசேஷ வைபவங்கள் நடக்கும் இடமாகவும் பயன்படுது. 

ஷ்லோஸ்பர்க் கேஸிலுக்கு வருடத்துக்கு 3,00,000 விசிட்டர்கள் வர்றாங்க. மிடீவல் மாறுவேடப்போட்டி நடக்கும் இங்கே . அப்போ அரசர்கள் போல் மாறுவேடம் போட்டு மக்கள் கலந்துக்குவாங்க. இந்தப் போட்டிகள் இரு நாட்கள் நடைபெறும். . அதுபோக ஹாலோவியன் & கிறிஸ்மஸ் எல்லாம் இங்கே சிறப்பாகக் கொண்டாடப்படுது. ஒரு காலத்துல ராஜாக்கள் நாடு கடத்தப்படுவதற்கான நினைவுச் சின்னமாகவும் இக்கோட்டை இருந்திருக்கு ! . 

ஜெர்மனியின் கிழக்கு மாகாணத்தின் கோனிஸ்பெர்க் மற்றும் ப்ரஸ்லாவ் ஆகியவற்றில் இருந்து கொண்டு வரப்பட்ட தேவாலய மணிகளின் நினைவுச் சின்னமாகவும் இது திகழ்ந்து கொண்டிருக்கிறது. ! கீழே கானத்தோடு அமைந்துள்ள ஊரின் பெயர் அண்டர்பர்க். 
கோட்டையின் அழகிலும் சாரலிலும் வீரசாகசக் கதையிலும் நனைந்தபடி கார் பார்க்கிங்கிற்கு வந்து சேர்ந்தோம்.

டிஸ்கி:- இவற்றையும் பாருங்க. 

1.மை க்ளிக்ஸ்ஸ்ஸ் :) முள்ளும் மலரும். MY CLICKS. 

2.மை க்ளிக்ஸ் நொறுக்ஸ். MY CLICKS. 

3. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். - 2 தண்ணீர் தீபம். MY CLICKS.

4. மை க்ளிக்ஸ். -3 விதம் விதமான கட்டிடங்கள். - MY CLICKS. ARCHITECTURE.

5. மை க்ளிக்ஸ் - 4. இருளும் ஒளியும். குகையும் கடலும் MY CLICKS. 

6. மை க்ளிக்ஸ் . பத்து ரூபாய் நோட்டும் நடைப்பயிற்சியும்.MY CLICKS.

7.மை க்ளிக்ஸ். ஏர் உழவும் பொங்கலும்.MY CLICKS.  

8. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். நியான் சூரியனும் ஒளியின் இசையும். MY CLICKS. 

9. மை க்ளிக்ஸ். இயற்கையும் செயற்கையும் நாடோடிகளும். MY CLICKS. 

10. புகைப்படப் பிரியனில் சில புகைப்படங்கள். 

11. ஃபோட்டோஸ்ட்ரோபியில் பூவும் பழமும் பறவைகளும்..

12. கொஞ்சம் ஆன்மீகம் ஃபோட்டோஸ்ட்ராஃபியில்.

13. கொஞ்(ச)சும் கேரளா. ஃபோட்டோஸ்ட்ராஃபியில். ( PHOTOSTROPHE)

14. ஃபோட்டோஸ்ட்ராஃபியில் துபாய். (PHOTOSTROPHE)

15. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL. 

16. நிஷ்டைச் சிவன்களும் சிவலிங்கமும். - WORLD PHOTOGRAPHY DAY. 

17. உலக புகைப்பட தினம் ஸ்பெஷல் - மசூதிகளின் நகரம்.(WORLD PHOTOGRAPHY DAY-- CITY OF MASJITS ) 

18. புகைப்பட தின ஸ்பெஷல். ( CAMERA DAY SPECIAL) கட்டிடடக்கலை. ( ARCHITECTURE). 

19. மை க்ளிக்ஸ். கோலமயிலும் நீல மயிலும்.MY CLICKS. 

20.  மை க்ளிக்ஸ். ஹெல்தி ஸ்நாக்ஸ். HEALTHY SNACKS. MY CLICKS.

21. மை க்ளிக்ஸ். சாலையோர வியாபாரிகளும் உணவுகளும். STREET VENDORS, MY CLICKS.

22. மை க்ளிக்ஸ். துளசியும் ஊஞ்சலும். MY CLICKS. TULSI & SWING.

23. சும்மா சில க்ளிக்ஸ். CHUMMA. MY CLICKS.

24. ஜல்லிக்கட்டும் பச்சைக் குளமும். மை க்ளிக்ஸ். MY CLICKS. 

25.  மை க்ளிக்ஸ். பிரசாதம். PRASADHAMS. MY CLICKS. 

26. மை க்ளிக்ஸ். கத்திரிக்காயும் கண்ணாடியும். MY CLICKS.

27. மை க்ளிக்ஸ் - தெக்கூரிலிருந்து துபாய் வரை.  MY CLICKS

28. மை க்ளிக்ஸ் - ஆண்டவர்கள். MY CLICKS.

29. மை க்ளிக்ஸ் -  கூல் கூல் கூல் . MY CLICKS.

30. நிலவும் நீயே நெருப்பும் நீயே. மை க்ளிக்ஸ். MY CLICKS.

31. ஜில் ஜில் ஜில். மை க்ளிக்ஸ், MY CLICKS.

32. பழம் நல்லது. - 1. மை க்ளிக்ஸ். MY CLICKS

33. பழம் நல்லது. - 2. மை க்ளிக்ஸ். MY CLICKS

34. பறவைகள் பலவிதம், மை க்ளிக்ஸ், MY CLICKS

35. எண்ணெயில் குளிக்க இத்தனை வகைகளா. மை க்ளிக்ஸ் , MY CLICKS 

36.மாலையில் கொஞ்சம் கர்க் முர்க். மை க்ளிக்ஸ். MY CLICKS

37. குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உணவுகள். மை க்ளிக்ஸ், MY CLICKS

38. சரஸ்வதியில் இருந்து சரஸ்வதி வரை , மை க்ளிக்ஸ், MY CLICKS.

39. கோவிந்தபுரம் & பூம்புகார் மை க்ளிக்ஸ். MY CLICKS.

40. சிங்கப்பூர் மை க்ளிக்ஸ். MY CLICKS.

41. மலேஷியா. மை க்ளிக்ஸ் MY CLICKS.

42. கும்பகோணம் – மை க்ளிக்ஸ் MY CLICKS

43. புகார், தரங்கம்பாடி. ஆக்ரோஷ அலைகள். மை க்ளிக்ஸ் MY CLICKS.

44. மலைகள் - மை க்ளிக்ஸ். MY CLICKS. 

45. தாராசுரம் மை க்ளிக்ஸ் . MY CLICKS.

46. குமரகம், ஆலப்புழா மை க்ளிக்ஸ் MY CLICKS. 

47. கெம்பேகவுடா ஏர்போர்ட், பெங்களூரு. மை க்ளிக்ஸ் MY CLICKS.

48. சுதேசி ( ஐட்டம்ஸ் )உணவு. மை க்ளிக்ஸ்,MY CLICKS. 

49. துபாய், ஷார்ஜா, அபுதாபி, மை கிளிக்ஸ். MY CLICKS.

50. எங்கே செல்லும் இந்தப் பாதை.. மை க்ளிக்ஸ். ROADS . MY CLICKS

51. கொள்ளை கொள்ளும் கேரளா மை க்ளிக்ஸ். KERALA. MY CLICKS.

 52. சிங்கப்பூர் ஆர்கிட் பார்க், மை க்ளிக்ஸ். ORCHID PARK. MY CLICKS 

53.  சிங்கப்பூர் ஆழ்கடல் அதிசயங்கள். மை க்ளிக்ஸ். UNDERWATER WORLD, MY CLICKS. 

54. சிங்கை மலேயா சில உதிரி புகைப்படங்கள், மை க்ளிக்ஸ், MY CLICKS.

55. மலேஷியா சிங்கை, பெங்களூரு .. பூக்கள். மை க்ளிக்ஸ். FLOWERS, MYCLICKS. 

56.  கொஞ்சம் மதிய விருந்து. மை க்ளிக்ஸ். MY CLICKS. 

57.  காய்கனி பூ பழம் மை க்ளிக்ஸ். MY CLICKS.

58. பூக்கள். மை க்ளிக்ஸ். FLOWERS, MYCLICKS.

59. பறவைகள் மை க்ளிக்ஸ். MY CLICKS. 

60. சுடச்சுட கொஞ்சம் சூப்ஸ் & ரசம். மை க்ளிக்ஸ். SOUPS & RASAM, MY CLICKS.


61. கொச்சுவேலி,கோவளம்,பாலோடு,பொன்முடி,கொச்சின் மை க்ளிக்ஸ்,KOCHUVELI,KOVALAM,PALODE,PONMUDI,KOCHIN, MY CLICKS. 

66. குன்றக்குடியின் சுப்புலெட்சுமி. மை க்ளிக்ஸ். MY CLICKS.  71. துபாய் டு அபுதாபி. பார்ட் - 2 மை க்ளிக்ஸ் DUBAI TO ABU DHABI PART - 2. MY CLICKS.

72. வெய்யிலுக்குகந்த கீரை உணவுகள். மை க்ளிக்ஸ். DISHES FROM GREENS. MY CLICKS.

73. விராமதியின் இமயமும் மானகிரி ஜோடி நவக்ரஹமும் . மை க்ளிக்ஸ். MY CLICKS.

74. பெஸ்ட் பெங்களூரு பில்டிங்க்ஸ். மை க்ளிக்ஸ். BEST BENGALURU BUILDINGS. MY CLICKS.

75. கொஞ்சம் மலையும் கொஞ்சும் நீரும். மை க்ளிக்ஸ். HOGENAKKAL. MY CLICKS.

76. சென்னை ஏர்ப்போர்ட் . மை க்ளிக்ஸ்.  CHENNAI AIRPORT - MY CLICKS.102. ப்ரஸ்ஸில்ஸ், மை க்ளிக்ஸ். BRUSSELS, MY CLICKS. 

103. கொட்டான்.மை க்ளிக்ஸ் - 1. KOTTAN. MY CLICKS

104. கொட்டான்.மை க்ளிக்ஸ் - 2. KOTTAN. MY CLICKS.

105.குன்றக்குடி. மை க்ளிக்ஸ். KUNDRAKKUDI. MY CLICKS.

106.பாலோடு, மை க்ளிக்ஸ். PALODE. MY CLICKS.

107. தெருவோர வியாபாரிகள். மை க்ளிக்ஸ். STREET VENDORS. MY CLICKS.

108. அனந்தபத்மநாப சுவாமி கோவில். மை க்ளிக்ஸ். ANANDHAPADMANABA SWAMY TEMPLE. MY CLICKS.

109. வெளி பீச்சும், வெங்காயத் தாமரைகளும். மை க்ளிக்ஸ். VELI BEACH & WATER HYACINTH. MY CLICKS.

110. கொல்லம் ( கொய்லோன் ) - குமரகம். மை க்ளிக்ஸ். KOLLAM ( QUILON) TO KUMARAKOM, MY CLICKS.

2 கருத்துகள்:

  1. நன்றி வெங்கட் சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...