புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”
புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

வெள்ளி, 9 டிசம்பர், 2016

பழம் நல்லது.

தினமும் ஒரு வேளை பழ உணவு எடுத்துக் கொள்வது செரிமானத்துக்கு நல்லது. ஜீரணத்தைத் தூண்டும் அதே கணம் வயிற்றைச் சுத்தம் செய்யும். குடல்புண்ணை ஆற்றும். உடலுக்குத் தேவையான விட்டமின் & மினரல்ஸ் கிடைக்கும். சரி சரி.. ஐ அக்ரி..  ஃபோட்டோ போடவும் போஸ்ட் போடவும் ஒரு சாக்கு இது. :) ஃபோட்டோ மேனியா & போஸ்டோ மேனியா.

ஃப்ரூட் சாலட் ரெடி. ஐஸ்க்ரீமுக்காகக் காத்திருக்குது குளிக்க :) பைனாப்பிள், ஆப்பிள், பப்பாளி, வாழைப்பழம், ஆரஞ்ச், சாத்துக்குடி
தர்ப்பூஸ்ஸ்ஸ்
மாதுளை , ஆப்பிள், மாம்பழம். ஒரு உறவினர் வாங்கி வந்தது.

மைசூர் பெங்களூர் டு கும்பகோணம் ட்ரெயினில் பழம் விக்கும் தினம். சுத்தமான பாக்கிங்க். குத்தி சாப்பிட டூத் பிக்கோட பாலிதீன் பேப்பர் மூடி ஹைஜீனிக்கா. ஆனா எப்பிடி கட் பண்றாங்கன்னு தெரில. 
கிர்ணிப் பழம்/வெள்ளரிப் பழம்.
மாங்கோ போட் :) சந்தோஷம் தரும் சவாரி போவோம் சலோ சலோ .
காசியிலிருந்து வந்த தேன் நெல்லி. நீண்ட ஆயுளைக் கொடுக்குமாமே. நறுக் நறுக்குன்னு இனிப்பா தேனோட செம ருசி.
லால்பாகில் ஃப்ரூட் சாட்.
கணபதி ஹோமப் ப்ரசாதம். அவல் வெல்லம் பேரீச்சை.  இதில் தேங்காய்த்துண்டும் போடுவதுண்டு. கொப்பரை .
ஹோமப் ப்ரசாதம். சாத்துக்குடி, வாழைப்பழம், மாதுளை, சப்போட்டா, ஆப்பிள்.
சாத்துக்குடி சுளை உரித்தது.
மாம்பழத் துண்டுகள்.
மாதுளை முத்துக்கள்.
பலாச்சுளைகள்.
ரொம்ப சாயம் அடிச்சி ஊசில ஏத்திட்டாங்களோ. ஆரஞ்சும் செம்மாதுளை மணிகளும்.
விதையில்லா இந்த திராட்சை கால்கிலோ நூறு ரூபாயாம்ம்ம்ம்ம் !!!! பட் படு ருசி.
வைத்தீஸ்வரன் கோயிலுக்கு நடைபயணம் செல்பவர்களுக்காக அப்பா அம்மா வருடந்தோறும் வழங்கி வரும் நாட்டு வாழைப்பழம்.
ஹைதையில் ஒரு திருமணத்தில் ரிசப்ஷன் விருந்தில் கிடைத்த பழக்கலவையும் ஐஸ்க்ரீமும். :)

இவுங்களமாதிரி விருந்துவைக்க இன்னொருத்தர் பிறந்துதான் வரணும். ஏகப்பட்ட ஸ்டால்கள். ஏகப்பட்ட உணவு வகைகள். சாப்பிட இன்னொரு வயிறு வேணும். :)

சரி சரி சொல்ல வந்ததை மறந்துரப் போறேன். நிறைய பழம் சாப்பிடுங்க. நிறைவா வாழுங்க. :) ( அப்பாடா படம் போட்டதுக்கு மெசேஜ் சொல்லியாச்சு ) :) 😁😂

6 கருத்துகள் :

விஸ்வநாத் சொன்னது…

கண்ணால சாப்டாச்சி
கலோரி ஏறாது
கவலை இல்லை.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

பார்க்கப் பார்க்க சாப்பிட்டே ஆக வேண்டும் என்ற உணர்வு மேலிடுகிறது சகோதரியாரே

பரிவை சே.குமார் சொன்னது…

ஏங்க்கா இப்படி...
பழமாப் போட்டு ஆசையைக் கிளப்பிட்டீங்க...
தேன் நெல்லி யூரிக் ஆசிட்டின் போது சாப்பிடச் சொல்லி ரெண்டு பாட்டில் காலி செய்தேன்... ரொம்ப நல்லாயிருக்கும்....

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல பகிர்வு.

Thenammai Lakshmanan சொன்னது…

அஹா பழம் எப்பவும் அதிகம் கலோரி ஏறாது விசு சார்

ஆம் ஜெயக்குமார் சகோ

ஹிஹி :) பழம் ரொம்ப நல்லது. சாப்பிடுங்க.

நன்றி வெங்கட் சகோ. :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...