எனது பதிமூன்று நூல்கள்

புதன், 11 ஜனவரி, 2017

மை க்ளிக்ஸ் .பத்து ரூபாய் நோட்டும் நடைப்பயிற்சியும். MYCLICKS.

வாக்கிங் ரொம்ப நல்லது. இதுல நாலு ரவுண்ட் நடந்தா 2 கிலோமீட்டர் நடந்தமாதிரி 2200 அடி. ஆனா தினம் பத்தாயிரம் அடி நடந்தா ரொம்ப நல்லதாம்.
சின்னப் புள்ளையில வெளையாண்ட ஸ்பேஸ் எக்ஸ்ப்ளோரர் ஷிப். பறக்கும் தட்டு. பேட்டரி போட்டா  தரை இறங்கி ஓடுது இன்னமும். ! மலேஷியாவிலிருந்து ஐயா வாங்கி வந்தது.
பத்துரூபாய் காசு செல்லாதுன்னு ஒரே களேபரமா இருக்கு. இந்த பத்து ரூபாய் நோட்டு இருக்கு இது செல்லுமா செல்லாதா. பக்கத்துல ஒரு ரூபாய் நோட்டும்.
ராஜா தலை போட்ட கவர் - சுஜாதா கதை ஒண்ணுல ரொம்ப விலை போகும். இது ராஜா படம் போட்ட நோட்டு. வருஷம் தெரில.எப்பிடிக் கண்டுபிடிக்கிறது ?


செம்புப் பாத்திரத்துல தண்ணீர் வைச்சுக் குடிச்சா ஹெல்த்துக்கு நல்லதாம். புளிபோட்டு தேச்சு மாளல. :)
காக்கா அடையும் கூடு. டெரஸில். புறாக்களுக்கும் வீடு. அங்கங்க எச்சத்தைப் போட்டுக் கெடுத்து வைச்சிருக்கானுங்க மொட்டை மாடியவே.
சேப்பா இருக்க இதுக்குப் பேரு போஸ்ட் பாக்ஸாம். ஊர்ல அங்கொண்ணு இங்கொண்ணு பாவம்போலத் தனியா நிக்குதுக. :)
கிணற்று உறை போட தயாரிக்கப்பட்டிருக்கும் சிமிண்ட் வளையங்கள். சிமிண்டுத் தொட்டிகளுமிருக்கு. குட்டிகுட்டியா இருக்கது தவலையான்னு தெரில.
சந்தையில் வாங்கின பொன்னாங்கண்ணி, முளைக்கீரை, சுக்குடி/மணத்தக்காளிக் கீரை. கீரைகள் உடம்புக்கு நல்லதாம். வெள்ளை மிளகாய் ரொம்ப அரிதா கிடைச்சது. அழகுக்காக சேர்த்து எடுத்தேன்.
நம்ம வீடு வஸந்தபவனின் வாஸ்து மீன்கள். மீன் துள்ளினா வலைத்தளத்துக்கு நல்லதாமே. நிறைய விசிட்டர்ஸ் வருவாங்களாம். பக்கப் பார்வை அதிகரிக்குமாம். :)
துபாய் அட்லாண்டிஸில் இருக்கும் மாபெரும் ஃபிஷ் டாங்க். :)
அதே மாலில் எடுத்தது. மினு மினுன்னு அழகா இருக்குல்ல :)
ஃப்ளைட்டுல கொடுத்ததாம். ரங்க்ஸ் கொடுத்தார்.எடுத்தேன். :) பேரீச்சை சாப்பிட்டா சிங்கம் போல ஸ்ட்ரென்த் எனக்கு அப்பிடின்னு ஒரு குட்டிப் பையன் சொல்வான். இத சாப்பிட்டா புலியைப் போல புத்தி எனக்குன்னு விளம்பரம் பண்ணலாம்.:)

எங்க சுத்தினாலும் வரலாறு முக்கியம் அமைச்சரே. நம்ம புத்தகங்கள்தான். டேபிள்ல வைச்சு எடுத்தேன். வித்யாசமா இருக்குல்ல. :)  சென்னை புக் ஃபேர்ல கிடைக்குது.  ஸ்டால் நம்பர்.  35, 409, 193 - 194, 215 - 216. கட்டாயம் வாங்குங்க :)அட திரும்ப வாக்கிங் பாத்துக்கே வந்துட்டமே. மினிமம் நாலு ரவுண்ட் சுத்திட்டு நேரா போய் வெயிட் பாக்கக் கூடாது. மினிமம் ஒரு மாசமாச்சும் நடந்துட்டுப் பார்க்கலாம். ஓகே ரைட். விடு ஜூட் :)
டிஸ்கி:- இவற்றையும் பாருங்க.

1.மை க்ளிக்ஸ்ஸ்ஸ் :) முள்ளும் மலரும். MY CLICKS. 

2.மை க்ளிக்ஸ் நொறுக்ஸ். MY CLICKS.

3. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். - 2 தண்ணீர் தீபம். MY CLICKS.

4. மை க்ளிக்ஸ். -3 விதம் விதமான கட்டிடங்கள். - MY CLICKS. ARCHITECTURE.

5. மை க்ளிக்ஸ் - 4. இருளும் ஒளியும். குகையும் கடலும் MY CLICKS. 

6. மை க்ளிக்ஸ் . பத்து ரூபாய் நோட்டும் நடைப்பயிற்சியும்.MY CLICKS.

7.மை க்ளிக்ஸ். ஏர் உழவும் பொங்கலும்.MY CLICKS. 

8. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். நியான் சூரியனும் ஒளியின் இசையும். MY CLICKS. 

9. மை க்ளிக்ஸ். இயற்கையும் செயற்கையும் நாடோடிகளும். MY CLICKS. 

10. புகைப்படப் பிரியனில் சில புகைப்படங்கள். 

11. ஃபோட்டோஸ்ட்ரோபியில் பூவும் பழமும் பறவைகளும்..

12. கொஞ்சம் ஆன்மீகம் ஃபோட்டோஸ்ட்ராஃபியில்.

13. கொஞ்(ச)சும் கேரளா. ஃபோட்டோஸ்ட்ராஃபியில். ( PHOTOSTROPHE)

14. ஃபோட்டோஸ்ட்ராஃபியில் துபாய். (PHOTOSTROPHE)

15. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL. 

16. நிஷ்டைச் சிவன்களும் சிவலிங்கமும். - WORLD PHOTOGRAPHY DAY. 

17. உலக புகைப்பட தினம் ஸ்பெஷல் - மசூதிகளின் நகரம்.(WORLD PHOTOGRAPHY DAY-- CITY OF MASJITS ) 

18. புகைப்பட தின ஸ்பெஷல். ( CAMERA DAY SPECIAL) கட்டிடடக்கலை. ( ARCHITECTURE). 

19. மை க்ளிக்ஸ். கோலமயிலும் நீல மயிலும்.MY CLICKS.

12 கருத்துகள்:

 1. //மீன் துள்ளினா வலைத்தளத்துக்கு நல்லதாமே// ரசித்தேன் :)

  பதிலளிநீக்கு
 2. படங்களும் படங்களுக்கான சொல்களின் வீச்சும்
  நன்றாகச் சிந்திக்க வைக்கிறதே!

  பதிலளிநீக்கு
 3. அழகிய படங்கள். பறக்கும் தட்டு பறப்பதைப் பார்க்க ஆவலாக இருக்கிறது!

  பதிலளிநீக்கு
 4. நிறைய பொக்கிச பொருட்களை வைத்துள்ளீர்கள்... வாழ்த்துகள் சகோதரி...

  பதிலளிநீக்கு
 5. நல்ல படங்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 6. மீன் துள்ளினா வலைத்தளத்துக்கு நல்லதாமே. நிறைய விசிட்டர்ஸ் வருவாங்களாம். பக்கப் பார்வை அதிகரிக்குமாம். :) // ஹஹஹஹஹ்ஹ் !! படங்கள் அழகு! அதற்கான கமென்ட்ஸையும் ரசித்தோம்...

  பதிலளிநீக்கு
 7. நானும் காலைக் காட்சிகள்னு எழுதி இருந்தேன் வாக்கிங் பாத் மற்றும் எழுதியதைப் படமாப் போடத்தெரியலை

  பதிலளிநீக்கு
 8. நன்றி ஆரூர் பாஸ்கர் சகோ

  நன்றி யாழ்பாவண்ணன் சகோ

  நன்றி ஸ்ரீராம். நேரில் ஒருமுறை சந்திக்கும்போது கொண்டு வருகிறேன் :)

  நன்றி டிடி சகோ

  நன்றி வெங்கட் சகோ

  நன்றி துளசி சகோ

  நன்றி பாலா சார். உங்க இடுகை படித்தேன் படம் இல்லாமலே நல்லா இருந்ததே. :)

  பதிலளிநீக்கு
 9. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு
 10. பல்வேறு தகவல்கள் அருமை. படங்கள் எல்லாமே அழகு.

  பழைய கால பத்து ரூபாய் நோட்டுக்களில் உள்ள கம்பீரம் + திக்நெஸ் + சைஸ் + மதிப்பு, இப்போது வரும் 2000 ரூபாய் நோட்டினில்கூட இல்லை. ஏதோ லாட்டரி டிக்கெட் போலவே உள்ளது.

  பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 11. உண்மைதான் விஜிகே சார். சரியா சொன்னீங்க :)

  பதிலளிநீக்கு
 12. Thenammai Lakshmanan சொன்னது…
  உண்மைதான் விஜிகே சார். சரியா சொன்னீங்க :)//


  :))))))

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...