எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 8 டிசம்பர், 2018

சாட்டர்டே போஸ்ட். ஜாயிண்ட் அக்கவுண்ட் வகைகள் பற்றி விவிஎஸ் சார்.

திரு வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் சார் பதினைந்து நாட்களுக்கு முற்பட்ட சனிக்கிழமைப் பதிவிலும் இன்சூரன்ஸ் பற்றிச் சொல்லி இருந்தார். சண்டேன்னா ரெண்டுங்கிறாங்க பேப்பர்காரங்க. நம்ம ப்லாகில் சாட்டர்டேன்னா ரெண்டு. ஏனெனில் செந்திலிடம் ஒன்றும், விவி எஸ் சாரிடம் ஒன்றும் வாங்கிவிட்டேன்.

தொடர்ந்து விவிஎஸ் சார் அவர்கள் இன்சூரன்ஸ், முதலீடு, வங்கிப் பரிவர்த்தனைகள் பற்றி என் ப்லாகுக்கு விவரங்கள் தந்துதவுமாறு கேட்டிருக்கிறேன். அதனால் இன்று அவர் ஜாயிண்ட் அக்கவுண்டில் ஃபார்மர் பற்றிச் சொல்லியிருப்பதைப் பகிர்ந்திருக்கிறேன். எனவே போனஸா சார் கொடுக்கும் விவரங்களை அறிந்து மற்றவர்க்கும் அனுப்ப வேண்டுகிறேன்.


நீங்கள் ஒரு ஃபார்மர் ஆவது சேஃப் !
எனக்கு ஒரு மகன் மட்டுமே. மனைவி இறந்து விட்டாள். மகன் கொஞ்சம் செலவாளி. அவனை எப்படி நான் ஜாயிண்ட் அக்கவுண்டில் சேர்ப்பது ? பாதுகாப்பாக இருக்காதே ?
இப்படி என்னிடம் கேட்பவர்கள் பலர். நியாயமான பயம்தான்.

 ஆனால் ஒரு வங்கிக் கணக்கு தனி நபர் பேரில் மட்டும் இருந்து அவர் மரணமடைந்து விட்டால் பெரிய பிரச்சனை. நாமினீ என்று ஒருவரைப் போட்டிருப்போம். ஆனால் கணக்கில் சிறிய தொகை இருந்தால்தான் மேனேஜரே வாரிசுதாரரிடம் தர முடியும். இல்லையென்றால் லீகல் ஹேர் சர்டிஃபிகேட் தொடங்கி பல கட்ட சாங்கியங்கள் உண்டு.

 சில சமயங்களில் “சுண்டைக்காய் கால் பணம். சுமைக் கூலி முக்கால் பணம்” என்னும் நிலைக்கு வந்து விடும். ஜாயிண்ட் அக்கவுண்டிலேயே பல வகை உண்டு. ஒருவருக்கு மேல் இருந்தாலே அது கூட்டுக் கணக்குதான். அதன் கீழ் வருகின்ற வகைகளைப் பார்ப்போம்.

 ஜாயிண்ட் கணக்கு. இதில் எல்லா பரிவர்த்தனைக்கும் இரண்டு பேரும் கையொப்பம் இட வேண்டும். நூறு ரூபாய் பணம் எடுப்பதாக இருந்தாலும் செக்கில் இருவரும் கையொப்பம் போட வேண்டும். செல்ஃப் செக்காக இருந்தால் காசோலைக்குப் பின்னாலும் இருவரும் போட வேண்டும். பணம் போடுவதற்கு இருவரில் ஒருவர் இருந்தால் போதுமானது. கணக்கை முடிக்கவும் இருவரும் வர வேண்டும். ஏறத்தாழ ஒட்டிப் பிறந்த ரெட்டைக் குழந்தைகள் மாதிரி இந்தக் கணக்கும்.

 அடுத்தது. ஜாயிண்ட் கணக்கு. ஈ ஆர் எஸ் என்பார்கள். Either or Survivor என்று பொருள். கணக்கை இருவரில் ஒருவர் இயக்கலாம். செக்கில் யாரவது ஒருவர் கையொப்பம் இட்டால் போதும். ஜாயிண்ட் அக்கவுண்ட் என்று எல்லோரும் சொல்வது இதைத்தான். ஒருவர் கையொப்பமே போதுமானது என்பதுதான் சிக்கலே. அதனால்தான் மகன் பணத்தை எடுத்து விட்டால் என்ன செய்வது என்று என்னைக் கேட்கிறார்கள்.

 மகன் செலவாளி என்னும் போது இந்த வகைக் கணக்கு ஒரு டைம் பாம். இதில் ஒரு வசதி உண்டு. ஒருவர் மரணமடைந்தால் கூட இன்னொருவர் செக்கைப் போட்டு பணம் எடுக்கலாம். தடையேதும் இல்லை. ஆனால் இறப்பைத் தெரியப்படுத்த வேண்டும். அவ்வளவே.

 இறந்தவர் தவிர இன்னொருவர் சர்வைவர் எனப்படுவார். அவருக்குக் கணக்கின் மீது முழு உரிமை வந்து விடுகிறது.

 மூன்றாவது வகைக் கணக்குதான் கேள்வி கேட்டவரின் தீர்வு. இது Former or Survivor எனப்படுவது. அதாவது முழு உரிமை கணக்கில் முதல் பெயரைக் கொண்டவருக்குத்தான். அவர் மறைந்த பிறகுதான் இரண்டாம் நபர் கணக்கை இயக்க முடியும். அதுவரையில் அவர் ஒரு டம்மி.

 இது சேமிப்புக் கணக்கிற்கும் பொருந்தும். வைப்பு நிதிக்கும் (ஃபிக்ஸ்ட் டெபாஸிட்) பொருந்தும். இரண்டாம் நபர் அந்த எஃப் டீ யை வைத்து எதுவும் செய்ய முடியாது. இப்படிப் போட்டு விட்டால் மகன் அதை எடுத்து செலவழிக்க முடியாது. பணம் பத்திரமாக இருக்கும்.

 சேமிப்பு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கலாம். ஈ ஆர் எஸ்-ஸாக இருந்தாலும் எஃப் டீயில் இடை முறித்தல் அல்லது கடன் வாங்க ஒருவர் மட்டும் கையெழுத்திட்டால் போதாது. அதனால் தந்தைக்குத் தெரியாமல் மகன் பணத்தை எடுக்க முடியாது. முதிர்வு நாளன்றுதான் யாராவது ஒருவர் கையெழுத்து போட்டு பணத்தை வாங்கலாம்.

 நீங்கள் ஒரு Former ஆவதுதான் தீர்வு !

டிஸ்கி :- ஜாயிண்ட் அக்கவுண்ட் பத்தியே பலருக்குத் தெரியாது. அதுபோல் அதனால் ஏற்படும் பிரச்சனைகள் பத்தியும் தெரியாது. ஜாயிண்ட் அக்கவுண்ட் பத்தியும் அதன் வகைகள் பத்தியும் மட்டுமில்ல ஃபார்மர் பற்றியும் தெளிவுற விளக்கி இருப்பது சிறப்பு விவிஎஸ் சார். :) இன்றும் நிறையத் தெரிந்து கொண்டோம். சாட்டர்டே போஸ்டில் அரிய தகவல்களைத் தந்து உதவுவதற்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்.

சார் அனுப்பிய கார்ட்டூன் ஒண்ணும் போனஸா இங்கே கொடுத்திருக்கிறேன் :) சாட்டர்டே போஸ்டில் வாரா வாரம் பயனுள்ள தகவல்கள் தந்து உதவுவதற்கு நன்றி சார்.

2 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...