இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்ப்புதின, சிறுகதை ஆசிரியர்கள் குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கம் - 2018 ஆம் ஆண்டு டிசம்பர் ஆறாம் தேதி அழகப்பா பல்கலையில் நடைபெற்றது.
இக்கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளராகவும் அய்க்கண் ஐயா, பழனி இராகுலதாசன் ஐயா ஆகியோருடன் பங்கேற்றேன்.
இந்நூலில் என்னைப் பற்றியும் ஒரு ஆய்வுக் கட்டுரை வெளியானதைப் பின்னர்தான் அறிந்தேன். முனைவர் மு. இராணி அவர்கள் என்னைப் பற்றிய ஒரு ஆய்வுக்கட்டுரை எழுதி இருக்கிறார்கள். அதைப் பகிர்வதில் மகிழ்கிறேன்.
என்னுடைய வலைப்பதிவு வெளியிட்ட நூல்கள், மின்னூல்கள், சிறுகதைகள் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் அழகப்பா பல்கலையில் தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் வெளியான என்னுடைய கவிதை ( சூலும் சூலமும் ) பற்றியும், சென்ற ஆண்டு ஆசியான் கவிஞர்களுள் ஒருவராகப் பங்கேற்று அக்கவிதை மலாயில் மொழிபெயர்க்கப்பட்டு நூலாக்கம் செய்யப்பட்டமை குறித்தும் குறிப்பிட்டிருக்கிறார். நன்றி ராணி அம்மா.
என்னுடைய கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளமை குறித்துக் கூறியிருப்பதும் பெற்ற விருதுகள்பற்றி பகிர்ந்திருப்பதும் மகிழ்வளித்தது.
நான்கு வலைப்பதிவுகள் குறித்தும் துல்லியமான புள்ளி விவரங்கள் கொடுத்துள்ளார்.
எல்லாவற்றையும் விட சிறப்பு சிவகங்கை மாவட்ட எழுத்தாளர்கள், தமிழ்நாட்டு சிறுகதை எழுத்தாளர்கள், அயலகச் சிறுகதை எழுத்தாளர்கள் என்ற தலைப்பிலும் ஆய்வுக் கட்டுரைகள் படைத்திருப்பதுதான். என் தமிழாசிரியையின் தமிழ்ப்பணிகள் குறித்து ஆய்வு வெளியான அதே நூலில் என் எழுத்துக்களைப் பற்றியும் ஆய்வு வெளியாகி இருப்பது வியப்பும் மகிழ்வும் அளித்தது.
மிகக் குறுகிய காலகட்டத்தில் இவ்வாய்வுக் கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கிய செந்தமிழ்ப் பாவை அம்மாவின் செயல்திறம் போற்றற்குரியது. நன்றியும் அன்பும் வாழ்த்துக்களும் அம்மா.

மகிழ்ச்சி...
பதிலளிநீக்குவாழ்த்துகள் சகோதரி...
வாழ்த்துகள் சகோ.
பதிலளிநீக்குமகிழ்ச்சியுடன் வாழ்த்துகள் சகோதரி.....துளசி
பதிலளிநீக்குஎனது வாழ்த்துகளும் தேனு...கீதா
நன்றி டிடி சகோ
பதிலளிநீக்குநன்றி வெங்கட் சகோ
நன்றி துளசி சகோ & கீத்ஸ்
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!