எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 25 டிசம்பர், 2018

ரூஃபியின் ஆணை.

நம்மை விளித்துத் தோழி ஆணையிட்டால் அதை சிரமேற்கொண்டு முடிக்காவிட்டால் எப்படி. அதான் :)

Rufina Rajkumar இந்த விளையாட்டில் என்னைச் சேர்த்திருக்கிறார். நன்றி ரூஃபி.

1. தூக்குத் தூக்கி.

”தூக்குத் தூக்கி” இந்தப் படத்தின் பாடல்கள் எனக்குப் பிடித்தன. குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன், சுந்தரி சௌந்தரி நிரந்தரியே,படம் முழுசா ஞாபகம் இல்லை ஆனால் இதில் முக்கியமா சிவாஜி சொன்னதையே திருப்பிச் சொல்லுவார். சின்னப் பிள்ளையில் அப்படி அம்மாவிடமும் தோழிகளிடமும் பேசிவாங்கிக் கட்டி இருக்கிறோம்ல. அதான் ரொம்பப் பிடிச்சிது :) ( கொண்டு வந்தால் தந்தை, கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய், சீர் கேட்பாள் சகோதரி, கொலையும் செய்வாள் பத்தினி, உயிர் காப்பான் நண்பன் இந்த ஐந்தையும் படத்தில் மெய்ப்பிக்க சிவாஜி முயற்சிப்பார். அதை சொல்லி என்னை யாரும் அடிக்கவேண்டாம் எனக் கேட்டுக் கொல்’கிறேன் :)

விளையாட்டின் விதிகள் எளிதானவை. தொடர்ந்து 10 நாட்களுக்கு, உங்களை மிகவும் பாதித்த, உங்கள் ரசனை/ சிந்தனையின் மீது ஓரளவேனும் ஆதிக்கம் செலுத்திய ஒரு திரைப்படத்தின் பிம்பம் ஒன்றை இங்கே பதிவிடவேண்டும். ஏதும் விளக்கவுரைகள் எழுதத் தேவையில்லை; படம் மட்டுமே போதுமானது; விருப்பமிருந்தால் படத்தின் பெயரைச் சொல்லலாம், மேலும் பலர் அதைப் பார்த்து ரசிக்க வாய்ப்பாக அமைய). தினம் உங்கள் நண்பர்களில் ஒருவரை நியமிக்க வேண்டும், விளையாட்டைத் தொடர்ந்து மேற்செலுத்திச் செல்ல.

நான் அழைப்பு விடுப்பது Revathi Narasimhan வல்லிம்மா அவர்களுக்கு

2.சபாபதி.

”சபாபதி” இந்தப் படம் என்னை பெரிசா பாதிச்சிச்சுன்னு, ஆதிக்கம் செலுத்துச்சுன்னுல்லாம் சொல்ல முடியாது. ஆனா சோவோட கண்ணு மாதிரி தெறிச்சு விழுறாப்புல முட்டைக் கண்ணோட டி ஆர் ராமச்சந்திரன் அவர்கள் பேசும்போது சிரிப்பு வரும். எங்க ஆயா வீட்டு ஐயா அடிக்கடி டெக்கில ( வி சி ஆர் ) போட்டுப் பார்ப்பாங்க. அப்போ பார்த்தது. ஏவிஎம் தயாரிப்பு. பர்ஃபெக்ட்.

நான் அழைப்பு விடுப்பது Kalyani Shankar நானானிம்மா அவர்களுக்கு.


3. அந்த நாள்

”அந்தநாள்” இந்தப் படத்தில் பாட்டுக்கள் இல்லை. மூன்று பேரின் பார்வையில் விருமாண்டி பாணியில் கதை சொல்லப்பட்டுள்ளது சிறப்பு. வித்யாசமான ப்ரசண்டேஷனுக்காகவும் பண்டரிபாய் சிவாஜி நடிப்புக்காகவும் பிடிக்கும்.

நான் அழைப்பு விடுப்பது Padma Mani அம்மா அவர்களுக்கு

4. பணம் பெண் பாசம்.

"பணம் பெண் பாசம் “ இந்தப் படத்தை நான் ஜாவர் சீதாராமன் அவர்களின் நாவலாகப் படித்தும் இருக்கிறேன். தலைப்பே கதையைச் சொல்லிவிடும். வாசிப்பில் மிகவும் சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகவும் இருந்தது படமாகப் பார்த்தபோது கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் இருந்தது. பட்டினத்தில் பூதம், லே மிஸரபில்ஸ் ஆகிய படங்களில் ஜாவர் சீதாராமனின் ரசிகை என்பதால் பகிர்கிறேன்

நான் அழைப்பு விடுப்பது Sakuntala Kesavan அம்மா அவர்களுக்கு

5.பார் மகளே பார்.

“பார் மகளே பார் “ இந்தப் படத்தின் கதையமைப்பும் பாடல்களும் பிடிக்கும். இரு குழந்தைகளில் எது அவர்கள் குழந்தை என்பது கடைசிவரை தெரியாது. நீரோடும் வைகையிலே, பார் மகளே பார், அவள் பறந்துபோனாளே என்ற பாடல்கள் சிந்தைவிட்டு அகலாதவை. நீரோடும் வைகையிலே பாடல் கொஞ்சம் ஸ்பெஷலாகப் பிடிக்கும் சௌகார் சிவாஜி இணைவுக்கும் இழைவுக்கும். :) <3 p="">
நான் அழைப்பு விடுப்பது Raji Krish அக்கா அவர்களுக்கு

6.தேன் நிலவு


”தேன் நிலவு “ இந்தப் படம் ஜெமினி வைஜெயந்தி நடிப்புக்காகப் பிடிக்கும். காலையும் நீயே மாலையும் நீயே பாடலில் வைஜெயந்தியின்நடனத்துக்காகவும் பிடிக்கும். காஷ்மீர், புஷ் சூட் போட்டு வைஜெயந்தி குதிரை சவாரி ஆகியன இப்படத்தில் ஸ்பெஷல் ஓஹோ எந்தன் பேபி, பாட்டுப்பாடவா என்ற பாடல்களும் பிடிக்கும்.

நான் அழைப்பு விடுப்பது Saro Krish அக்கா அவர்களுக்கு.

7.அன்பே வா

”அன்பே வா” நாடோடி மன்னனில் மானைத் தேடி மச்சான் வரப் போறான் என்று ஈஸ்ட்மென் கலரில் திடீரெனத் தோன்றி உள்ளம் கவர்ந்தவர் சரோஜா தேவி. அன்பே வா படத்தில் அந்தக் கண்ணும் அதன் மொழியும் அதன் பரிபூரணமான காதல் வெளிப்பாடும் பிடிக்கும். உள்ளம் என்றொரு கோவிலிலே, லவ் பேர்ட்ஸ், ராஜாவின் பார்வை, நான் பார்த்ததிலே என என்னைக் கொள்ளை  கொண்ட பாடல்கள் அநேகம்.

நான் அழைப்பு விடுப்பது Kanthimathi Pitchumani மேம் அவர்களுக்கு.

8.எல்லோரும் நல்லவரே

"எல்லோரும் நல்லவரே” எல்லாரையும் நல்லவர்களாகக் காட்டியதால் பிடிக்கும். செவப்புக்கல்லு மூக்குத்தி சிரிக்க வந்த மான்குட்டி அஹா தங்க முகத்துல குங்குமப் பொட்டு வைச்சிக்கிட்டு நீ எங்கடி போறே சுங்குடிச் சேலை கட்டிக்கிட்டு  என்ற பாடல் ரொம்பப் பிடித்தது. :)

நான் அழைப்பு விடுப்பது Saraswathi Ramaswami  மேம் அவர்களுக்கு.

9.பட்டினப் ப்ரவேசம்.

”பட்டினப் பிரவேசம் “ பட்டினத்துக்கு குடிபெயர்ந்து நிலை சரிந்து கிராமத்துக்கே திரும்பும் குடும்பத்தின் கதை. சிவச்சந்திரன் மீரா பாடும் இந்தப் பாடல் என்னுடைய எவர்டைம் ஃபேவரைட். கடைசி ஸ்டான்ஸாவில் சிவச்சந்திரன் அந்தப் படிகளில் கைகட்டியபடி பின்னேறி மீராவுடன் இணையும் காட்சி - சமவயதுக்காரர்களுடன் நாம் எப்பவும் திரும்பப் போய் சேர்ந்துக்கலாம் என்ற புரிதலையும் விடுதலை உணர்வையும் கொடுத்ததால் ரொம்ப ரொம்பப் பிடிக்கும்.

நான் அழைப்பு விடுப்பது Sajju Ramu Saraswathi Ramaswami அம்மா அவர்களுக்கு.

10.புதிய பறவை.

”புதிய பறவை “ சிவாஜி சௌகார் காம்பினேஷன் எப்பவும் பிடிக்கும். அதிலும் இந்த க்ளப் பாடலில் அவர் ரசனையுடன் சௌகாரைப் பார்ப்பது வசீகரம். முடிவில் சிவாஜியின் வசனம் இன்றும் அளவிட முடியாத துயரம் தருவது. “  லதா என்னைக் கைது செய்ய வேற எந்த வேஷத்தையாவது போட்டிருக்கக் கூடாதா.  பரிதாபத்துக்குரிய என் வாழ்க்கையில படையெடுக்க உன்கைக்குக் கிடைச்சது காதல்ங்கிற அந்தப் புனிதமான பூதானா. அத வச்சா நீ என்னை வீசிட்ட “ என்று பாசத்துக்காக வாழ்க்கை முழுதும் ஏங்கும் ஒரு மனிதனின் குரல் செவிப்பறையில் மட்டுமல்ல மன அறைகளிலும் தேங்கித் தேங்கித் தேம்பிக் கொண்டே இருக்கிறது. ”பூவை வைத்து வாள் வீச முடியுமா” என்று பேதலிக்க வைத்த படம்.

நான் அழைப்பு விடுப்பது Radha Sudharsanam மேம் அவர்களுக்கு.

டிஸ்கி :- விரும்பும் யார் வேண்டுமானாலும் இவ்விளையாட்டைத் தொடரலாம். மேலும் இவ்விளையாட்டைத் தொடர யாரை வேண்டுமானாலும் அழைக்கலாம். நம் ரசனையைப் பகிர உதவியது இது. ஆங்கிலப் படங்களும் வேற்று மொழிப் படங்களும் கூடப் பகிரலாம். நன்றி ரூஃபி நிறையப் படங்களை நானும் நினைவு கூர்ந்தேன். :) 

3 கருத்துகள்:

  1. துளசிதரன் :உங்கள் சாய்ஸ் நன்றாக இருக்கிறது இதில் ஒரு சில படங்கள்தான் பார்ததுண்டு

    கீதா: ஓ இதைத்தான் வல்லிம்மா அவர்களும் தன்னோட வலைத்தளத்துல போட்டிருந்தாங்களா...10 படங்கள்..நீங்க சொல்லிருக்கற படங்கள் எதுவும் பார்த்ததில்லை தேனு. ஒவ்வொரு படமும் போட்டுட்டு ஒருத்தரை அழைக்கனுமா?!!

    பதிலளிநீக்கு
  2. ஆஹா... தொடர் பதிவா.... நடத்துங்க....

    நமக்கும் சினிமாவுக்கும் பல கிலோ மீட்டர் தொலைவு சகோ.

    தொடரப் போகும் நண்பர்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. நன்றி துளசி சகோ. ஆமாம் கீத்ஸ். :)

    நன்றி வெங்கட் சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...