சனி, 12 மே, 2012

பயணம்..

பயணம்;-
***********
தன்னைத் தானாய்
புதுப்பிக்க நேர்ந்தது.

நானும் அவளும்
பயணத்தில் இருந்தோம்.

தோணிகள் வெவ்வேறு.
ராமன்கள் கூட..ஒரு நினைவுறுத்தலைக்
கற்பித்துக் கொண்டிருந்தது

அந்த ஆறு அதற்கும்
இரு கரைகளென.

தானாய் எப்படி இருப்பதென.
தவம் கலைத்து பெருகுவதென.

மூடிக்கிடந்ததை கரை தள்ளுவதென.
முக்காடுகளை தூக்கிப் போடுவதென.

குறுக்கே கடக்கிறோமா
சங்கமத்துக்கு செல்கிறோமா

நினைவற்றுப் பயணித்துக்
கொண்டிருந்தோம்.

ராமன் ராமனாய் இருப்பதன்
துயரத்தைப் பேசினான்.

சீதையாய் இருப்பதன் துயரம்
தெரிவிக்கப்படவேயில்லை.

மௌனமாய்க் கடந்தோம்
இருவரும் அருகருகாய்.

சுழலுக்காய் திருப்பத்தில்
காத்திருந்தோம்.

கவிழ்ந்தவுடன் நீந்தத்
தொடங்கினோம் தளைகள் விட்டு.

தேடிக்கொண்டே இருந்தான் ராமன்
மாரீச மானிலும் பொன் சிற்பத்திலும்.

டிஸ்கி :- இந்தக் கவிதை ஆகஸ்ட் 29,2011 உயிரோசையில் வெளிவந்தது.


5 கருத்துகள் :

lekshy சொன்னது…

நன்றாக இருக்கிறது. தலைவனை தளைகளைவிடாது தேட வைத்து விட்டீர்கள்.

வரலாற்று சுவடுகள் சொன்னது…

தங்களது படைப்பு மற்றவர்களிடமிருந்து எப்போதும் வேறுபட்டே நிற்கிறது.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

உயிரோசையில் பயணமாகியுள்ள உயிர்புள்ள கவிதைக்குப் பாராட்டுக்கள்.

//சீதையாய் இருப்பதன் துயரம்
தெரிவிக்கப்படவேயில்லை.//

சூப்பரான வரிகள்.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி லெக்ஷி

நன்றி வரலாற்று சுவடுகள்

நன்றி கோபால் சார்

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...