செவ்வாய், 29 மே, 2012

ஆண்களும், பெண்களும், வார்த்தைகளும்..

ஆண்களும் பெண்களும் வார்த்தைகளும்..:-

ஆறு ஆண்கள் சந்தித்தார்கள்.
ஒருவன் வாயிலிருந்து வார்த்தைகள்
தவளைகள்போல குதித்துக்கொண்டே இருந்தன.
இன்னொருவன் நாக்கையும் வாக்கையும்
கடிவாளமிட்டுப் பிடித்தபடியே இருந்தான்.
மூன்றாமவன் அசைபோட்டபடி இருந்தான்
எதையும் துப்பாமல்.

நான்காமவன் வாயில் நாராசத்திலிருந்த
பன்றிகுட்டிகள் உருண்டோடின.
ஐந்தாமவன் தேவதாரு பாஷையில் பேசினான்
யாருக்கும் புரியவில்லை.
ஆறாமவன் வாயிலிருந்து பூக்கள்
மலர்ந்தவண்ணம் இருந்தன.

இவர்களனைவரும் சேர்ந்துபிடித்த
சிகரெட்டுப் புகையில் வார்த்தைகள்
குப்பையிலும் தண்ணீரிலும்
நீந்தியபடி இருந்தன.
வார்த்தைகள் விடுபட்டபோது
சத்தமிட்டுச் சிரித்தார்கள்.

ஒருவன் அழுதான்.
பாட்டில் லேபிள் நெப்போலியன் போல
அனைவரும் வாய்மூடி மௌனித்தார்கள்.
அவன் வாந்தியெடுத்ததும்
அவனை நகர்த்திப் படுக்கவைத்து
அனைத்திலிருந்தும் விட்பட்டுவிட்டதாகக் கருதி
விடைபெற்றுச் சென்றார்கள் அனைவரும்..

சிதறிக்கிடந்த மிக்ஸர் துணுக்குகள் போல
பொருளற்றுக் கிடந்தன வார்த்தைகள்..

 * * * * *********************************

ஆறு பெண்கள் சந்தித்தார்கள்.
அறுவரும் ஒரேநேரம்
புன்னகைத்தார்கள்., அணைத்தார்கள்.,
கன்னத்தோடு கன்னம் ஒட்டி
முத்தமிட்டுக் கொண்டார்கள்.

எல்லா உடலிலிருந்தும்
வாசனைத்திரவியம்
அறையை நிறைத்தது.
ஒரே நேரத்தில் பேசப்பட்ட
அவர்கள் வார்த்தைகள் போல..

அனைவரும் பேசினார்கள்,
அனைவரும் கேட்டார்கள்.,
எரிமலைகள் பொங்கின.,
மலர்கள் குலுங்கின.
நதி பெருக்கெடுத்தது.,
நாகங்கள் தலைநீட்டின.,
பேச்சின் ஓரங்களில்
குகை வாழ் உயிரினங்கள்
எட்டிப் பார்த்தன.

வாழ்வு சுதந்திரமாய் இல்லையென்று
கண்ணீர் கண்ணீர் விட்டு
அழுதாள் ஒருத்தி.
அனைவரும் தன்னிலை
பரவாயில்லை என நினைத்து
வருந்தியவளுக்கான
வார்த்தைகள் உதிர்த்தார்கள்

அவர்கள் அனைவரும்
இணைந்திருந்த எல்லா நேரங்களிலும்
எல்லா இடங்களிலும்
வார்த்தைகளும் சத்தங்களும்
அவர்களுடன் கைகோர்த்திருந்தன.

வார்த்தைகள் சிக்காத நேரங்களிலும்
நெகிழ்வாய் ஏதேதோ கூறியபடி
பிரிந்தார்கள் அவர்கள்.

வீரியத்தோடும் அர்த்தமற்றும்
நிறைய வார்த்தைகள் செருகித்
தொங்கிக் கிடந்தன அறையெங்கும்.
 * * * * * ********************************

கண்ணீர் விட்ட ஒருவனையும்
ஒருத்தியையும் தவிர அனைவரும்
நினைவுகளில் வார்த்தைகளை
மென்றபடியே சென்றார்கள்.
அவர்கள் துப்பிய வார்த்தைகள்
தன்னை மறந்தும் கூட
அவர்கள் சொல்ல முடியாத துயராய்
சிவந்து கிடந்தன..

டிஸ்கி:- இந்தக் கவிதை   ஃபிப்ரவரி 1 - 15 , 2012 இன் அவுட் சென்னையில் வெளியானது.   


7 கருத்துகள் :

செய்தாலி சொன்னது…

ம்ம்ம் ...
ரெம்ப அற்புதமான கவிதை கவிதாயினி

சந்திப்புக்களில்
மனதிலி இருந்து வார்த்தைகளை கொட்டிவிடுவார்கள்

பெண்களில்
பெருன்பான்மையோர்
நட்பு சந்திப்புக்களில் மனதின் சிறு வலியைகூட
கொட்டி விடுவார்கள்
ஒருசிலர் பெரும் வலியைக்கூட
உள்ளில் மென்று விழுங்குவார்கள்

நிறைய
மனிதர்கள் சந்திப்புக்களில் கண்ட உணர்ந்ந்த உண்மைகள்
தங்கள் வரிகளில் கண்டது

கவிதானியின் கவிதைமேல் மதிப்பு என் சிந்தனையும் மெருகேறுகிறது

இராஜராஜேஸ்வரி சொன்னது…

அவர்கள் துப்பிய வார்த்தைகள்
தன்னை மறந்தும் கூட
அவர்கள் சொல்ல முடியாத துயராய்
சிவந்து கிடந்தன..

மனதிலிருந்து உதிர்ந்த வலிகள்.!

வரலாற்று சுவடுகள் சொன்னது…

ரசிக்கவும் வியக்கவும் வைக்கிறது.., என்ன கருத்து சொல்வதென்றுதான் புரியவில்லை .. :)

Vinoth Kumar சொன்னது…

hmm..
i really hate this type of ... fake things....
there are women who do all nasty things.. include what u said smoke and drink....

and men also so there who never smoke or drink....

more over.... dont be in dreams...
and dont mis guide...
men and women are having thier own adv and dis adv.. that due to nature... we cant do any in that...

but ur putting women as goddess...
and men as deivls...

u r not seeing the nature as its...

ultimately u only losses.. than all others..

Vetrimagal சொன்னது…

The language of pain and sorrow is unique.

you have used beautifully!

A special blog for reading and thinking.

Thanks

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி செய்தாலி

நன்றி ராஜி

நன்றி வரலாற்று சுவடுகள்

நன்றி வினோத் குமார்

நன்றி வெற்றி மகள்

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...