திங்கள், 21 ஆகஸ்ட், 2017

குங்குமம் டாக்டரில் ஹெல்தி ரெசிபி கும்மாயம் !

கும்மாயம்/ஆடிக்கூழ்:-

தேவையானவை:-

கும்மாய மாவுபச்சரிசி 1 கப்., பாசிப்பருப்பு 1 கப்., வெள்ளை உளுந்து 1 கப்பை வெறும் வாணலியில் வெதுப்பி பொடித்துசலிக்கவும்.) இதிலிருந்து ஒரு கப் மட்டும் எடுத்துக் கொள்ளவும். - 1கப் 200 கி்ராம்.
கருப்பட்டி + வெல்லம் = 1 1/2 கப் 200 கிராம்
நெய்+நல்லெண்ணெய் = 100+50 கிராம்.
தண்ணீர் - 4 கப்

செய்முறை:-
பானில் நல்லெண்ணெய் 50 கிராம்., நெய் 50 கிராம் ஊற்றி மாவை ஒரு நிமிடம் வாசனை வரும்வரை வறுக்கவும்இன்னொரு பாத்திரத்தில் தண்ணீர் 4 கப் ஊற்றி வெல்லம்., கருப்பட்டியை போட்டு அடுப்பில் வைக்கவும்கரைந்தவுடன்வடிகட்டி மாவில் ஊற்றி கட்டிகளில்லாமல் கரைக்கவும்பின் அடுப்பில் வைத்து கைவிடாமல் கிளறவும்கையில்ஒட்டாமல் கெட்டியாக கண்ணாடியைப் போல வரும்வரை கிளறி மிச்ச நெய்யைஊற்றி இறக்கவும்சுடச் சுட பரிமாறவும்.

இது பச்சிளம் குழந்தைகளுக்கும் பதின்பருவப் பெண்களுக்கும் கர்ப்பிணிகளுக்கும் ஏற்றது. அனைத்து வயதுப் பிரிவினருக்கும் ஏற்றதுதான் என்றாலும் பச்சிளம் வயதில் இடுப்பெலும்பு பலம் பெற இதைச் செய்துகொடுப்பது வழக்கம்.


இதில் பயன்படுத்தப்படும் பொருட்கள் கருப்பட்டி, வெல்லம் இரத்தவிருத்திக்கு உகந்தவை. கருப்பட்டி எனப்படும் பனைவெல்லம் இரத்தத்தைச் சுத்திகரிக்கிறது. பற்களும் எலும்புகளும் உறுதியாகும். இதைக் கூழுடன் காய்ச்சி உண்பதால் கருப்பையும் பலம் பெறும். 

பாசிப்பருப்பு, வெள்ளை உளுந்து எலும்புக்குப் பலம் அளிப்பவை. பாசிப்பருப்பு நினைவுத்திறன் அதிகரிக்கும், சிறந்த ஊட்டச்சத்துமிக்க உணவு ஆகும். உடல் வளர்க்கும் உளுந்து என்று உளுந்துக்குப் பெயர் உண்டு எனவே வளரும் சிறாருக்கு மிகவும் ஏற்றது. எலும்புகள் குறிப்பாக இடுப்பெலும்புகள் வலுப்பெறும். இப்படிக் கூழாகச் சாப்பிட்டால் உடல் சூடும் தணியும். இடுப்பு வலி இருந்தாலும் குணமாகும்
நெய், நல்லெண்ணெய். – உடல்சூட்டைத் தணிப்பவை. குளிர்ச்சி கொடுப்பவை. 

நெய்யின் மருத்துவப் பயன்பாடு அநேகம். நெய்யில்லா உண்டி பாழ் என்பது பழமொழி. ஒரு ஸ்பூன் நெய்யில் 14 கிராம் கொழுப்புச் சத்து உள்ளது. வயிற்றில் அமிலத்தன்மையைக் குறைத்து ஜீரண சக்தியைத் தூண்டும். குடலுக்கு மியுகஸ் லைனிங்காக அமைந்து பலம் அளிக்கும். கேன்சர் வைரஸ் நோய்களைத் தடுக்கும்.
  
இனி இவற்றில் இருக்கும் சத்துக்கள் பற்றியும் அவற்றின் மருத்துவப் பயன்களும். 
பாசிப்பருப்பில் கால்சியமும் பாஸ்பரஸும் அடங்கி உள்ளது. புரதம்  கார்போஹைட்ரேட் இரும்புச்சத்தும் அடங்கியுள்ளது. இரத்த அழுத்தத்தைச் சீராக்குகிறது. அசைவம் சாப்பிடுவதால் கிடைக்கும் இரும்புச்சத்து இதிலிருந்தும் கிடைக்கிறது. 
உளுந்து புரதம் மிக்கது. எலும்பு மூட்டுவலிக்குச் சிறந்த நிவாரணி. வயதாவதைத் தடுக்கிறது. மெக்னீஸியமும் ஃபோலிக் அமிலமும் இருப்பதால் இரத்த ஓட்டத்தைச் சீராக்கி இதயத்துக்கு நன்மைபயக்கிறது.  

கருப்பட்டியில் கால்ஷியம் இருக்கிறது. நோய் எதிர்ப்புச் சத்தும் சுண்ணாம்புச்சத்தும் கிடைக்கிறது. இரும்பு மெக்னீஸியம் பாஸ்பரஸ் பொட்டாசியம் ஆகிய மினரல்கள் கிடைக்கின்றன. இருமல் , ஆஸ்த்மா ஆகியவற்றுக்கும் நிவாரணி. 

வெல்லம் வளர்சிதை மாற்றத்தின் போது கிரியா ஊக்கியாக உதவுகிறது. இரத்தத்தை சுத்தம் செய்வதோடு கல்லீரலையும் நன்கு செயல்பட ஊக்குவிக்கிறது. விஷமுறிப்பானாகவும் செயல்படுகிறது. வயிற்று உப்புசத்தைத் தடுக்கிறது. சிறந்த மலமிளக்கி. இரத்தக்குழாய்கள், நரம்புகள், தசை ஆகியவற்றை இலகுவாக செயல்பட வைக்கிறது. 

நெய்யில் conjulated linoleic acid ( CLA ) உள்ளதால் உடல் பருமனைத் தடுக்கிறது. ஒமேகா 3 என்ற ஃபாட்டி ஆசிட் உள்ளது. மூளைக்குச் சிறந்த டானிக். ஞாபக சக்தியைத் தூண்டும். கண் நரம்புகளைப் பலப்படுத்தும். மலச்சிக்கல் போக்கி உடல் பலம் அளிக்கும். நெய்யில் saturated fat - 65 சதமும் , mono unsaturated fat – 32 சதமும் , linoleic unsaturated fat – 3 சதமும் உள்ளன. இதில் விட்டமின் ஏ யும் ஈ யும் அதிக அளவில் உள்ளன.  

நல்லெண்ணெயில் உள்ள துத்தநாகம் எலும்புகளைப் பலப்படுத்துவதோடு வயதாவதால் ஏற்படும் சுருக்கங்களையும் தடுக்கிறது.  உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. தாமிரம், மெக்னீஸியம், கால்ஷியம் போன்ற தாது உப்புக்கள் உடல் நலம் பயக்கின்றன. மன அழுத்தமும் போக்குகின்றன. இதில் இருக்கும். நல்லெண்ணெயில் இருக்கும் பைட்டேட் என்ற கூட்டுப் பொருள் கான்சரைத் தடுக்கிறது. மெக்னீசியம் அதிக அளவில் இருப்பதால் பெருங்குடல் கான்சரையும் தடுக்கிறது. இதில் இருக்கும் செம்பு, துத்தநாகம் ஆகியவை ரத்தத்தில் சிவப்பு ரத்த அணுக்களைப் பெருக்குகின்றன.  

எனவே இளஞ்சிறார், பதின்பருவப் பெண்கள், கர்ப்பிணிகள், வயதானவர் மற்றும் எல்லா வயதினருக்கும் எல்லாப் பருவத்திலும் இந்த ஆடிக்கூழ் உண்ண ஏற்றது.

3 கருத்துகள் :

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

வாழ்த்துக்கள்

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அருமையான ரெசிப்பி தேனு! குறித்துக் கொண்டுவிட்டேன்.

எங்கள் ஊர்ப்பக்கங்களில் உளுந்தங்களி செய்வதுண்டு..உளுந்து கஞ்சி இரண்டுமே கருப்பட்டி, வெல்லம் சேர்த்து..இல்லை என்றால் கருப்பட்டி மட்டும் சேர்த்து....உளுந்து சாதமும், பொங்கலும் கூடச் செய்வதுண்டு...ரொம்ப நல்லாருக்கும்!! வயதுக்கு வரும் பெண்களுக்கு நல்லெண்ணை ஊற்றிக் கொடுப்பார்கள்....கும்மாயம் உங்கள் ஊருப் பகுதி ரெசிப்பி இல்லையா...அதன் ரெசிப்பிக்கள் என்னிடம் இருக்கிறது ஒவ்வொருவரும் ஒவ்வொரு அளவில் செய்கிறார்கள் போலும்...உங்கள் அளவையும் குறித்துக் கொண்டேன்... பகிர்விற்கு மிக்க நன்றி...

கீதா

Thenammai Lakshmanan சொன்னது…

nandri Jeyakumar sago

nandri Geeths. seithu partheengala ?

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...