காரைக்குடி அழகப்பா
பல்கலைக்கழகத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் அழகப்பா பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பண்பாட்டு
மையம் மற்றும் கல்வியாளர்கள் சங்கமத்தின் தமிழ்வளர்ச்சிக் குழுமம் இணைந்து நடத்தும்
பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.
இதில் 21-ம் நூற்றாண்டில்
தமிழின் நோக்கும் போக்கும் என்ற தலைப்பில் நடக்கப் போகும் கருத்தரங்கத்துக்கு பின்வரும்
21 தலைப்புகளில் ஆய்வுக்கட்டுரை அனுப்ப விழைபவர்கள் அனுப்பலாம்.
தமிழ்ப்பண்பாட்டு
மையம் மற்றும் கல்வியாளர்கள் சங்கமம் – பன்னாட்டுக் கருத்தரங்கம் – 2017. https://honeylaksh.blogspot. com/2017/07/2017.html
இக்கட்டுரை ஆய்வுக்காக
நான் தேர்ந்தெடுத்த தலைப்பு மின்னிதழ்கள் பற்றியது.
"தமிழ் வளர்ச்சியில்
மின்னிதழ்கள். "
எனவே மின்னிதழ்கள்,
இணைய இதழ்கள் பற்றி முழுமையான விபரம் சேகரித்துக்கொண்டிருக்கிறேன்.
உங்கள் மின்னிதழ்
ஆரம்பிக்கப்பட்டது எப்போது ? ஆரம்பித்தது யார், எந்த வருடம், எதை முக்கியத்துவப்படுத்தி
இது செயல்படுகிறது , இதன் நோக்கம், தமிழ் வளர்ச்சியில் இதன் பங்கு, இதுவரை இதன் ஆசிரியராக,
நிர்வாகியாக செயல்பட்டு வருபவர் யார், மின்னிதழ் நடத்துவதில் மேற்கொண்ட சங்கடங்கள்,
இடையூறுகள், அவற்றை எப்படிக் களைந்தீர்கள்,
இம்மின்னிதழ் மூலம் அடைந்த சாதனைகள், விருதுகள், சிறப்புத் தகவல்களை, சிறப்பிதழ்கள்,
பற்றிப் பகிர்ந்துகொள்ள வேண்டுகிறேன்
/////திண்ணை, உயிரோசை,
கீற்று , வார்ப்பு, வல்லினம்,
வல்லமை,அதீதம், முத்துக்
கமலம், வலைச்சரம், சுவடு, பூவரசி,
தகிதா, புதிய “ழ”
, அவள் பக்கம், தென்றல், காற்று
வெளி, பண்ணாகம், லங்காஸ்ரீ,
சொல்வனம். அமீரத்தின்
தமிழ்த் தேர், தமிழ்
ரைட்டர்ஸ் போர்ட்டல்,
கவிசூரியன்.////
ஏ 4 தாளில்
நான்கு பக்கமே வரும் கட்டுரை என்பதால் சுருக்கி அனுப்பவேண்டும். ஆனால் என்
வலைத்தளத்தில் ஒவ்வொரு மின்னிதழ் பற்றியும் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து விரிவான
தகவல்கள் வெளியாகும்.
எனவே உங்கள்
மின்னிதழ்கள் பற்றிய விரிவான தகவல்களை எனக்கு honeylaksh@gmail.com என்ற ஈமெயில்
ஐடிக்கு அனுப்பி உதவ வேண்டுகிறேன். வேறு மின்னிதழ்கள் பற்றியும் தெரிந்தால் அதன்
ஈமெயில் ஐடி , விபரங்கள் அனுப்பி உதவ வேண்டுகிறேன்.
எல்லா மின்னிதழ்கள்
பற்றியும் முழுமையான ஒரு தொகுப்பாகஇது அமையவேண்டும் என்பது எனது பேரவா.
வரும் ஜூலை 15
க்குள் அனுப்ப வேண்டும் என்பதால் ஜூலை 10 ஆம் தேதிக்குள் உங்கள் மின்னிதழ் விபரங்கள்
எனக்குக் கிடைத்தால் நலம்.
அன்பும்
நன்றியும்,
என எல்லா மின்னிதழ்களுக்கும் நான் மின்னஞ்சல் அனுப்பியும்
நான்கைந்து மின்னிதழ்களில் இருந்து மட்டுமே பதில் கிடைத்தன. எனவே அவற்றை வைத்து
என் ஆய்வை முடிக்கமுடியாது என்பதால் என் வலைத்தளத்தில் வெளியிடுவதில் மகிழ்கிறேன்.
வலைச்சரம் குறித்து
அனுப்பிய சகோ தமிழ்வாசி ப்ரகாஷ் அவர்களுக்கு நன்றிகள்.
தமிழ் வளர்ச்சியில் மின்னிதழ்கள்.
வலைச்சரம்...
26.02.2007ல் வலைச்சரம் சிந்தாநதி எனும் மூத்த பதிவரால் ஆரம்பிக்கப்பட்டு பதிவர் பொன்ஸ் அவர்கள் முதல் பொறுப்பாசிரியராக பொறுப்பேற்றார். அதன் பிறகு
30-04-2007-இல் பதிவர் முத்துலட்சுமி அவர்களும், 04/05/2008-இல் இருந்து சீனா ஐயா அவர்களும், பொறுப்பாசிரியராக இருக்கிறார்கள். வலைச்சரக் குழுவில் சீனா ஐயாவுடன் இணைந்து கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக உள்ளேன்.
வலைச்சரம் பற்றி அறியாத பதிவர்கள் யாருமே இருக்க முடியாது. வலைபப்திவர் ஒருவர் ஒரு வாரத்திற்கு ஆசிரியர் பொறுப்பேற்று தனது வலைப்பதிவுகளில் எழுதியுள்ள முக்கியமான இடுகைகளை சுட்டிக்காட்டியும், சக வலைப்பதிவர்களின் வலைபப்திவுகளை அதில் உள்ள இடுகைகளை சுவாரஸ்யமாக தொடுக்கும் வலைப்பதிவு கதம்பமே வலைச்சரம் ஆகும். வலைப்பதிவுகள் வைத்திருக்கும் ஒவொருவரும் வலைச்சரத்துடன் ஏதாவது சில வழிகளில் தொடர்புடன் இருப்பார்கள்/இருந்திருப்பார்கள். ஒரு வாரத்திற்கு ஆசிரியர் பொறுப்பு ஏற்றோ, பதிவர்களின் வலைப்பூக்கள் அறிமுகம் செய்யப்பட்டோ இருக்கும்.
வலைச்சரத்தில் ஆசிரியர் பொறுப்பேற்க பதிவர்கள் தமது வலைப்பூவில் குறைந்தது ஐம்பது இடுகைகள் எழுதியிருக்க வேண்டும், அல்லது ஆறு மாத காலம் வலைப்பூவில் இடுகைகள் பதிந்திருக்க வேண்டும். சில சமயங்களில் சிலர் குறைந்த காலத்தில், குறைந்த பதிவுகளில் வலைப்பதிவர்க்ளைடையே அனைவர்க்கும் தெரிந்த வகையில் இருந்தாலும் அவர்களை ஆசிரியர் பொறுப்புக்கு அழைத்திருக்கிறோம். பதிவர்களின் மின்னஞ்சலை தேடிப்பிடித்தும், தொடர்பு எண்ணையும் விசாரித்தும், சக பதிவர்களின் பரிந்துரையாலும் வாராவாரம் பதிவர்கள் ஆசிரியர் பொறுப்பேற்க வைத்தோம். தமிழ் பதிவுலகில் இருக்கும் பெரும்பான்மையான பதிவர்கள் வலைச்சரத்தில் ஆசிரியர் பொறுப்பேற்றவர்கள் தான். சில சமயங்களில் சிலர் இரண்டாவது முறையும், மூன்றாவது முறையும் ஆசிரியர் வாய்ப்பு பெற்றவர்களும் உண்டு.
வலைச்சரத்தில் ஆசிரியர் பொறுப்பேற்றவர்கள் திங்கள் முதல் ஞாயிறு வரை பதிவுகள் எழுதலாம். அதில் ஒரு பதிவில் தமது வலைப்பூ பற்றி அறிமுகம் செய்தும், ஏனைய பதிவுகளில் மற்றவர்களின் வலைப்பூக்களில் உள்ள சிறந்த தமக்கு பிடித்த பதிவுகளை சுட்டி இணைத்து சுவாரஸ்யமாக தொகுத்து பதிவிடலாம்.
வலைச்சரம் கடந்த சில மாதங்களாக சரியாக இயங்காத நிலையில் உள்ளது. காரணம் வலைப்பதிவர்கள் பற்றாக்குறையே. ஒவ்வொரு வாரமும் வலைப்பதிவர்களை தேடிப்பிடித்து ஆசிரியர் பொறுப்பேற்க வைப்பது என்பது சிரமமான காரியாமாக மாறி விட்டது. ஆசிரியர் பொறுப்பேற்க அழைப்பு விடுத்து மின்னஞ்சல் அனுப்புவோம். பலரும் அதற்கு பதில் அனுப்புவதில்லை. இப்போது முடியாது, பிறகு பார்க்கலாம் என ஏதாவது ஒரு பதிலை எதிர்பார்க்கிறோம் ஆனால் பதில் வராது. இந்நிலையில் அவர்களை கொஞ்ச காலத்திற்கு பிறகு திரும்ப அழைக்கவும் பலமுறை யோசனை செய்ய வேண்டி உள்ளது.
முன்பெல்லாம் குறைந்தது நான்கு வாரங்களுக்கு ஆசிரியர் பொறுப்பேற்கும் பதிவர்கள் பட்டியல் கைவசம் இருக்கும். ஆனால் இப்போது அடுத்த வாரத்திற்கே ஆசிரியர் யார் என தெரியாமல் இருக்கிறோம். பலரும் பின் வாங்குவதால் இந்நிலை. ஆனாலும் நாங்கள் முயற்சித்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆசிரியர் பொறுப்பேற்க சிலர் ஆர்வத்துடன் தாமாக முன் வந்தவர்களும் உண்டு.
ஆனாலும் பதிவர்களிடையே வலைச்சரம் வலைப்பதிவுகளின் திரட்டியாகவும், பதிவர்களின் எழுத்து திறமையை ஊக்குவிக்கும் தளமாக இப்போதும் உள்ளது.
நட்புடன்,
தமிழ்வாசி பிரகாஷ்...
வலைச்சரம் மீண்டும் தொடுத்தால் மகிழ்ச்சி.
பதிலளிநீக்குதமிழ் வலைப்பதிவர்களுக்கு ஒரு அங்கீகாரத்தை கொடுத்த ‘வலைச்சரம்’ செய்த தொண்டினை மறக்க முடியுமா?
பதிலளிநீக்குவலைச் சரத்தில் ஒரு வார காலம் ஆசிரியராக இருந்திருக்கிறேன்
பதிலளிநீக்குaam Venkat sago
பதிலளிநீக்குaam Ilango sir
nanumthan Bala sir. irandu varam aasiriyara irunthiruken :)
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!