என் ப்ரிய நான்
ஞாபகச்
சமவெளியில்
நடந்து
நடந்து
ந ட ந் து
இதயக் கால்கள்
இதமாய் வலிக்கின்றன
எங்கே
என் அரசனின்
செங்கோல் இராஜாங்கம்.!
மனசோ
அந்த மந்திரவாதியின்
கைக்கோலாய்.
எனக்கும்
சொல்லிக் கொடு,
இளகாமல் இருப்பதற்கு.
கிளைகள் தோறும்
கிளைகள் தோறும்
கிளைகள் தோறும்
குயிலாய்க்
கூவிக்கொண்டே..
மக்கிப்போன
வைக்கோலாய்
வைக்கோலாய்
சுருண்டு கிடக்கும்
இறந்தகாலம்.
மேகமாய்
இணையும்
பிரியும் நினைவுகள்.
நான்
நினைவுக் காகிதத்தைப்
புரட்டிக் கொண்டிருக்க,
நீயோ
கணக்குக் காகிதங்களின்
குவியலுக்குள்.
உன்
கனவுகளை,
நினைவுகளைக்
கருச் சுமந்த
(பொட்டலமாய்ப்)
பெட்டகமாய்
நான் இங்கே..
எந்த
மேசையின் கீழோ
வேலைச் சுமை
பொதிந்த
பொட்டலமாய்
நீ கசங்க..
நிகழ்காலம்..,
அது எனக்கு
செடிக்குள்
சித்திரையாய்ப்
பாளமாய் வெடித்த
வர நிலமாய்..
போதும் இந்தக்
காலம்..
புரியுதா என்
நேசம். ?
- தேன்கண்ணா.
அருமை...
பதிலளிநீக்குஎன்னை மாதிரியானவர்கள் இம்மாதிரியான அப்ஸ்ட்ராக்ட் எண்ணங்களை உள்வாங்குவது சிரமமாய் இருக்கிறது புரிதலே வேறாகிவிடுமோ என்னும் ஐயமும் எழுகிறது
பதிலளிநீக்குnandri DD sago
பதிலளிநீக்குirukalam Bala sir.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!