எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 6 செப்டம்பர், 2016

கும்பகர்ணியும் எல்லைச்சாமியும்.

921. அம்மா தல சுத்துறது எப்பிடி இருக்கு.

இப்ப ரொம்ப பரவாயில்லைடா சூப்பரா இருக்கு.

என்னது சுத்துதா இல்லையா

முழுவட்டமா சுத்துனது இப்ப கால் வட்டம் அரை வட்டமா சுத்துடா..

ஏம்மா இப்பிடி..

ஹிஹி நீ மட்டும் என்னவாம் உடம்பு எப்பிடிடா இருக்குன்னா நடந்தா கூடவே வருதும்பியே.. (கிகிகி. பழிக்குப் பழி.. புளிக்குப் புளி )

922. 100 வருஷம் சேவைக்குப் பாராட்டு. இதையாவது நல்லா சேவை செய்ய விடுங்கப்பா.. ஒரிஜினல் பாங்க் ஆஃப் மதுரா மாதிரி ஒரு அன்யோன்யம் உண்டு இந்த வங்கியின்மேல்.

தலைவர் இருக்குமிடம்.

923. பாடலின் அற்புதம் காட்சியில் சர்வநாசம்
https://www.youtube.com/watch?v=tIcmHXd7YAE

924. விஷத்தையும் அமிர்தத்தையும் ஒரே நேரத்தில் கொடுப்பது சிலரது பழக்கம்.

‪#‎வாய்ப்பூ‬

925. பொண்ணு செமயா ரொம்ப அழகா இருக்காளே.

ஆமா. அவ அம்மா மாதிரி ப்ரிட்டி. அழகி, :)

-- இத சொல்ல ஒவ்வொரு கணவனுக்கும் 50 வயசுக்கு மேல ஆகவேண்டி இருக்கு. :)

‪#‎தங்கமகள்_திருமணம்‬


926. எனக்குத் தூக்கம் வராதபோதெல்லாம் அவர் பாங்க் கதை சொன்னா நிச்சயம் நான் கும்பகர்ணி ஆயிருப்பேன்

927. அகம்தான் முகமாகிறது.

928. இஸ்கூல் படிச்ச க்ரூப் போட்டோ போட்டு கண்டுபிடிக்கச் சொன்னா கூட லேடீஸை விட ஜெண்ட்ஸ்தான் ஃபர்ஸ்ட் கண்டுபிடிக்கிறாங்க. செண்ட் பர்செண்ட்.

929. கடற்கரையைக் கண்ணுக்குள் அடக்கலாம். கடலை அடக்கமுடியுமா. பெருநகரத்தின் பிரியம் அலையடித்து கிடக்கிறது மனமெங்கும். சுருண்டு சுருண்டு சுயம் தேடுகிறது அலைவால் பிடித்து மனமீன்.

930. ஃபோட்டோகிராஃபர்ஸ் டே க்காகாக இந்த ஃபோட்டோ.. ஹிஹி இருக்கததானே போட முடியும்.. என்னோடது லூமிக்ஸ் காமிரா . எஸ் எல் ஆரை கடன் வாங்கியா போட .. ( எடுக்குற காலே அரைக்கால் ஃபோட்டோ எல்லாம் இதுலதான்.. ) நாம சுமாரா எடுத்தாலும் நல்லா எடுக்குறவங்களுக்கு வாழ்த்தைச் சொல்லுவோம்.

931. சக்தியைத் தெரியும்.. ஜஸீராவைத் தெரியுமா.

932. ////வரகு அரிசி வெண் பொங்கல், முருங்கைக் கீரை சாம்பார், முளைக்கட்டிய வெந்தயம்- பாசிப்பயறு, எக் ஒயிட், பப்பாளிப்பழம், நெல்லிக்காய், கோதுமைப் புல் ஜுஸ் - இது இன்றைய காலை உணவு செல்லம்ஸ்.//// இப்பிடி எல்லாம் சொல்ல ஆசைதான் மச்சி . Ilangovan Balakrishnan . ஆனா இன்னிக்கு தோசை , கருவேப்பிலை, கொத்துமல்லி, புதினா துவையல்.. ஹிஹி

933. ஆம்லெட் மச்சி .... ஹாம்லெட் இல்லை... பயப்படாதீங்க..

 934. சூரியனைப் போல
வருவதும் போவதுமாயிருக்கிறாய்.
என் கவனம்தான்
பிசகிப் பிசகிப் போகிறது.

சில நேரம் ஜன்னலிலும்,
சில நேரம் மரக்கிளை ஊடேயுமாக
வந்து செல்கிறது உன் தரிசனம்.

அவ்வப்போது என் விழிகளிலும்
நிலவாய்ப் பிரதிபலிக்கிறது
உன் சூர்யப்பார்வை.

இருவரும் அற்ற தருணங்களில்
நட்சத்திரங்களாய்
மின்னிக் கொண்டிருக்கிறது நினைவு.

935. வருவதும் போவதும் போவதும் வருவதும்தான் என்றானபின் பயணக் கணக்கென்ன.. ? ஒவ்வொருதரமும் ஒரு துயிலும் விழிப்புமாய்ச் செல்கிறது காலம். ஒரு வித்யாசம் உன் பயணப் பொழுதுகளில் நீ தூங்கிக் களிக்கலாம். அதே பொழுதுகளில் நான் விழித்தே கடக்கிறேன், நீ உனக்கான இருப்பிடம் சென்று அடைந்த சேதி அறிய.

936. உயிர் தழுவும் அணைப்புகளும் உயிர் குடிக்கும் முத்தங்களும் ஆவி சோரச் சேர்ந்ததை வெளிப்படுத்தப் போதுமானதாயில்லை. ஓருயிராய்க் கலக்க உடல் எடுக்கும் ப்ரயத்னத்தில் விலகியும் வெருண்டும் மருண்டும் நிற்கிறது ஆன்மா.

937. பொருதோம் நாம் அன்று
பொருதோம் நாம் இன்றும்..

938.40 .... லேருந்து 64. 89.. லேருந்து 65. 15 ஆ.. . ஓ மை கடவுளே.
டாலர் பறக்குது. ரூபாய் துரத்துது.
இந்தியர்களோட மொத்த தங்க இருப்பு அதிகம்.
லாக்கர்களில் குப்பையா செயலற்ற தங்கம்.
இதை பாண்டுகளா மாற்ற முடிஞ்சா நம்ம ரூபாயை டாலர் துரத்தலாம்.

939. என் தம்பி ஃப்ரெண்ட்ஸை எல்லாம் தேடித் தேடிச் சேர்த்து என் ப்லாக் ஐடியைப் போட்டுப் படிக்கச் சொன்னேன்.. ஹிஹிஹி. யூ நோ அம் ஆல்வேஸ் அ ப்லாகர்.. அப்புறம்தான் ஃபேஸ்புக்கர்.. :) :) :)

‪#‎When_I_New_To_Facebook‬940.நீலத்தின் படிமங்கள்
நீர்த்து வெளிராகின்றன.
பசுமை மஞ்சள் ஆரஞ்சு
எல்லைக் கோடுகள்தாண்டி
செஞ்சினம் கொண்டும்
அழிக்கக் கிளம்புவதில்லை எல்லைச்சாமி
கருக்கருவாளும் குதிரையும்
துணைகொண்டு துண்டித்துக் கொண்டிருக்கிறான்
ஊர் எல்லையை இருப்பிடமாய்.
வெய்யிலும் மழையும்
சுதந்திரமாய்த் தழுவும் அவன் நோக்கி
சல் சல் என்று மனம் ஓடுகிறது.
ஆலமும் அரசும் கோலோச்சும்
சாமியவன் காலடியில் வருடம் ஒருமுறைதான்
வாய்க்கிறது பலியாடாய்க் கிடக்க.
ரத்தம் ருசிக்குமவன் சன்னதத்தை
எதிர்நோக்கிக் கிடக்கிறது எந்நேரமும் மனம்.

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.


1. ஞானம் பிறந்த கதை. 

2. ஸ்வரமும் அபஸ்வரமும். 

3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.

4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  


31.வெள்ளத் தீயும் தேரை இதயமும். 

32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும். 

33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.

34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :)

35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும். 

36. போதையும் போதிமரமும்.

37. மாயக் குடுவையும் மனமீனும்.

38. அஸ்வத்தாமன் அஸ்திரமும் யூதாஸ் நாவும். 

39. ஆணியன் ரோஸ்டும் அலாவுதீன் பூதமும். 

40. 99 ம் இல்ல 21 ம் இல்ல, ஒருநாள் சபதம்தான்.


41. சாண்ட்விச்சும் ஊறுகாயும்.

42. நெபுலாவும் ப்ரத்யங்கிராவும். 

43. 2065 ம் ஆறு லட்சமும். !!! 

44. மழைப்புரவியும் பஜ்ரங்பலியின் வாலும். 

45. கறுப்புப் பட்டாம் பூச்சியும் குட்டிக் குளவியும். 

46. எடிட்டர் பாப்பும் அர்பன் விவசாயியும்.

47. கும்பகர்ணியும் எல்லைச்சாமியும்.

48. கவனிப்பும் அவதானிப்பும். 

49. பெங் குவின்களும் வால்ரஸ்களும். 

50. சிவப்புப் பட்டுக் கயிறும் படைப்பூக்கமும்.

4 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...