எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 20 மே, 2013

தினமணியின் ஊக்கப்பரிசும், காரைக்குடியில் ”ங்கா”வும்.

இவள் புதியவள் சூரியக்கதிர் இவற்றின் எடிட்டர் சகோ பாரதிராஜாவின் திருமண ரிஷப்ஷனில் பரிசளிக்க ஒடிசியில் பரிசுப்பொருள் வாங்கிக் கொண்டிருந்த போது (இனிமே யாராவது ஃபோட்டோ ஃப்ரேம் வாங்கிக் கொடுத்தீங்க.. கொன்னுபோடுவேன் என்று அவர் கோபமாக இருப்பதாகக் கேள்வி..:) ( பின்னே கல்யாணத்துக்கு கிஃப்டா  7 , 8  ஃபோட்டோ ஃப்ரேம் வந்தா.. :)   ஒரு ஃபோன் கால் .


பையனுடன் பைக்கில் செல்லும்போது பீச் காற்றில் சரிவரக் கேட்காவிட்டாலும் காரைக்குடியில் இருந்து  நான் மிகவும் மதிக்கும் திரு . அய்க்கண் அவர்கள் பேசினார்கள்.

தினமணி நடத்திய சிறுகதைப் போட்டியில் என்னுடைய கதைக்கு ஊக்கப்பரிசு கிடைத்திருப்பதாகச் சொன்னார். ”முதல் மூன்று பரிசுகள் முடிவாகி விட்டனவே.  எனவே நாலாவதாக ஒரு ஊக்கப்பரிசும் அளிக்க விரும்புகிறோம். அவர்கள் உங்கள் ஊரைச் சேர்ந்த தேனம்மைதான் “என்று தினமணியில் சொன்னார்களாம். ஐயா அவர்களை நான் முன்பு பார்த்திருக்கவில்லை. ஆனால் அவர்களே இந்தத் தகவலை என்னிடம் பகிர்ந்தது மிக சந்தோஷமாக இருந்தது.

விழாவுக்கு செல்ல டிக்கட் கிடைக்காததால் உடனே  ஏசி டிக்கெட் புக் செய்து காரைக்குடி சென்றேன். அங்கே என் பெற்றோரும் கம்பன் மணிமண்டபத்துக்கு உடன் வந்தனர்.

அங்கே எனக்கு சிறுவயதில் மிகவும் பிடித்த  குழந்தைப் பாடல் கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்களின் மகள் தேவி நாச்சியப்பனையும் அய்க்கண் ஐயா அவர்களின் புதல்வியையும் சந்தித்தேன். ( இந்த முறை புத்தகத் திருவிழாவில் தேவி அவர்கள் குழந்தைகளுக்கு வைக்கும் போட்டிகளில் பரிசாக வழங்க என் புத்தகங்களை திரு அய்க்கன் ஐயா அவர்களிடம் வழங்கி வந்தேன். )

விழாவில் பொருளாளர் ( என் மாமா ) லயன் திரு வெங்கடாசலம் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள். ஒவ்வொரு வருடமும் எவ்வளவு பொருட் செலவில் சிறப்பாக அந்த விழாவை நடத்துகிறோம் என்பதைப் பகிர்ந்தார்கள்.
அடுத்துத் தலைமை உரையாற்றிய பேராசிரியர் திரு அய்க்கண் ஐயா அவர்கள் எல்லாரையும் அறிமுகப்படுத்தி வாழ்த்தினார்கள்.

என் பி ராமசாமி அவர்கள் மதிப்புரையும், முனைவர் சேது. சுடலை முத்து அவர்கள் பரிசுகள் வழங்கிப் பாரட்டுரையும்  வழங்க நாஞ்சில் நாடன் அவர்கள்  இலக்கிய உரை ஆற்றினார்கள். பின்  என் சுந்தரம் அவர்கள், பழ. படிக்காசு  அவர்கள், எஸ். பாலசந்தர் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.

என்னுடைய சாதனை அரசிகள் புத்தகத்தில் 30 காப்பிகள் அங்கே முதல் நாள் போட்டிகளில் வெற்றி பெற்றவர்க்குப் பரிசளிக்கப்பட்டன . எனக்கு அதற்குத் தகுந்த பணம் வழங்கப்பட்டது. மிக்க நன்றி காரைக்குடிப் புத்தகத் திருவிழாக் கமிட்டியினருக்கு.

என்னுடைய இரண்டாவது புத்தகமான “ங்காவை” அங்கே அனைவருக்கும் கொடுத்தேன்.

பின் பரிசு பெற்றவர்களுக்கு இரண்டு நிமிடங்கள் நன்றி நவில வழங்கப்பட்டன. பரிசு பெற்ற எல்லாருமே மிகவும் நெகிழ்ந்திருந்தார்கள். என் தந்தையும் தாயும் பெருமையோடு அமர்ந்திருந்தார்கள்.

பரிசு பெற்றவர்களும் விழாக் கமிட்டியினரும் புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.

மறுநாள் தினமணியில் பரிசுபெற்றவர்களின் புகைப்படம் வந்திருந்தது. முதல் பரிசு தாமரைக் கண்ணன், இரண்டாம் பரிசு ஐஸ்வர்யன், மூன்றாம் பரிசு அதலையூர் சூரியகுமார். ஊக்கப்பரிசு எனக்கு.

நன்றி காரைக்குடிப் புத்தகத்திருவிழா மற்றும் தினமணி


7 கருத்துகள்:

  1. வாழ்த்துக்கள் ! ' தினமணி ' - நடத்திய சிறுகதைப்போட்டியில் ,
    நாஞ்சில் நாடன் போன்ற
    பேரரிஞர் குழுமிய கூட்டத்தில் ஊக்கப்பரிசு பெற்றமைக்கும் !
    இன்னும் பல பரிசுகளைப் பெற்று ,
    மேன்மேலும் உயர , வாழ்த்துகிறேன் !

    பதிலளிநீக்கு
  2. நாங்களும் பலரை காண முடிந்தது... நன்றி...

    வாழ்த்துக்கள் சகோதரி...

    பதிலளிநீக்கு
  3. வாழ்த்துக்கள் தேனம்மை.

    சிறுகதைப் போட்டியில் கலந்து கொள்ள அனைவருக்கும் அழைப்பு விடுத்த உங்கள் நல்ல எண்ணத்துக்கு என்றும் பல பரிசுகள் கிடைக்கட்டும் என்று மனமார வாழ்த்துகிறேன் தேன்.

    பதிலளிநீக்கு
  4. வாழ்த்துக்கள் தேனம்மை.மேலும் பல பாராட்டுகளும் பரிசுகளும் கிடைக்க வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. இன்னும் வளர்க..!
    இனிதே வாழ்க...!!

    பதிலளிநீக்கு
  6. நன்றி கண்ணன் சார்

    நன்றி தனபாலன்

    நன்றி ஜெயந்தி ரமணி

    நன்றி கவியாழி கண்ணதாசன்

    நன்றி ஹமீத்

    பதிலளிநீக்கு
  7. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...