எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
முருங்கை மரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முருங்கை மரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 13 மார்ச், 2010

காயின் ருசி

கரித்துக் கொட்டிய
துப்புரவுப் பெண்
வாரிச் செல்கிறாள்,
இலைத் துகள்
இல்லாத நடைபாதையை...

ஒடித்துப் போட்ட
பக்கத்து பால்கனிக்காரர்கள்
முகத்தில் இடிக்காது
என்ற நிம்மதியில்...

முறித்துப் போட்ட
கீழ்வீட்டுப் பெண்
காயும் துணிகளில்
பூச்சி விழுவதாய்...

புதன், 9 செப்டம்பர், 2009

முருங்கை மரம்

காலையின் பசுமை வணக்கம்...
காக்கைகளின் ஊஞ்சல்...
வண்டுகளின் சாமகானம்...

கிளைக்கரங்களால் தழுவுவது
போல் ஆரவார வரவேற்பு..,
பூக்களெனும் புன்னகையும்,
காய்கள் எனும் கனிவும் காட்டி..
Related Posts Plugin for WordPress, Blogger...