எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015

ஆகாயத் துளிகள் :-ஆகாயத் துளிகள் :-

இரயில் வண்டி விளையாட்டு
விளையாடி முடித்த நீர்த்துளிகள்
குடிசையின் பக்கவாட்டு
மண்மேடுகளுக்குக்
க்ரீடம் போட்டன.

மரப்பெண்ணின்
இலைமடியில் வீழ்ந்து புரண்டு
புதிதாகப் பிறந்த
பூக்குழந்தைகளுக்குப்
பூ முத்தம் இட்டன.


சிதறிப்போன மொட்டுக்கள்
வேலையில்லாப் பட்டதாரிகள் சங்கம்
என்னும் குட்டை அமைத்தன.

சூரியப் போலீசைக் கண்டதும்
கலவரம் நடந்த இடம்போல்
தன்னை நம்பி
நெஞ்சில் இடம் கொடுத்த
நிலக் கன்னியரைக்
காயவிட்டுச் சென்றன.

-- 84 ஆம் வருட டைரி.


5 கருத்துகள்:

 1. ரசித்துப் படித்தேன்.நல்ல கற்பனை நயத்துடன் எழுதப்பட்டுள்ளது

  பதிலளிநீக்கு
 2. சிறப்பான கற்பனை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 3. நன்றி தனபாலன் சகோ

  நன்றி முரளிதரன் சகோ

  நன்றி வெங்கட் சகோ :)

  பதிலளிநீக்கு
 4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...