எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 14 நவம்பர், 2014

அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.

41. யாருடைய அங்கீகாரத்துக்காகவும் பூ மலர்வதில்லை. அது போல யாருடைய அங்கீகாரத்துக்காகவும் பெண்கள் எழுதுவதில்லை. இதுதான் எழுத்து என்று யாரும் சட்டமும் கட்டமும் போட்டுவிட முடியாது. தன்னுடைய கருத்தை தான் வாழும் சூழலில், தனக்கு ஏற்படும் அனுபவங்களில், தன் முன் நடக்கும் நிகழ்வுகளில் தன்னைக் கடக்கும் நிகழ்வுகளை, தான் வெளிப்படுத்த முடிந்த மொழியில் , நடையில் கதையாகவோ கவிதையாகவோ கட்டுரையாகவோ படைக்கிறார்கள். இதற்குப் பகடி எதற்கு.

***************************************************

42. படைப்பாளர்கள் வேறு அவர்களின் படைப்புகள் வேறு என்பது வாசக மனநிலைக்குப் புரிவதில்லை. சிலர் மட்டுமே விதிவிலக்காக இருக்கலாம்.

படைப்பவர்களின் படைப்பு மட்டுமே வாசகருக்கு நெருக்கமானதாக இருக்கிறது. பெரும்பாலான சமயங்களில் அது மட்டுமே போதும்.

மிகத் தீவிரமான ரசிக மனநிலையில் ஒரு படைப்பாளியை ( எழுத்தாளர்/ நடிகர்/ இயக்குநர் ) நேரில் சந்திப்பதோ உரையாடுவதோ அதீத வெறுப்பைக் கொடுத்து விடுகிறது.

சில சமயங்களில் அவர்களின் பிற்போக்குத்தனமான , நயமற்ற பகிர்தல்களால் அவர்களைப் பற்றி நாம் கட்டமைத்த பிம்பம் கலைந்துவிடுகிறது. அந்தப் படைப்பு அதன் பொலிவை இழக்காவிட்டாலும் ஒரு கசப்பு அடித்தங்கி விடுகிறது.


-- ஒரு முறை ரஷ்யன் கல்சுரல் செண்டரில் நடந்த ஒரு பாராட்டு விழாவில் சிலர் பேசியதைக் கேட்டபோது தோன்றியது.


*******************************************************  

43. enna thideernu fb open aguthu aanaa agala.. what is happening..?

 திடீர்னு வீட்டு சாவியத் தொலைச்சிட்டு வெளிய நிக்கிற ஃபீலிங்க்.. எஃப் பி.. நீ இருக்கியா இல்லையா.. :) ( 19 . 06. 2014 . 1. 30 p.m.)

******************************************************* 

44. கூர்தீட்டுபவர்கள் கூட வரப்போவதில்லை

******************************************************


45. கிணற்றுத் தவளை, கண்ணை மூடிக்கொண்டு அதற்குள் உலகம் காணும் பூனை. இது எல்லாத்தையும் அப்பிடியே விட்டுறணும்.

****************************************************  

46.புத்திசாலிகளையும் பேதைகளாக்குகிறது காதல்.

***************************************************

47. படித்தவனையும் பித்தனாக்குகிறது மோகம்.

****************************************************

48. அதிகரிக்கும் வலியை மௌனமாக அனுபவிக்கத் துவங்கும்போது வலி ஒளிந்து கொள்கிறது. கூட்டை அரிக்கும் புழுவாட்டம் எங்கிருந்தோ தோண்டித் தோண்டி இருப்பை நிகழ்த்துகிறது. கூட்டுப்புழுக்களான வலிகள் ஒற்றை ஆறுதலில் வண்ணத்துப் பூச்சிகளாய் உருமாறிப் பறக்கத்துவங்குகின்றன. ஆனாலும் புழுக்கள் இருந்த இலை கூடாகத்தான் தொங்குகிறது. வலியும் வலியற்றதும்தான் வாழ்வென்றால் மரணமில்லாப் பெருவாழ்வு சித்திக்க வேண்டாம்.

***************************************************

49. வெள்ளிக்கிழமையானா இங்கே ரோட்ல நாதஸ்வர சத்தம். அது ஏன் மகுடி மாதிரி ஊதுறாங்க. திகிலடிக்குது.

****************************************************

50. சொன்னவர்களே மறந்த வார்த்தைகளை உச்சாடனம் செய்து உருவேற்றி வலி(மை)யுறச் செய்கிறோம்.

*******************************************************

51.வழித்துணைகள் சுமைதாங்கிகளல்ல.
******************************************************
.
 52. அழகு முதுமை வரை தொடர்கிறது.
அறிவு மரணம் வரை தொடர்கிறது.
அன்பு அதற்குப் பின்னும் தொடர்கிறது.


 ****************************************************** 

53. சந்தோஷத்தைப் பகிர்வது போன்றே இருண்மையைப் பரப்புவதிலும் ஆர்வமுள்ளவனாக இருக்கிறான் மனிதன்.

***************************************************

54. எல்லா வம்பு தும்பையும் படிச்சா ஏண்டா வர்றோம்னு கண்ணக் கட்டுதே.. யாருக்காகப் பரிஞ்சு பேசுறது.எதுக்காகப் பேசுறது. எல்லாரும் அவங்க அவங்க முடிவுல தீர்மானமா இருக்காங்க. . லைக்கலாமா வேண்டாமா.. நான் இங்கே வரவே இல்லை.. அவ்ளோதான்.

**************************************************

55. Saravanan Kumaresan :- என்னை டாக் செய்திருந்த இடுகையில்..
லீனா செய்தது தவறுதான். பாலா என் நண்பர் பட்டியலில் இல்லை. சரவணன் . ஆனால் எழுதவரும் பெண்களுக்கும் என்னைப் போலக் கருத்துக் கூறவரும் பெண்களுக்கும் குடும்பத்திலும் சரி. பொதுவெளியிலும் சரி ஆதரவு இல்லை. அதையும் மீறி சொல்ல வந்த கருத்துக்களை யார் மனமும் புண்படாமல் சொல்லிச் சென்றால்தான் நான் முகநூலிலும் என் வலைத்தளத்திலும் தொடர்ந்து ஓரளவேனும் எழுதி வர இயலும்.

***************************************************

56. நாம் ஒரு ஸ்டேடஸ் போடுறோம். அதுக்கான கமெண்ட்ஸ் பார்க்கும்போது நமக்கே நாம் சொல்லவந்தது இதுதானா, இது இல்லையா, இதுவோன்னு என்ன என்ன என்னவோன்னு கொழப்ஸ் ஆயிடுதுடா சாமி.

**************************************************   

57. மன்மத அம்புவில் எனக்குப் பிடித்த கமல் வசனம் ,” அறம் பேசாதே .. அறம் செய்..!!”

*************************************************

58. அடக் கஷ்ட காலமே.. இன்னும் இந்த ஸ்பாம் மெயிலை க்ளிக் பண்ற பழக்கம் போகலையா.. எத்தனை முறைதான் க்ளிக் செய்வீங்க. ப்ளீஸ் திருந்துங்கப்பா.. என் சுவற்றுல வேற போஸ்டர் போடுறீங்க.. யாரை டெலீட் பண்றதுன்னு தெரியலை.. நீங்க தெரியாம் கிளிக் பண்ணா அது யார் யார் சுவற்றிலோ போய் நாஸ்தியாக்குது..

**********************************************

59. இறக்கைகள் உண்டு.
பறக்க முடியவில்லை..
உன் அன்பெனும் சிறையில் நான்.


***********************************************

60. பள்ளி செல்லும் பருவம்வரை
மதம் இனம் அறியாமல்
வளர்கின்றன குழந்தைகள்....

இன்னும் குழந்தைகளாகவே வாழ்பவர்களுக்கு குழந்தைகள் தின வாழ்த்துக்கள். !


டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1. ஞானம் பிறந்த கதை. 

2. ஸ்வரமும் அபஸ்வரமும். 

3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.

4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.

31.வெள்ளத் தீயும் தேரை இதயமும். 

32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும். 

33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.

34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :)

35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும். 

36. போதையும் போதிமரமும்.

37. மாயக் குடுவையும் மனமீனும்.

 

3 கருத்துகள்:


 1. "புத்திசாலிகளையும் பேதைகளாக்குகிறது காதல்." என்பதும்

  "படித்தவனையும் பித்தனாக்குகிறது மோகம்." என்பதும்

  நடைமுறையில் காணும் சான்றுகள்!

  பதிலளிநீக்கு
 2. கருத்துக்கு நன்றி யாழ்பாவண்ணன் சகோ

  பதிலளிநீக்கு
 3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...