வியாழன், 6 நவம்பர், 2014

படுக்கைப் பூக்களும் பட்டாம் பூச்சிகளும்.

இரவு உடையில் வண்ணத்துப் பூச்சிகள்

குழல் சுழல கதை கேட்டுக்

கண் விரித்தபடி காத்திருக்கும்

படுக்கைப் பூக்களில்.கதை முடிய முடிய

சோர்ந்துறங்கும் பட்டாம்பூச்சிகளோடு

இரவு நதியில்

நீந்தத் துவங்குகின்றன பூக்களும்.

டிஸ்கி :- ஏப்ரல் 15-30, 2014 , அதீதத்தில் வெளிவந்தது.


3 கருத்துகள் :

Yarlpavanan Kasirajalingam சொன்னது…

சிறந்த பாவரிகள்
தொடருங்கள்

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி யாழ்பாவண்ணன் சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...