எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 3 நவம்பர், 2014

சாதனை அரசிகள் என்னுரை :-

வாசகர்களுக்கு ,

வணக்கம்.

வாழ்வது ஒருமுறை. எதையாவது சாதித்துச் செல்லவேண்டும் என விரும்பினேன். இறைவன் அருளால் லேடீஸ் ஸ்பெஷல் கிரிஜா மேடத்தை சந்தித்தேன். அவரைப் போன்றே சாதனைப் பெண்களும் கிடைத்தார்கள் . இந்த சாதனை அரசிகளின் பின்புலத்தில் குடும்பத்தாரும், நண்பர்களும் உறவினர்களும் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி.. என்னைத் தன்னம்பிக்கைப் பெண்ணாக வெளிவரச் செய்த கிரிஜாம்மாவுக்கும் , மனம் உணர்ந்து பணம் தந்து புத்தகம் வெளியிடச் சொன்ன அன்புக் கணவருக்கும்., இந்தப் புத்தகத்தை தங்கள் பெயரில் வெளியிட முன்வந்திருக்கும் என் தாய்தந்தையருக்கும், என் அன்புக் குழந்தைகளுக்கும், அணிந்துரை தந்த என் அன்புத் தமிழன்னை சுசீலாம்மா அவர்களுக்கும்,  நட்புரை தந்த  அன்புத் தோழி  ஃபாத்திமா பாபு அவர்களுக்கும்,  புத்தக அட்டைப்படம் வரைந்து தந்த ஜீவாநந்தன் அவர்களுக்கும், புத்தக வடிவமைப்பில் உதவிய செல்வகுமார் அவர்களுக்கும், புத்தகம் வெளியிடும் கரிசல் மீடியா மகேந்திரன் அவர்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகள்.ஒவ்வொரு பெண்ணின்  வாழ்விலும் எவ்வளவு போராட்டங்கள்.. அவ்வளவிலும் வீழ்ந்தெழுந்து.,  மண்ணில் முடக்கப்பட்ட விதைகள் வெடித்தெழுந்து விருட்சமாவது போல வெட்ட வெட்டவும் ஆல்போல் கிளைத்தெழுந்த பெண்களின் உண்மையான வெற்றிக் கதைகள் இவை.. சாதி்க்க வேண்டும் என்ற தூண்டுதலோடு இருக்கும் பெண்கள் சோர்வுறும் போதெல்லாம் இந்த ”சாதனை அரசி”களை படித்தால் சொல்வீர்கள்... ”ஆம் நாம் சாதாரண மனிதர்களல்ல..  சாதிக்கப் பிறந்தவர்கள். !!!”

# சகோ  ஃபக்ருதீன் இப்னு ஹம்தின் வாழ்த்து :)
Fakhrudeen Ibnu Hamdun நூலெழுதி நன்மை நிறைத்திவ் வுலகத்தே
தோளுயர்த்தி செல்க தொடர்ந்து.


வாழ்த்துகள். என்னுடைய நூல்களை ஆன்லைனில் வாங்க / கூரியர் போஸ்டில்  பெற டிஸ்கவரி புத்தக நிலையத்தின் இந்த இணைப்பைச் சொடுக்குங்கள். .

http://discoverybookpalac.com/products.php?product=%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D 

http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF

 என்னுடைய நூல்களை ஆன்லைனில் வாங்க / கூரியர் போஸ்டில்  பெற அகநாழிகை  புத்தக நிலையத்தின் இந்த இணைப்பைச் சொடுக்குங்கள். என்னுடைய கவிதைத் தொகுப்பு அன்ன பட்சி அகநாழிகையின் பெஸ்ட் செல்லரில் இடம்பெற்றுள்ளமை குறித்து மகிழ்ச்சி.

http://www.aganazhigaibookstore.com/

http://aganazhigaibookstore.com/index.php?route=product/product&product_id=1795

மேலும் எனது நூல்கள் இங்கும் கிடைக்கின்றன.

விஜயா பதிப்பகம் , கோவை.
மீனாக்ஷி புக் ஸ்டால் , மதுரை,
அபிநயா புக் செண்டர் , சேத்தியாதோப்பு,
வள்ளல் அழகப்பர் பதிப்பகம், காரைக்குடி,
வம்சி புத்தக நிலையம், திருவண்ணாமலை. 


7 கருத்துகள்:

 1. சாதனை அரசிக்கு வாழ்த்துகள் !

  பதிலளிநீக்கு
 2. சாதனை அரசிகள் தந்த சாதனை அரசிக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 3. வாழ்த்துகள்!

  சிறந்த பகிர்வு
  தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 4. சாதனை அரசியான அக்காவின் சாதனைகள் தொடர வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 5. நன்றி ரிஷபன்

  நன்றி கோமதி மேம்

  நன்றி யாழ்பாவண்ணன் சகோ

  நன்றி குமார் சகோ

  பதிலளிநீக்கு
 6. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு
 7. அபிநயா புத்தக நிலைய தொலைபேசி எண் என்ன?

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...